தீபாவளி விற்பனையில் வாடிக்கையாளர்கள் அதிகம் விரும்பும் 5 கார்கள்... ஹெக்டர் டூ ட்ரைபர்

ஆட்டோமொபைல் மார்கெட் சரிவை கண்டு வரும் இந்நேரத்திலும் சில நிறுவனங்களின் தயாரிப்புகள் மற்றவைகளை விட சிறந்தவையாக உள்ளன. அந்த வகையில் சிறந்த தயாரிப்பாக வாடிக்கையாளர்கள் பெரும்பாலோனோரின் வரவுள்ள தீபாவளி உள்ளிட்ட விழாகாலத்தில் தேவையாக உள்ள 5 கார்கள் பட்டியலிடப்பட்டுள்ளன.

தீபாவளி விற்பனையில் வாடிக்கையாளர்கள் அதிகம் விரும்பும் 5 கார்கள்... ஹெக்டர் டூ ட்ரைபர்

மாருதி சுசுகி எர்டிகா

மாருதி சுசுகி எர்டிகா கார் தொடர்ந்து இந்தியாவில் சிறந்த முறையில் விற்பனையாகி வரும் எம்பிவி காராக உள்ளது. இதன் 6,300 யூனிட்கள் கடந்த மாதத்தில் விற்பனை செய்யப்பட்டுள்ளது. மாருதியின் மற்றொரு வெற்றிகரமான மாடலாக உள்ள எக்ஸ்எல்6 விற்பனை எர்டிகாவின் விற்பனையை சற்று குறைத்துவிட்டது என்று தான் சொல்ல வேண்டும். கடந்த மாதத்தில் இந்த மாடல் காரினால் எர்டிகா கார் சுமார் 25 சதவீத விற்பனை வீழ்ச்சியை சந்தித்துள்ளது.

தீபாவளி விற்பனையில் வாடிக்கையாளர்கள் அதிகம் விரும்பும் 5 கார்கள்... ஹெக்டர் டூ ட்ரைபர்

இருந்த போதிலும் இந்த விழா காலத்திற்கு வாடிக்கையாளர்கள் விரும்பி வாங்க நினைக்கும் கார்களில் இந்த எர்டிகாவும் ஒன்றாக உள்ளது. எக்ஸ்ஷோரூம்களில் ரூ.7.55 லட்சத்திலிருந்து விற்கப்பட்டு வரும் இக்காரின் அதிகப்பட்ச விலையாக ரூ.11.21 லட்சம் நிர்ணயக்கப்பட்டுள்ளது. இதன் போட்டி மாடல்களாக முன்பே கூறப்பட்ட எக்ஸ்எல்6, மஹிந்திரா மராஸ்ஸோ மற்றும் ரெனால்ட் லாட்ஜி மாடல்கள் உள்ளன.

தீபாவளி விற்பனையில் வாடிக்கையாளர்கள் அதிகம் விரும்பும் 5 கார்கள்... ஹெக்டர் டூ ட்ரைபர்

ஹூண்டாய் வென்யூ

4 மீட்டர் எஸ்யூவி வகையில் ஹூண்டாய் நிறுவனத்தின் நம்பகத்தன்மையான காராக இருக்கும் வென்யூ, மாருதி சுசுகியின் விட்டாரா பிரெஸ்ஸா, டாடா நெக்ஸான், மஹிந்திரா எக்ஸ்யூவி300 மற்றும் ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் போன்ற கார்களுக்கு கடும் போட்டியை அளித்து வருகிறது. இதற்கெல்லாம் முக்கிய காரணம் இக்காரில் உள்ள நவீன தொழிற்நுட்பங்களும் இக்காரில் ஹூண்டாய் நிறுவனம் அளித்துள்ள முக்கியமான சிறப்பம்சங்களே ஆகும்.

தீபாவளி விற்பனையில் வாடிக்கையாளர்கள் அதிகம் விரும்பும் 5 கார்கள்... ஹெக்டர் டூ ட்ரைபர்

இதனாலேயே இந்த கார் எஸ்யூவி வகையில் சிறந்த மாடல் கார் என்ற பெயரை மாருதியின் விட்டாரா பிரெஸ்ஸா நிறுவனத்திடம் இருந்து பெற்றுள்ளது. மேலும் இதன் போட்டி கார்கள் அனைத்தையும் விட அதிக காத்திருப்பு காலத்தை கொண்ட காராக இந்த ஹூண்டாய் வென்யூ உள்ளது. இதன் விலை எக்ஸ்ஷோரூம்களில் ரூ.6.5 லட்சத்திலிருந்து ரூ.11.10 லட்சம் வரை நிர்ணயக்கப்பட்டுள்ளது.

தீபாவளி விற்பனையில் வாடிக்கையாளர்கள் அதிகம் விரும்பும் 5 கார்கள்... ஹெக்டர் டூ ட்ரைபர்

ரெனால்ட் ட்ரைபர்

4 மீட்டர் எம்விபி/ஹேட்ச்பேக் மாடலாக உள்ள ரெனால்ட் ட்ரைபர், அதிக உட்புற பரபரப்பை கொண்ட கார்களில் ஒன்று. 2019 ஆகஸ்ட்டில் வெளியான இந்த காருக்கு வாடிக்கையாளர்கள் மத்தியில் இருந்து நல்ல விதமான கருத்துகளே வந்த வண்ணம் உள்ளன.

தீபாவளி விற்பனையில் வாடிக்கையாளர்கள் அதிகம் விரும்பும் 5 கார்கள்... ஹெக்டர் டூ ட்ரைபர்

கடந்த மாத விற்பனையில் டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டாவை பின்னுக்கு தள்ளி இரண்டாவது சிறந்த முறையில் விற்பனையான எம்பிவி என பெயரெடுத்தது மட்டுமல்லாமல் 4,710 யூனிட்கள் விற்பனையையும் பதிவு செய்தது. ட்ரைபரின் காத்திருப்பு காலம் 3 மாதங்கள் என ரெனால்ட் நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த காத்திருப்பு காலம் வேரியண்ட்டை பொறுத்து மாறக்கூடும் எனவும் கூறியுள்ளது.

தீபாவளி விற்பனையில் வாடிக்கையாளர்கள் அதிகம் விரும்பும் 5 கார்கள்... ஹெக்டர் டூ ட்ரைபர்

ஏழு இருக்கைகளை கொண்ட இந்த காரின் விலை எக்ஸ்ஷோரூம்களில் ரூ.4.95 லட்சமாகவும் டாப் வேரியண்ட்டான ஆர்எக்ஸ்இசட்-ற்கு ரூ.6.49 லட்சமாகவும் நிர்ணயக்கப்பட்டுள்ளது. ட்ரைபருக்கு நேரடி போட்டி மாடல் கார்களாக டட்சம் கோ+ எம்பிவி இருந்தாலும் ஹூண்டாய் கிராண்ட் ஐ10 நியோஸ், மாருதி சுசுகி ஸ்விஃப்ட் மற்றும் ஃபோர்டு ஃபிகோ போன்ற ஹேட்ச்பேக்களுடனும் போட்டியிட்டு வருகிறது. இதன் ஆட்டோமேட்டிக் வேரியண்ட்டும் தயாரிப்பு பணியில் உள்ளதாக ரெனால்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது.

தீபாவளி விற்பனையில் வாடிக்கையாளர்கள் அதிகம் விரும்பும் 5 கார்கள்... ஹெக்டர் டூ ட்ரைபர்

கியா செல்டோஸ்

கொரிய கார் தயாரிப்பு நிறுவனமான கியா மோட்டார்ஸ், இந்திய சந்தையில் அறிமுகம் செய்த முதல் வாகனமான செல்டோஸ் எஸ்யூவிக்கு வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்ததினால் இம்மாடல் அறிமுகம் செய்யப்பட்ட 2018 ஆகஸ்ட் மாதத்தில் இருந்து தற்போது வரை 50,000 புக்கிங்கள் செய்யப்பட்டுள்ளன.

தீபாவளி விற்பனையில் வாடிக்கையாளர்கள் அதிகம் விரும்பும் 5 கார்கள்... ஹெக்டர் டூ ட்ரைபர்

டெக் லைன்(எச்டி லைன்) மற்றும் ஜிடி லைன் என இரு விதமான வகைகளில் கிடைக்கும் கியா செல்டோஸ் 16 வேரியண்ட்களை கொண்டுள்ளது. இதன் எச்டி லைனின் ஆரம்ப நிலை வேரியண்ட்டின் விலையான ரூ.9.69 லட்சத்திலிருந்து ஜிடி லைனின் டாப் வேரியண்ட்டின் விலையான ரூ.16.99 லட்சம் வரை கியா செல்டோஸ் எக்ஸ்ஷோரூம்களில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

தீபாவளி விற்பனையில் வாடிக்கையாளர்கள் அதிகம் விரும்பும் 5 கார்கள்... ஹெக்டர் டூ ட்ரைபர்

எம்ஜி ஹெக்டார்

பல முதல் தர சிறப்பம்சங்களுடன் வெளியான இந்த காருக்கு போட்டியாக இந்திய மார்கெட்டில் டாடா ஹாரியர், மஹிந்திரா எக்ஸ்யூவி500 மற்றும் ஜீப் காம்பஸ் போன்றவை இருந்தாலும் எம்ஜி ஹெக்டார், செங்குத்தாக அமைக்கப்பட்ட 10.4 இன்ச் தொடுத்திரை கொண்ட இன்போடெயின்மென்ட் அமைப்பு, பனோரமிக் சன்ரூஃப், 100க்கும் மேற்பட்ட வாய்ஸ் கமெண்ட்ஸ், 360 டிகிரி கேமிரா, முன்புற பார்கிங் சென்சார் என இத்தனை சிறப்பம்சங்களுடன் தனித்தன்மையுடன் விளங்குகிறது.

தீபாவளி விற்பனையில் வாடிக்கையாளர்கள் அதிகம் விரும்பும் 5 கார்கள்... ஹெக்டர் டூ ட்ரைபர்

இதன் விலை எக்ஸ்ஷோரூம்களில் ரூ.12.18 லட்சத்திலிருந்து ரூ.16.88 லட்சம் வரை விற்கப்படுகிறது. இந்தியாவில் முதன்மை விற்பனை மிட்-சைஸ் எஸ்யூவியாக இருக்கும் இந்த காருக்கு நான்கு மாதங்கள் வரைக்கும் காத்திருப்பு காலத்தை வரையறுத்துள்ளது, எம்ஜி மோட்டார்ஸ் நிறுவனம்.

Most Read Articles
மேலும்... #sales
English summary
5 Cars With High Demand This Festive Season – Hector To Triber
Story first published: Saturday, October 12, 2019, 16:56 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X