இந்தியாவில் பாதுகாப்பான பயணத்தை வழங்கும் டாப் 5 கார்கள்: விலை மற்றும் சிறப்பு தகவல்கள்...!

உங்களது பயணத்தை பாதுகாப்பானதாகவும், சிறப்பானதாகவும் அளிக்கும் வகையில் இந்தியாவில் விற்பனையாகும் டாப் ஐந்து கார்கள் குறித்த தகவலை இந்த பதிவில் காணலாம்.

இந்தியாவில் பாதுகாப்பான பயணத்தை வழங்கும் டாப் 5 கார்கள்: விலை மற்றும் சிறப்பு தகவல்கள்...!

பயணம்... இந்த வார்த்தையை கூறும்போதே நம்மில் பலருக்கு இனம் புரியாத ஆனந்தம் ஏற்படும். அதேசமயம் குடும்பத்துடன் பயணிப்பது என்பது அலாதியான சந்தோஷத்தை ஏற்படுத்தும். இத்தகைய பயணத்தை வெறுப்பவர்கள் இந்த உலகில் யாரேனும் இருந்தால் அவர்கள் வேடிக்கையான மனிதர்களாகதான் பார்க்கப்படுவார்கள். ஏனென்றால், பயணம் என்பது மன நிம்மதி, சந்தோஷம் உள்ளிட்டவையை அளிக்கும் இயற்கையின் வரபிரசாதம் இருக்கின்றது.

இந்தியாவில் பாதுகாப்பான பயணத்தை வழங்கும் டாப் 5 கார்கள்: விலை மற்றும் சிறப்பு தகவல்கள்...!

நாம் ஒவ்வொரு முறையும் சுற்றுலா செல்லும்போது பஸ்ஸிலோ அல்லது காரிலோ பயணிப்பது வழக்கம். பெரும்பாலான பயணிகள் சுற்றுலா செல்வதற்கு காரைதான் பயன்படுத்தி வருகின்றனர். இது நாம் விரும்பிய இடத்தில் இறங்கிச் சுற்றுப்பார்க்க உதவும் என்பதால், காரில் பயணிப்பதையே பலர் விரும்புகின்றனர். அவ்வாறு, நாம் பயன்படுத்தும் கார்கள் எந்த அளவிற்கு நம் பயணத்தை பாதுகாப்பாக மேற்கொள்ள உதவுகிறது என பார்த்தால், நம்மிடம் கேள்வியே மிஞ்சும்.

இந்தியாவில் பாதுகாப்பான பயணத்தை வழங்கும் டாப் 5 கார்கள்: விலை மற்றும் சிறப்பு தகவல்கள்...!

ஆகையால் நாம் கார் வாங்கும்போது, அந்த கார் எந்த அளவிற்கு பாதுகாப்பு அம்சங்களைக் கொண்டிருக்கிறது என்று பார்த்து வாங்கவேண்டும். அவ்வாறு, குளோபல் என்சிஏபி என்ற அமைப்பு விற்பனைக்கு வரும் அனைத்து கார்களையும் கிராஷ் டெஸ்ட் செய்து, அதுகுறித்த தகவலை வெளியிட்டு வருகிறது. இந்த தகவலின் அடிப்படையில், இந்தியாவில் விற்பனையாகும் பாதுகாப்பு நிறைந்த ஐந்து கார்கள் குறித்த தகவலை இந்த பதிவில் காணலாம்.

இந்தியாவில் பாதுகாப்பான பயணத்தை வழங்கும் டாப் 5 கார்கள்: விலை மற்றும் சிறப்பு தகவல்கள்...!

மாருதி சுஸுகி விட்டாரா பிரெஸ்ஸா:

மாருதி சுஸுகி விட்டாரா பிரெஸ்ஸா மாடல் கார், பாதுகாப்பு குறித்த கிராஷ் டெஸ்டில் நான்கு ஸ்டார்கள் ரேட்டிங்கைப் பெற்றுள்ளது. அந்த வகையில், இந்த கார் 17 புள்ளிகளுக்கு 12.51 புள்ளிகளைப் பெற்று அசத்தியுள்ளது. இது, பெரியவர்களின் பாதுகாப்பில் 49-ற்கு 17.93 புள்ளிகளையும், குழந்தைகளின் பாதுகாப்பில் 2 ஸ்டார் ரேட்டிங்கையும் பெற்றுள்ளது.

இந்தியாவில் பாதுகாப்பான பயணத்தை வழங்கும் டாப் 5 கார்கள்: விலை மற்றும் சிறப்பு தகவல்கள்...!

மேலும், இந்த காரில் பாதுகாப்பு வசதிகளாக முன்பக்கத்தில் இரண்டு ஏர் பேக்குகளும், இபிடி உடன் கூடிய ஏபிஎஸ் பிரேக்கிங் வசதியும் இணைக்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து, சீல்ட் பெல்ட் ரிமைண்டர் மற்றும் சைல்ட் ஐசோபிக்ஸ் சீட் ஆகியவை இதில் இணைக்கப்பட்டுள்ளன. இது ரூ. 7.52 லட்சம் என்ற எக்ஸ்-ஷோரூம் விலையில் விற்பனைக்கு கிடைக்கிறது.

இந்தியாவில் பாதுகாப்பான பயணத்தை வழங்கும் டாப் 5 கார்கள்: விலை மற்றும் சிறப்பு தகவல்கள்...!

மஹிந்திரா மராஸ்ஸோ:

மஹிந்திரா மராஸ்ஸோ கார் பெரியவர்களுக்கான பாதுகாப்பு அம்சத்தில் அதிகபட்சமான 17 புள்ளிகளுக்கு 12.85 புள்ளிகளை பெற்றது.சிறியவர்களுக்கான பாதுகாப்பில் அதிகபட்சமான 40 புள்ளிகளுக்கு 22.22 புள்ளிகளை பெற்றுள்ளது.

MOST READ: டிசி கைவண்ணத்தில் சொகுசு கார் போல மாறிய மஹிந்திரா மராஸ்ஸோ!

இந்தியாவில் பாதுகாப்பான பயணத்தை வழங்கும் டாப் 5 கார்கள்: விலை மற்றும் சிறப்பு தகவல்கள்...!

இதன்படி, பெரியவர்களுக்கான பாதுகாப்பு தரத்தில் 4 ஸ்டார் ரேட்டிங்கும், சிறியவர்களுக்கான பாதுகாப்பு தரத்தில் 2 ஸ்டார் ரேட்டிங்கையும் பெற்றிருக்கிறது. இந்த காரில் இரண்டு ஏர்பேக்குகள், ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், சீட் பெல்ட் ரிமைன்டர் உள்ளிட்ட பாதுகாப்பு வசதிகள் உள்ளன. இந்த கார் சென்னையில், ரூ.9.99 லட்சம் என்ற ஆன்ரோட் ஆரம்ப விலையில் விற்பனையாகி வருகிறது.

இந்தியாவில் பாதுகாப்பான பயணத்தை வழங்கும் டாப் 5 கார்கள்: விலை மற்றும் சிறப்பு தகவல்கள்...!

டொயோட்டா எட்டியோஸ் லிவா:

டொயோட்டா எட்டியோஸ் காரை என்சிஏபி அமைப்பு கடந்த 2016ம் ஆண்டு கிராஷ் டெஸ்ட் செய்தது. அதில், எட்டியோஸ் லிவா கார்கள் 4 ஸ்டார் ரேட்டிங் பெற்று அசத்தியது. அவ்வாறு, இந்த கார் 16 புள்ளிகளுக்கு 13 புள்ளிகளைப் பெற்றது. மேலும், மலிவான விலையில் கிடைக்கும் இந்த காரில் ட்யூவல் ஏர் பேக்ஸ், இபிடி-யுடன் கூடிய ஏபிஎஸ் பிரேக்கிங் வசதி மற்றும் ஐசோபிக்ஸ் சைல்ட் சீட் ஆகியவைக் கொடுக்கப்பட்டுள்ளன. இந்த கார் ரூ. 5.63 லட்சம் என்ற ஆன்ரோட் விலையில் சென்னையில் விற்பனையாகி வருகிறது.

இந்தியாவில் பாதுகாப்பான பயணத்தை வழங்கும் டாப் 5 கார்கள்: விலை மற்றும் சிறப்பு தகவல்கள்...!

ஃபோக்ஸ்வேகன் போலோ:

இந்தியாவில் மிகவும் பிரபலமான காராக இந்த போலோ உள்ளது. இந்த காரை கிராஷ் டெஸ்டில் உடன்படுத்திய போது 4 ஸ்டார் ரேட்டிங்கைப் பெற்று அசத்தியுள்ளது. ஆனால், இந்த காரை அதற்கு முன்னதாக கிராஷ் டெஸ்ட் செய்தபோது, 0 ஸ்டாரைத்தான் பெற்றது. இதைத்தொடர்ந்து, செய்யப்பட்ட சில மாற்றங்களை அடுத்து தான் இந்த மதிப்பை போலோ கார் போலோ பெற்றுள்ளது. இந்த கார் சென்னையில், ரூ.5.72 லட்சம் என்ற ஆன்ரோட் ஆரம்ப விலையில் விற்பனையாகி வருகிறது.

இந்தியாவில் பாதுகாப்பான பயணத்தை வழங்கும் டாப் 5 கார்கள்: விலை மற்றும் சிறப்பு தகவல்கள்...!

டாடா நெக்ஸான்:

நாட்டின் முக்கிய வாகன தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான டாடா, நெக்ஸான் என்ற எஸ்யூவி மாடல் காரை விற்பனைச் செய்து வருகிறது. இந்த நெக்ஸான் காரின் பாதுகாப்பினை உறுதி செய்யும் வகையில் என்சிஏபி என்னும் அமைப்பு கிராஷ் டெஸ்ட் செய்து பார்த்தது. இந்த சோதனையில், நெக்ஸான் கார் ஐந்திற்கு 5 என்ற பாதுகாப்பு ரேட்டினைப் பெற்று அசத்தியது.

MOST READ: அதிரடி வேட்டையைத் தொடங்கிய போலீஸ்: இதுவரை 15பேர் கைது: எதற்கு தெரியுமா...? வீடியோ!

இந்தியாவில் பாதுகாப்பான பயணத்தை வழங்கும் டாப் 5 கார்கள்: விலை மற்றும் சிறப்பு தகவல்கள்...!

அவ்வாறு, இந்த கிராஷ் டெஸ்டில் 17 புள்ளிகளுக்கு 16.06 என்ற புள்ளிகளை எடுத்து நெக்ஸான் கார் 5 ஸ்டார் ரேட்டிங்கை பெற்றுள்ளது. இதற்கு முன்பாக நடத்தப்பட்ட சோதனையில் 13.56 புள்ளிகளை மட்டுமே இது பெற்றிருந்தது. ஆகையால் தற்போது பெற்றிருக்கும் இந்த ரேட்டிங் டாடா நிறுவனத்தின் மைல் கல்லாக தான் பார்க்கப்படுகிறது. மேலும், டாடாவின் இந்த சாதனைக்கு பல்வேறு நிறுவனங்கள் வாழ்த்து தெரிவித்தன.

இந்தியாவில் பாதுகாப்பான பயணத்தை வழங்கும் டாப் 5 கார்கள்: விலை மற்றும் சிறப்பு தகவல்கள்...!

ஆகையால், இதுபோன்ற பாதுகாப்பினைக் காரினை வாங்கினால், உங்கள் பயணத்தின் பாதுகாப்பு உறுதிப்படுத்துவதுடன், உங்களை நம்பி பயணிப்பவரின் பாதுகாப்பும் உறுதிப்படுத்தப்படும். இந்த கார் ரூ. 6.53 லட்சம் என்ற ஆன்ரோட் விலையில் சென்னையில் விற்பனையாகி வருகிறது.

Most Read Articles

மேலும்... #off beat #ஆஃப் பீட்
English summary
Top 5 Safest Cars in India. Read In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X