இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் கார்கள் இவைதான்... இதில் ஆச்சரியமான விஷயம் என்ன தெரியுமா?

இந்தியாவில் கடந்த அக்டோபர் மாதம் அதிகம் விற்பனையான கார்கள் குறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

அக்டோபர் மாதம் அதிகம் விற்பனையான டாப்-10 கார்கள்... மாருதி சுஸுகி ஆதிக்கம் தொடர்கிறது...

இந்தியாவில் கடந்த அக்டோபர் மாதம் அதிகம் விற்பனையான டாப்-10 கார்களின் பட்டியல் வெளியாகியுள்ளது. இதில், இந்தியாவின் நம்பர்-1 கார் உற்பத்தி நிறுவனமான மாருதி சுஸுகியின் ஆதிக்கம் தொடர்கிறது. அந்நிறுவனத்தின் பிரபலமான மாடலான டிசையர் காம்பேக்ட் செடான் இந்த பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளது.

அக்டோபர் மாதம் அதிகம் விற்பனையான டாப்-10 கார்கள்... மாருதி சுஸுகி ஆதிக்கம் தொடர்கிறது...

2019ம் ஆண்டு அக்டோபர் மாதம் இந்தியாவில் அதிகம் விற்பனையான கார் மாருதி சுஸுகி டிசையர்தான். மாருதி சுஸுகி நிறுவனத்தின் ஸ்விப்ட் மற்றும் ஆல்டோ ஆகிய கார்களை வீழ்த்தி, டிசையர் முதலிடத்தை பிடித்துள்ளது. மாருதி சுஸுகி கடந்த மாதம் 19,569 டிசையர் கார்களை விற்பனை செய்துள்ளது. மாருதி சுஸுகி நிறுவனத்திற்கு டிசையர் சிறப்பான விற்பனை எண்ணிக்கையை கொண்டு வந்து சேர்த்துள்ளது.

அக்டோபர் மாதம் அதிகம் விற்பனையான டாப்-10 கார்கள்... மாருதி சுஸுகி ஆதிக்கம் தொடர்கிறது...

இந்த பட்டியலில் 2வது இடம் பிடித்திருக்கும் கார் மாருதி சுஸுகி ஸ்விப்ட். தற்போது மூன்றாவது தலைமுறை மாடலில் உள்ள மாருதி சுஸுகி ஸ்விப்ட் காரின் கடந்த அக்டோபர் மாத விற்பனை எண்ணிக்கை 19,401. பிரபலமான ஆல்டோவை வீழ்த்தி, இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் ஹேட்ச்பேக் என்ற பெருமையை தற்போது ஸ்விப்ட் பெற்றுள்ளது.

அக்டோபர் மாதம் அதிகம் விற்பனையான டாப்-10 கார்கள்... மாருதி சுஸுகி ஆதிக்கம் தொடர்கிறது...

இந்த பட்டியலில் மாருதி சுஸுகி ஆல்டோ மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது. 800 சிசி மற்றும் 998 சிசி வேரியண்ட்களில் கிடைக்கும் மாருதி சுஸுகி ஆல்டோ கடந்த மாதம் 17,903 என்ற விற்பனை எண்ணிக்கையை பதிவு செய்துள்ளது. விரைவில் அமலுக்கு வரவுள்ள பிஎஸ்-6 விதிமுறைகளுக்கு ஏற்ப மாருதி சுஸுகி ஆல்டோ கே10 காரின் இன்ஜின் விரைவில் அப்டேட் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அக்டோபர் மாதம் அதிகம் விற்பனையான டாப்-10 கார்கள்... மாருதி சுஸுகி ஆதிக்கம் தொடர்கிறது...

இந்த பட்டியலில் நான்காவது இடத்தை பிடித்திருக்கும் கார் மாருதி சுஸுகி நிறுவனத்தின் பிரீமியம் ஹேட்ச்பேக் காரானா பலேனோ. கடந்த மாதம் 16,237 மாருதி சுஸுகி பலேனோ கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இதன் மூலம் பிரீமியம் ஹேட்ச்பேக் செக்மெண்ட்டில் மாருதி சுஸுகி பலேனோவின் ஆதிக்கம் தொடர்கிறது.

அக்டோபர் மாதம் அதிகம் விற்பனையான டாப்-10 கார்கள்... மாருதி சுஸுகி ஆதிக்கம் தொடர்கிறது...

இந்த பட்டியலில் ஹூண்டாய் எலைட் ஐ20 ஐந்தாவது இடத்தை பிடித்துள்ளது. இந்தியாவில் ஹூண்டாய் எலைட் ஐ20 ஹேட்ச்பேக் காரின் மாதாந்திர விற்பனை மேம்பட்டுள்ளது. கடந்த மாதம் 14,683 எலைட் ஐ20 கார்களை ஹூண்டாய் நிறுவனம் விற்பனை செய்துள்ளது. இதன் மூலம் இந்தியாவில் சிறப்பாக விற்பனையாகும் ஹூண்டாய் மாடல் என்ற பெருமையை எலைட் ஐ20 பெறுகிறது.

அக்டோபர் மாதம் அதிகம் விற்பனையான டாப்-10 கார்கள்... மாருதி சுஸுகி ஆதிக்கம் தொடர்கிறது...

பிரபலமான டால்பாயான மாருதி சுஸுகி வேகன் ஆர் இந்த பட்டியலில் 6வது இடத்தை தன்வசப்படுத்தியுள்ளது. கடந்த அக்டோபர் மாதத்தில் மாருதி சுஸுகி நிறுவனம் 14,359 வேகன் ஆர் கார்களை விற்பனை செய்துள்ளது. கடந்த அக்டோபர் மாதம் இந்தியாவில் அதிகம் விற்பனையான கார்களின் பட்டியலில் தற்போது வரை மாருதி சுஸுகி, ஹூண்டாய் கார்கள்தான் ஆதிக்கம் செலுத்தி வந்தன.

அக்டோபர் மாதம் அதிகம் விற்பனையான டாப்-10 கார்கள்... மாருதி சுஸுகி ஆதிக்கம் தொடர்கிறது...

எனினும் ஏழாவது இடத்தை பிடித்துள்ளதன் மூலமாக கியா செல்டோஸ் இந்த டிரெண்ட்டை முடிவுக்கு கொண்டு வந்துள்ளது. கியா நிறுவனம் 12,850 செல்டோஸ் கார்களை விற்பனை செய்துள்ளது. இதன் மூலம் இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் எஸ்யூவி கார் என்ற பெருமையை கியா செல்டோஸ் தன்வசப்படுத்தியுள்ளது.

அக்டோபர் மாதம் அதிகம் விற்பனையான டாப்-10 கார்கள்... மாருதி சுஸுகி ஆதிக்கம் தொடர்கிறது...

போட்டி நிறைந்த மிட்-சைஸ் எஸ்யூவி செக்மெண்ட்டில் நிலை நிறுத்தப்பட்டுள்ள கியா செல்டோஸ் கார், மாருதி சுஸுகி நிறுவனத்தின் விட்டாரா பிரெஸ்ஸாவையும் ஓவர்டேக் செய்துள்ளது. அதே சமயம் சமீபத்தில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட மாருதி சுஸுகி எஸ்-பிரெஸ்ஸோ கார் இந்த பட்டியலில் எட்டாவது இடத்தை பிடித்துள்ளது.

அக்டோபர் மாதம் அதிகம் விற்பனையான டாப்-10 கார்கள்... மாருதி சுஸுகி ஆதிக்கம் தொடர்கிறது...

10,634 எஸ்-பிரெஸ்ஸோ கார்களை மாருதி சுஸுகி நிறுவனம் விற்பனை செய்துள்ளது. இதில், ஆச்சரியப்பட வேண்டிய விஷயம் என்னவென்றால் மாருதி சுஸுகி விட்டாரா பிரெஸ்ஸாவையும் எஸ்-பிரெஸ்ஸோ ஓவர்டேக் செய்துள்ளது. இந்த பட்டியலில் மாருதி சுஸுகி விட்டாரா பிரெஸ்ஸா ஒன்பதாவது இடத்தை மட்டுமே பிடித்துள்ளது.

அக்டோபர் மாதம் அதிகம் விற்பனையான டாப்-10 கார்கள்... மாருதி சுஸுகி ஆதிக்கம் தொடர்கிறது...

மாருதி சுஸுகி விட்டாரா பிரெஸ்ஸா நீண்ட காலமாக இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் எஸ்யூவி காராக இருந்து வந்தது. ஆனால் ஹூண்டாய் வெனியூ மற்றும் கியா செல்டோஸ் கார்களிடம் இருந்து வந்துள்ள சமீபத்திய போட்டி காரணமாக மாருதி சுஸுகி விட்டாரா பிரெஸ்ஸா தடுமாற தொடங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Rank Model Units
1 Maruti Dzire 19,569
2 Maruti Swift 19,401
3 Maruti Alto 17,903
4 Maruti Baleno 16,237
5 Hyundai i20 14,683
6 Maruti Wagonr 14,359
7 Kia Seltos 12,854
8 Maruti S-Presso 10,634
9 Maruti Brezza 10,227
10 Maruti Eeco 10,011
அக்டோபர் மாதம் அதிகம் விற்பனையான டாப்-10 கார்கள்... மாருதி சுஸுகி ஆதிக்கம் தொடர்கிறது...

கடந்த அக்டோபர் மாதம் 10,227 பிரெஸ்ஸா கார்களை மட்டுமே மாருதி சுஸுகி நிறுவனத்தால் விற்பனை செய்ய முடிந்துள்ளது. இந்த பட்டியலில் 10வது மற்றும் கடைசி இடத்தை மற்றொரு மாருதி சுஸுகி நிறுவனத்தின் தயாரிப்பே பிடித்துள்ளது. அது ஈக்கோ. கடந்த மாதம் 10,011 ஈக்கோ கார்களை மாருதி சுஸுகி நிறுவனம் விற்பனை செய்துள்ளது.

Most Read Articles
English summary
Top-Selling Cars In India For October 2019. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X