இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் கார்கள் இவைதான்... மாருதி சுஸுகி ஆதிக்கம் தொடர்கிறது...

இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் டாப்-10 கார்களின் பட்டியலில், மாருதி சுஸுகி நிறுவனத்தின் ஆதிக்கம் தொடர்கிறது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் கார்கள் இவைதான்... மாருதி சுஸுகி ஆதிக்கம் தொடர்கிறது...

இந்தியாவில் கடந்த 2019ம் ஆண்டு மே மாதம் அதிகம் விற்பனை செய்யப்பட்ட டாப்-10 கார்களின் பட்டியல் தற்போது வெளியாகியுள்ளது. விற்பனையில் சரிவை சந்தித்தாலும் கூட, இந்த பட்டியலில் வழக்கம் போல மாருதி சுஸுகி நிறுவனம்தான் ஆதிக்கம் செலுத்தியுள்ளது.

இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் கார்கள் இவைதான்... மாருதி சுஸுகி ஆதிக்கம் தொடர்கிறது...

இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் கார்களின் பட்டியலில் மாருதி சுஸுகி ஆல்டோதான் முதல் இடத்தில் தொடர்ந்து இருந்து வந்தது. ஆனால் தற்போது அதனை மாருதி சுஸுகி ஸ்விப்ட் ஓவர்டேக் செய்து முதல் இடத்தை தன்வசப்படுத்தியுள்ளது.

இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் கார்கள் இவைதான்... மாருதி சுஸுகி ஆதிக்கம் தொடர்கிறது...

2019ம் ஆண்டு மே மாதம் இந்தியாவில் அதிகம் விற்பனை செய்யப்பட்ட டாப்-10 கார்களின் பட்டியலை நீங்கள் கீழே காணலாம்.

Rank Model May 2019 Sales
1 Maruti Swift 17,039
2 Maruti Alto 16,394
3 Maruti Dzire 16,196
4 Maruti Baleno 15,176
5 Maruti Wagon R 14,561
6 Maruti Eeco 11,739
7 Hyundai Creta 9,054
8 Hyundai i20 8,958
9 Maruti Ertiga 8,864
10 Maruti Vitara Brezza 8,781
இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் கார்கள் இவைதான்... மாருதி சுஸுகி ஆதிக்கம் தொடர்கிறது...

இந்தியாவில் 2019ம் ஆண்டு மே மாதம் அதிகம் விற்பனையான டாப்-10 கார்களின் பட்டியலில் தனது உடன் பிறப்பாக ஆல்டோவை வீழ்த்தி, முதல் இடத்திற்கு முன்னேறியுள்ளது மாருதி சுஸுகி ஸ்விப்ட். கடந்த மாதம் விற்பனை செய்யப்பட்ட மூன்றாவது தலைமுறை ஸ்விப்ட் ஹேட்ச்பேக் கார்களின் எண்ணிக்கை 17,039.

இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் கார்கள் இவைதான்... மாருதி சுஸுகி ஆதிக்கம் தொடர்கிறது...

இரண்டாவது மற்றும் மூன்றாவது இடங்களை முறையே புதிதாக லான்ச் செய்யப்பட்ட ஆல்டோ மற்றும் டிசையர் ஆகிய கார்கள் பிடித்துள்ளன. ஆனால் கடந்த மே மாதத்தில், புதிய ஆல்டோ காரின் விற்பனை 25 சதவீதமும், டிசையர் காரின் விற்பனை 34 சதவீதமும் சரிவடைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் கார்கள் இவைதான்... மாருதி சுஸுகி ஆதிக்கம் தொடர்கிறது...

நான்காவது இடத்தை மாருதி சுஸுகி பலேனோ பிடித்துள்ளது. ஐந்தாவது இடத்தை புதிய மாருதி வேகன் ஆர் பிடித்துள்ளது. மொத்தம் 14,561 வேகன் ஆர் கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. ஆனால் இது 9 சதவீத சரிவு என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் கார்கள் இவைதான்... மாருதி சுஸுகி ஆதிக்கம் தொடர்கிறது...

இந்திய மார்க்கெட்டில் இருந்து ஆம்னியை விலக்கும் முடிவை மாருதி சுஸுகி நிறுவனம் எடுத்திருப்பது, ஈக்கோவின் விற்பனையை மேம்படுத்த உதவியுள்ளது. மாருதி சுஸுகி நிறுவனத்தின் ஒரே ஒரு வேன் மாடலான ஈக்கோ, 6வது இடத்தை பிடித்துள்ளது. மொத்தம் 11,739 ஈக்கோ வேன்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் கார்கள் இவைதான்... மாருதி சுஸுகி ஆதிக்கம் தொடர்கிறது...

இந்தியாவின் எஸ்யூவி மார்க்கெட்டில் ஹூண்டாய் கிரெட்டாவின் ஆதிக்கம் தொடர்கிறது. இந்த பட்டியலில் ஹூண்டாய் கிரெட்டா 7வது இடத்தை பிடித்துள்ளது. மொத்தம் 9,054 கிரெட்டா எஸ்யூவிக்களை ஹூண்டாய் விற்பனை செய்துள்ளது. இதற்கு அடுத்த இடத்தை ஹூண்டாய் எலைட் ஐ20 பீரிமியம் ஹேட்ச்பேக் பிடித்துள்ளது. 8,958 எலைட் ஐ20 கார்களை ஹூண்டாய் விற்பனை செய்துள்ளது. கடைசி இரு இடங்களை முறையே மாருதி சுஸுகி எர்டிகா எம்பிவி மற்றும் மாருதி சுஸுகி விட்டாரா பிரெஸ்ஸா எஸ்யூவி ஆகிய கார்கள் பிடித்துள்ளன.

Most Read Articles
English summary
Top-Selling Cars In India For May 2019 — Internal Battle In Maruti For Top-Slot; Swift Leads The Way. Read in Tamil
Story first published: Friday, June 7, 2019, 20:38 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X