மார்ச் விற்பனையில் டாப் 10 கார்கள்... 8 இடங்களை பிடித்து மாருதி அசத்தல்!

நிதி ஆண்டு முடிவடையும் மார்ச் மாதத்தில் கார் நிறுவனங்கள் அதிகபட்ச விற்பனையை பதிவு செய்வதற்கு போட்டி போடும். எனினும், இந்த ஆண்டு பொதுத் தேர்தல் நடப்பதையொட்டி, கார் விற்பனையில் சிறிய சுணக்கம் ஏற்பட்டது. எனினும், மாருதி 8 இடங்களை கைப்பற்றி பிற நிறுவனங்களை மிரள வைத்துள்ளது. அதன் விபரங்களை காணலாம்.

மார்ச் விற்பனையில் இந்தியாவின் டாப் - 10 கார்கள்!

பொதுவாக மாருதி ஆல்ட்டோ கார்தான் முதலிடத்தை பிடிக்கும். கடந்த பிப்ரவரி மாதம் 24,751 ஆல்ட்டோ கார்கள் விற்பனையாகி இருந்த நிலையில், கடந்த மாதம் 16,826 கார்கள்தான் விற்பனையாகி இருக்கிறது. புதிய தலைமுறை மாடல் விரைவில் வரும் என்று தகவல்கள் கூறும் நிலையில், ஆல்ட்டோ காரின் விற்பனை குறையத் தொடங்கி இருப்பதாக கருதப்படுகிறது.

ஆனால், நம்பர்-1 இடத்தை மாருதி ஆல்ட்டோ காரிடமிருந்து அதன் பங்காளியான மாருதி டிசையர் பெற்றது. கடந்த மாதம் 19,935 டிசையர் கார்கள் விற்பனையாகி இருக்கிறது. பல ஆண்டுகளாக காம்பேக்ட் செடான் கார் மார்க்கெட்டில் டிசையர்தான் நம்பர்-1 ஆக இருக்கிறது. டிசையர் இடத்தை குறிவைத்து பல புதிய மாடல்கள் தொடர்ந்து வந்தாலும், அசைக்க முடியாத சந்தையை பெற்றுவிட்டது.

மார்ச் விற்பனையில் இந்தியாவின் டாப் - 10 கார்கள்!

இரண்டாவது இடத்தை மாருதியின் மற்றொரு தயாரிப்பான பலேனோ கார் பெற்றுள்ளது. கடந்த மாதத்தில் 17,264 பலேனோ கார்கள் விற்பனையாகி இருக்கின்றன. மாருதியின் நெக்ஸா ஷோரூம்கள் வாயிலாக பலேனோ கார் விற்பனை செய்யப்படுகிறது. அடுத்த இடத்தில் புதிய தலைமுறை மாருதி வேகன் ஆர் கார் பெற்றுள்ளது. கடந்த மாதத்தில் 16,152 வேகன் ஆர் கார்கள் விற்பனையாகி புதிய உச்சத்தை தொட்டது.

டாப் பட்டியலில் 5வது இடத்தை மாருதி ஸ்விஃப்ட் பெற்றுள்ளது. கடந்த மாதம் 14,218 ஸ்விஃப்ட் கார்கள் விற்பனையாகி உள்ளது. அடுத்த இடத்தில் மாருதி விட்டாரா பிரெஸ்ஸா எஸ்யூவி உள்ளது. மொத்தம் 14,181 பிரெஸ்ஸா எஸ்யூவிகள் விற்பனையாகி உள்ளது.

மார்ச் விற்பனையில் இந்தியாவின் டாப் - 10 கார்கள்!

டாப் 10 பட்டியில் முதல் 6 இடங்களை மாருதி பிடித்த நிலையில், 7வது இடத்தையே ஹூண்டாய் நிறுவனத்தின் எலைட் ஐ10 கார் பெற்றுள்ளது. கடந்த மாதத்தில் 12,172 எலைட் ஐ20 கார்கள் பிடித்துள்ளன. 8வது இடத்தில் மாருதி செலிரியோ கார் உள்ளது. மொத்தம் 11,807 செலிரியோ கார்கள் விற்பனையாகி இருக்கிறது.

மார்ச் விற்பனையில் இந்தியாவின் டாப் - 10 கார்கள்!

டாப் 10 பட்டியலில் 9வது இடத்தை ஹூண்டாய் க்ரெட்டா எஸ்யூவி பிடித்தது. கடந்த மாதத்தில் 11,448 கார்கள் விற்பனையாகி உள்ளன. டாப் 10 பட்டியலில் கடைசி இடத்தில் மாருதி ஈக்கோ கார் பிடித்தது. கடந்த மாதத்தில் 9,893 ஈக்கோ கார் பிடித்தது.

மார்ச் விற்பனையில் இந்தியாவின் டாப் - 10 கார்கள்!

மொத்தத்தில் டாப் -10 பட்டியலில் மாருதியும், ஹூண்டாயும் ஆக்கிரமித்துள்ளன. பிற நிறுவனங்கள் டாப் 10 பட்டியலை நினைத்துக் கூட பார்க்க முடியாத அளவுக்கு இந்த இரு நிறுவனங்களின் தயாரிப்புகளின் விற்பனை எண்ணிக்கை உள்ளது. மாருதி மீதான நம்பகத்தன்மை, அதிக சர்வீஸ் நெட்வொர்க் முக்கிய காரணங்களாக இருக்கின்றன. அதேபோன்று, பட்ஜெட் விலையில் சிறந்த டிசைன் மற்றும் வசதிகளுடன் ஹூண்டாய் கார்கள் இந்தியர்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்றிருக்கின்றன.

Most Read Articles
English summary
According to the table we can see that the Maruti Dzire compact sedan has taken the top-slot in March 2019, followed by the Baleno hatchback. Also check out the how each brand performed in the Indian market, during the month of March 2019
Story first published: Sunday, April 7, 2019, 11:26 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X