எம்பிவி விற்பனையில் மீண்டும் தொடரும் மாருதி எர்டிகாவின் ஆதிக்கம்...

2019 அக்டோபர் மாதத்தில் அதிகளவில் விற்பனையான டாப்-10 எம்பிவி கார்களின் லிஸ்ட் வெளியாகியுள்ளது. இதில் வழக்கம் போல அனைத்து கார்களையும் விற்பனையில் முந்திக்கொண்டு மாருதி எர்டிகா மாடல் கார் முதலிடத்தை பிடித்துள்ளது.

எம்பிவி விற்பனையில் மீண்டும் தொடரும் மாருதி எர்டிகாவின் ஆதிக்கம்...

இந்திய மார்கெட்டில் பிரபலமான எம்பிவி மாடல்களுள் ஒன்றாக இருக்கும் எர்டிகாவை இந்த வருடத்தின் துவக்கத்தில் தான் மாருதி சுசுகி நிறுவனம் அடுத்த தலைமுறைக்கு அப்டேட் செய்திருந்தது. இதனால் இன்னும் அதிகமாக கவரும் தோற்றத்திற்கு மாறியுள்ள எர்டிகா கார் கடந்த மாதத்தில் 7,197 யூனிட்கள் விற்பனையாகியுள்ளன.

இது கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தை விட சுமார் 419 சதவீதம் அதிகமாகும். கடந்த ஆண்டு இதே மாதத்தில் வெறும் 1,387 எர்டிகா கார்கள் தான் விற்பனையாகி இருந்தன. ஏற்கனவே கூறியது போல, இதன் இரண்டாம் தலைமுறை 2019ன் துவக்கத்தில் வெளியிடப்பட்டதால் இதற்கு முன்னதாக இந்த காரின் விற்பனையை மாருதி நிறுவனம் சில காலம் நிறுத்தி வைத்திருக்கலாம் ஆதலால் கூட கடந்த ஆண்டில் இத்தகைய வீழ்ச்சி ஏற்பட்டிருக்க கூடும்.

எம்பிவி விற்பனையில் மீண்டும் தொடரும் மாருதி எர்டிகாவின் ஆதிக்கம்...

இந்த டாப்-10 லிஸ்ட்டில் இரண்டாவது இடத்தில் உள்ள கார் மஹிந்திரா பொலிரோ. இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்ட முதல் எம்யூவி காராக விளங்கும் பொலிரோ அறிமுகமானதில் இருந்து அனைத்து மாதங்களிலும் சராசரியான விற்பனை கார்களின் எண்ணிக்கையை வைத்துள்ளது. கடந்த அக்டோபர் மாதத்தில் இந்த காரின் விற்பனை யூனிட்களின் எண்ணிக்கை 5,884 ஆகும்.

எம்பிவி விற்பனையில் மீண்டும் தொடரும் மாருதி எர்டிகாவின் ஆதிக்கம்...

இதற்கு அடுத்து இடத்தில் சமீபத்தில் தான் அறிமுகமான ரெனால்ட் ட்ரைபர் மாடல் உள்ளது. ஏற்கனவே சில முன்னணி கார் மாடல்களை இந்த வரிசையில் விற்பனையில் முறியடித்துவிட்ட இந்த கார், இந்திய மார்கெட்டில் 2019 அக்டோபரில் மிக சிறந்த முறையில் விற்பனையாகியுள்ளது. கடந்த மாதத்தில் 5,240 ரெனால்ட் டிரிப்பர் கார்கள் விற்பனையாகியுள்ளன.

எம்பிவி விற்பனையில் மீண்டும் தொடரும் மாருதி எர்டிகாவின் ஆதிக்கம்...

டொயொட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா இந்த வரிசையில் நான்காவது இடத்தை பிடித்துள்ளது. கடந்த அக்டோபர் மாதத்தில் 5,062 யூனிட்கள் விற்பனையாகியுள்ள இந்த கார், டொயொட்டா நிறுவனத்தில் இருந்து சந்தையில் நல்ல விதத்தில் விற்பனையாகும் காராக உள்ளது. கடந்த வருடத்தை காட்டிலும் இந்த வருடத்தில் பல அப்டேட்களுக்கு இந்த இன்னோவா க்ரிஸ்ட்டா கார் உட்படுத்தப்பட்டுள்ளது.

எம்பிவி விற்பனையில் மீண்டும் தொடரும் மாருதி எர்டிகாவின் ஆதிக்கம்...

ஐந்தாம் இடத்தில் மாருதி சுசுகி நிறுவனத்தின் எக்ஸ்எல்6 மாடல் 2019 அக்டோபரில் 4,328 கார்கள் விற்பனையுடன் உள்ளது. எர்டிகா மாடலின் ஆறு இருக்கை எம்பிவி வெர்சனாக உள்ள எக்ஸ்எல்6 இந்த வருடத்தின் துவக்கத்தில் அறிமுகமானது. மேலும் சமீபத்தில் நெக்ஸா டீலர்ஷிப்பையும் இந்த கார் பெற்றது.

எம்பிவி விற்பனையில் மீண்டும் தொடரும் மாருதி எர்டிகாவின் ஆதிக்கம்...

மஹிந்திரா மராஸ்ஸோ மாடல் 1,044 கார்கள் விற்பனையுடன் ஆறாவது இடத்திலும், ஹோண்டா பிஆர்-வி 284 கார்கள் விற்பனையுடன் ஏழாவது இடத்திலும், டாடா ஹெக்ஸா மற்றும் டட்சன் கோ+ முறையே 229 மற்றும் 189 யூனிட்கள் விற்பனையுடன் எட்டாவது மற்றும் ஒன்பதாவது இடத்திலும் 2019 அக்டோபர் விற்பனையில் உள்ளன. கடைசி இடத்தில் மஹிந்திரா ஸைலோ மாடல் கார், கடந்த மாதத்தில் 87 விற்பனை எண்ணிக்கைகளுடன் உள்ளது.

எம்பிவி விற்பனையில் மீண்டும் தொடரும் மாருதி எர்டிகாவின் ஆதிக்கம்...

இந்த 2019 அக்டோபரில் அதிகம் விற்பனையான எம்பிவி கார்களில் முதல் ஐந்து இடங்களில் உள்ள மாடல்கள் தான் பெரியளவில் முன்னேற்றத்தை கண்டுள்ளன. குறிப்பாக 5-தாவது இடத்திற்கும் 6-வது இடத்திற்கும் இடையேயான வித்தியாசம் ஏறக்குறைய 3,000ற்கும் மேல் உள்ளது. தீபாவளி சலுகைகளினால் இந்த கார்களின் விற்பனை எண்ணிக்கை இவ்வளவு என்றால், வரப்போகும் மாதங்களில் இவற்றின் நிலைமை என்ன என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

Most Read Articles
மேலும்... #sales
English summary
Top-Selling MPVs In India For October 2019: Renault Triber Slowly Makes Its Way Up The List
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X