டொயோட்டா லிவா, எட்டியோஸ் கார்கள் இந்தியாவிலிருந்து விடைபெறுகின்றன?

டொயோட்டா லிவா மற்றும் எட்டியோஸ் கார்களுக்கு விரைவில் கல்தா கொடுக்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. கூடுதல் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

டொயோட்டா லிவா, எட்டியோஸ் கார்கள் இந்தியாவிலிருந்து விடைபெறுகின்றது?

டொயோட்டா கார் நிறுவனத்தின் விலை குறைவான கார் மாடல்களாக லிவா மற்றும் எட்டியோஸ் கார்கள் இந்தியாவில் விற்பனையில் வைக்கப்பட்டுள்ளன. இதில், எட்டியோஸ் செடான் கார் டாக்சி மார்க்கெட்டில் ஓரளவு நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது.

டொயோட்டா லிவா, எட்டியோஸ் கார்கள் இந்தியாவிலிருந்து விடைபெறுகின்றது?

இந்த நிலையில், இரண்டு கார்களிலும் ஒரே கட்டமைப்பில் உருவாக்கப்பட்டுள்ள நிலையில், ஒரே பெட்ரோல், டீசல் எஞ்சின் பயன்படுத்தப்படுகின்றன. இந்த நிலையில், பிஎஸ்-6 மாசு உமிழ்வு விதிகள் அமலுக்கு விரைவில் அமலுக்கு வர இருக்கும் நிலையில், இந்த இரண்டு கார்களிலும் பயன்படுத்தப்படும் பெட்ரோல், டீசல் எஞ்சின்களை மேம்படுத்தும் நிலை இருக்கிறது.

டொயோட்டா லிவா, எட்டியோஸ் கார்கள் இந்தியாவிலிருந்து விடைபெறுகின்றது?

ஆனால், இந்த கார்களின் விற்பனை எண்ணிக்கை திருப்திகரமாகவும், வர்த்தகத்திற்கு கைகொடுக்கும் வகையில் இல்லாத நிலையில், எஞ்சின்களை பிஎஸ்-6 மாசு உமிழ்வு தரத்திற்கு மேம்படுத்துவதற்கு டொயோட்டா வசம் திட்டம் இல்லை என்று தெரிகிறது.

டொயோட்டா லிவா, எட்டியோஸ் கார்கள் இந்தியாவிலிருந்து விடைபெறுகின்றது?

இந்த கார்களின் பெட்ரோல், டீசல் எஞ்சின்களை மேம்படுத்துவதற்கு அதிக முதலீடு செய்ய வேண்டியிருப்பதுடன், விலையையும் கணிசமாக உயர்த்தும் நிலை ஏற்படும். ஆனால், விற்பனை எதிர்பார்த்த அளவு அமையுமா என்பதில் சந்தேகம் இருப்பதால், இந்த இரண்டு கார்களையும் இந்திய சந்தையிலிருந்து விலக்கிக் கொள்வதற்கு டொயோட்டா முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.

டொயோட்டா லிவா, எட்டியோஸ் கார்கள் இந்தியாவிலிருந்து விடைபெறுகின்றது?

பெரும்பாலான கார் நிறுவனங்கள் பெட்ரோல் எஞ்சின்களை மட்டும் பிஎஸ்-6 தரத்திற்கு நிகரானதாக மேம்படுத்தி தொடர்ந்து பயன்படுத்த திட்டமிட்டுள்ளன. ஆனால், லிவா காரின் விற்பனையில் 63 சதவீதமும், எட்டியோஸ் காரின் விற்பனையில் 70 சதவீதமும் டீசல் மாடல்கள் என்பது புள்ளிவிபரம் மூலமாக தெரிய வருகிறது.

டொயோட்டா லிவா, எட்டியோஸ் கார்கள் இந்தியாவிலிருந்து விடைபெறுகின்றது?

எனவே, டீசல் எஞ்சினை கைவிட்டால், விற்பனை நிச்சயம் படுத்துக் கொள்ளும். அத்துடன், பெட்ரோல் எஞ்சினை மேம்படுத்தி தொடர்ந்து தக்கவைத்தால் விற்பனை எதிர்பார்த்த அளவு இருக்காது என்று டொயோட்டா கருதுகிறது.

டொயோட்டா லிவா, எட்டியோஸ் கார்கள் இந்தியாவிலிருந்து விடைபெறுகின்றது?

எனவே, இந்த விஷயத்தில் ரிஸ்க் எடுக்காமல், இரு கார்களையும் சந்தையிலிருந்து விலக்கிக் கொள்வது சிறந்ததாக கருதுகிறது. வரும் ஏப்ரல் மாதத்திலிருந்து இந்த கார்களை சந்தையிலிருந்து விடுவித்து விடுவதற்கான திட்டத்தை டொயோட்டா கையில் வைத்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. ஆனால், அதிகாரப்பூர்வமாக இதுகுறித்து எந்த தகவலும் இதுவரை இல்லை.

டொயோட்டா லிவா, எட்டியோஸ் கார்கள் இந்தியாவிலிருந்து விடைபெறுகின்றது?

வரும் ஏப்ரல் மாதம் முதல் டொயோட்டா க்ளான்ஸா கார்தான் அந்நிறுவனத்தின் விலை குறைவான மாடலாக இருக்கும். இந்த கார் மாருதி பலேனோ காரின் ரீபேட்ஜ் மாடல் என்பது குறிப்பிடத்தக்கது. டொயோட்டா எட்டியோஸ் கார் விற்பனை நிறுத்தினால், டாக்சி மார்க்கெட்டை சேர்ந்தவர்களுக்கு அதிக ஏமாற்றத்தை தரும் என்பதில் ஐயமில்லை.

Source: Autocarindia

Most Read Articles
மேலும்... #டொயோட்டா #toyota
English summary
Toyota India has decided to discontinue their two entry-level models, the Etios and Etios Liva from the Indian market. The two models will be discontinued from April 2020, which is when the new emission norms are implemented. This will make the Glanza premium hatchback the entry-point to Toyota cars going forward.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X