டொயோட்டா க்ளான்ஸா காரின் விலை குறைவான புதிய வேரியண்ட் அறிமுகம்!

டொயோட்டா க்ளான்ஸா காரின் விலை குறைவான புதிய பேஸ் வேரியண்ட் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இந்த புதிய வேரியண்ட் குறித்த முழுமையான விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

டொயோட்டா க்ளான்ஸா காரின் விலை குறைவான புதிய வேரியண்ட் அறிமுகம்!

மாருதி சுஸுகி நிறுவனமும், டொயோட்டா கார் நிறுவனம் கூட்டணி அமைத்து புதிய வர்த்தக கொள்கையில் இயங்கி வருகின்றன. இரு நிறுவனங்களும் பரஸ்பரம் கார்களை ரீபேட்ஜ் செய்து விற்பனை செய்ய முடிவெடுத்தன. அந்த வகையில், முதல் மாடலாக மாருதி பலேனோ கார் க்ளான்ஸா என்ற பெயரில் ரீபேட்ஜ் செய்யப்பட்டு கடந்த ஜூன் மாதம் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது.

டொயோட்டா க்ளான்ஸா காரின் விலை குறைவான புதிய வேரியண்ட் அறிமுகம்!

மாருதி பலேனோ கார் பெட்ரோல், டீசலில் விற்பனை செய்யப்படும் நிலையில், க்ளான்ஸா கார் இரண்டு விதமான பெட்ரோல் எஞ்சின் தேர்வுகளில் வந்தது. புதிய டொாயோட்டா க்ளான்ஸா காருக்கு நல்ல வரவேற்பும் கிடைத்துள்ளது.

டொயோட்டா க்ளான்ஸா காரின் விலை குறைவான புதிய வேரியண்ட் அறிமுகம்!

கடந்த ஜூன் மாதம் அறிமுகம் செய்யப்பட்டபோது, டொயோட்டா க்ளான்ஸா கார் மைல்டு ஹைப்ரிட் தொழில்நுட்பம் கெண்ட 1.2 லிட்டர் டியூவல்ஜெட் பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்ட ஒரு மாடலானது ஜி என்ற ஒரே வேரியண்ட்டில் மேனுவல் கியர்பாக்ஸ் தேர்வில் வந்தது. இதுதான் விலை குறைவான (ரூ.7.21 லட்சம்) பேஸ் வேரியண்ட்டாக அறிமுகமானது.

டொயோட்டா க்ளான்ஸா காரின் விலை குறைவான புதிய வேரியண்ட் அறிமுகம்!

அடுத்து, சாதாரண 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்ட மாடலானது வி (ரூ.7.58 லட்சம்) என்ற மேனுவல் கியர்பாக்ஸ் வேரியண்ட்டிலும், ஜி சிவிடி (ரூ.8.29 லட்சம்) மற்றும் வி சிவிடி (ரூ.8.90 லட்சம்) என்ற ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் பொருத்தப்பட்ட இரண்டு வேரியண்ட்டுகளிலும் விற்பனைக்கு வந்தன.

MOST READ: காவல்துறையின் தீவிர வேட்டையில் சிக்கிய பெண்கள்: எண்ணிக்கை அதிகரித்ததால் அதிர்ச்சி...

டொயோட்டா க்ளான்ஸா காரின் விலை குறைவான புதிய வேரியண்ட் அறிமுகம்!

இந்தநிலையில், மைல்டு ஹைப்ரிட் தொழில்நுட்பம் இல்லாத சாதாரண 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்ட புதிய ஜி என்ற மேனுவல் கியர்பாக்ஸ் வேரியண்ட் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த வேரியண்ட்டிற்கு ரூ.6.97 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

MOST READ: ஆச்சரியமா இருக்கே... இரவு 10 மணிக்கு மேல் கார் கதவை படாரென மூட கூடாது... ஏன் தெரியுமா?

டொயோட்டா க்ளான்ஸா காரின் விலை குறைவான புதிய வேரியண்ட் அறிமுகம்!

இதில், கவனிக்க வேண்டிய விஷயம், ஏற்கனவே வந்த வேரியண்ட்டுகள் அனைத்தும் மாருதி பலேனோ காரின் இணையான வேரியண்ட்டுகளைவிட க்ளான்ஸா காரின் வேரியண்ட்டுகள் விலை கணிசமாக குறைத்து நிர்ணயிக்கப்பட்டன. ஆனால், இந்த புதிய வேரியண்ட் மாருதி பலேனோ காரின் பேஸ் வேரியண்ட்டிற்கு இணையாக நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது.

MOST READ: 9 லட்ச ரூபாய்க்கு கேடிஎம் பைக்கை வாங்கிய பிரபல நடிகர்... யாரென்று உங்களால் கணிக்க முடிகிறதா?

டொயோட்டா க்ளான்ஸா காரின் விலை குறைவான புதிய வேரியண்ட் அறிமுகம்!

இந்த புதிய பேஸ் வேரியண்ட் மூலமாக, டொயோட்டா க்ளான்ஸா காரின் விற்பனை சற்று உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த புதிய ஜி மேனுவல் கியர்பாக்ஸ் வேரியண்ட்டில் இருக்கும் 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் 83 பிஎஸ் பவரையும், 113 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். இந்த எஞ்சின் லிட்டருக்கு 21.01 கிமீ மைலேஜை வழங்கும் என்று தெரிவிக்கப்படுகிறது.

Most Read Articles

மேலும்... #டொயோட்டா #toyota
English summary
Toyota has launched new base variant of Glanza in India.
Story first published: Saturday, October 5, 2019, 10:10 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X