அதிகாரப்பூர்வ அறிவிப்புக்கு முன்னரே தொடங்கியதா க்ளான்ஸா புக்கிங்...? சிறப்பு தகவல்!

பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் க்ளான்ஸா காருக்கான புக்கிங் அதிகாரப்பூர்வ அறிவிப்பிற்கு முன்னரே தொடங்கியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்த தகவலை இந்த பதிவில் காணலாம்.

அதிகாரப்பூர்வ அறிவிப்புக்கு முன்னரே தொடங்கியதா க்ளான்ஸா புக்கிங்...? சிறப்பு தகவல்!

டொயோட்டா மற்றும் சுஸுகி ஆகிய இரு நிறுவனங்களின் இணைப்பைத் தொடர்ந்து, விற்பனைக்கு வரும் முதல் மாடலாக க்ளான்ஸா இருக்கின்றது. ஹேட்ச்பேக் ரகத்தில் உருவாகியுள்ள இந்த காரை வருகின்ற ஜீன் மாதம் 6ம் தேதி அறிமுகம் செய்ய இருப்பதாக அந்த நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

சுஸுகியின் பலேனோ கார்தான் தற்போது, டொயோட்டோ பேட்ஜில் க்ளான்ஸா என்ற பெயரில் விற்பனைக்கு களமிறங்க இருக்கின்றது.

அதிகாரப்பூர்வ அறிவிப்புக்கு முன்னரே தொடங்கியதா க்ளான்ஸா புக்கிங்...? சிறப்பு தகவல்!

இந்நிலையில், ஹேட்ச்பேக் ரகத்திலான இந்த புதிய காருக்கான புக்கிங்கை அதன் டீலர்கள் தொடங்கியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், டொயோட்டா நிறுவனம், க்ளான்ஸா மாடலுக்கான புக்கிங்கை இதுவரை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அதிகாரப்பூர்வ அறிவிப்புக்கு முன்னரே தொடங்கியதா க்ளான்ஸா புக்கிங்...? சிறப்பு தகவல்!

அதேசமயம், இந்த கார் விற்பனைக்கு வருவதற்கு முன்னதாக, வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெரும் வகையில், டொயோட்டா நிறுவனம், க்ளான்ஸா கார் குறித்த டீசர் வீடியோ ஒன்றை வெளியிட்டது. ஆனால், அதற்கு முன்பிலிருந்தே க்ளான்ஸா குறித்த பல்வேறு ஸ்பை படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வைரலாகின.

அந்தவகையில், டெஸ்ட் டிரைவ் மற்றும் ஷோரூமில் காட்சிப்படுத்துவதற்காக அதன் டீலர்களை வந்தடைந்த க்ளான்ஸா காரை, வாடிக்கையாளர்கள் சிலர் டெஸ்ட் டிரைவ் செய்து பார்ப்பது போன்ற வீடியோ ஒன்று அண்மையில் வெளியாகியது.

அதிகாரப்பூர்வ அறிவிப்புக்கு முன்னரே தொடங்கியதா க்ளான்ஸா புக்கிங்...? சிறப்பு தகவல்!

அதில், க்ளான்ஸா கார், கராஜில் நிறுத்தி வைத்திருப்பதைப் போன்ற காட்சிகள் இடம்பெற்றிருந்தன. இந்த வீடியோவில்தான், அந்த கார் முதல் முறையாக முழுமையாக காட்சி கொடுத்திருந்தது. மேலும், இந்த வீடியோ மூலம், க்ளான்ஸா காரில் சிவிடி ஆப்ஷன் இருப்பதும் உறுதியானது.

அதிகாரப்பூர்வ அறிவிப்புக்கு முன்னரே தொடங்கியதா க்ளான்ஸா புக்கிங்...? சிறப்பு தகவல்!

இந்த சூழ்நிலையில், மீண்டும் ஒரு முறை இந்த கார் அண்மையில் கேமிராவின் கண்களில் சிக்கியது. ஆனால், வித்தியாசமாக, விளம்பரத்திற்காக ஷூட்டிங் எடுக்கும்போது, அதன் ஸ்பை படங்கள் சிக்கின.

இவ்வாறு, இந்த காருக்கு எதிர்பார்ப்பு அதிகரிக்கும் விதத்தில் பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்ற வந்தநிலையில்தான், அதன் டீலர்கள் டொயோட்டா நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பிற்கு முன்னரே புக்கிங்கை தொடங்கியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதிகாரப்பூர்வ அறிவிப்புக்கு முன்னரே தொடங்கியதா க்ளான்ஸா புக்கிங்...? சிறப்பு தகவல்!

தற்போது டொயோட்டா பேட்ஜில் உருவாகி வரும் க்ளான்ஸா கார் பெரிய அளவிலான மாற்றங்களைப் பெறாமல், கணிசமான மாறுதல்களை மட்டுமே பெற்றுள்ளன. அந்தவகையில், பழைய பலேனோவுடன் ஒப்பிட்டு பார்த்தால் சற்று வித்தியாசமாக காட்சியளிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

அதிகாரப்பூர்வ அறிவிப்புக்கு முன்னரே தொடங்கியதா க்ளான்ஸா புக்கிங்...? சிறப்பு தகவல்!

காரின் ரேடியேட்டர் க்ரில் அமைப்பு உள்ளிட்டவற்றில் சிறு மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. க்ரில்லானது இரண்டு குரோம் பூச்சுக் கொண்ட விங் அமைப்பை புதுமையாகப் பெற்றுள்ளது. அதேபோன்று, காரின் உட்புறத்திலும் பெயரளவில் மாற்றம் செய்யப்பட்டுள்ளன.

அதிகாரப்பூர்வ அறிவிப்புக்கு முன்னரே தொடங்கியதா க்ளான்ஸா புக்கிங்...? சிறப்பு தகவல்!

இந்த கார் சுஸுகி நிறுவனத்தின்கீழ் தயாரிக்கப்பட்டபோது, அதன் குஜராத் பிளாணட்டில் வைத்து உற்பத்தி செய்யப்பட்டது. ஆனால், தற்போது இந்த கார் பெங்களூருவில் உள்ள டொயோட்டாவின் பிடாடி பிளாணட்டில் வைத்து உற்பத்தி செய்யப்பட உள்ளது. மேலும், டொயோட்டா நிறுவனம், வாடிக்கையாளர்களை கவரும் வகையில், இந்த காருக்கான வாரண்டி காலத்தை பழைய பலேனோவைக் காட்டிலும் அதிகமாக வழங்க இருப்பதாக தெரிவித்துள்ளது.

அதிகாரப்பூர்வ அறிவிப்புக்கு முன்னரே தொடங்கியதா க்ளான்ஸா புக்கிங்...? சிறப்பு தகவல்!

அந்தவகையில், இந்த பிரீமியம் ரக ஹேட்ச்பேக் காருக்கு 3 வருடங்கள்/1 லட்சம் கிமீ வாரண்டியினை டொயோட்டா நிறுவனம் வழங்க இருக்கின்றது. அதேபோன்று, 5 வருடங்கள் முதல் ஏழு வருடங்கள் வரை ஆப்ஷனலாகவும் வாரண்டி வழங்கப்பட உள்ளன. டொயோட்டாவின் இந்த புதிய க்ளான்ஸா, ஹை வேரியண்ட்களான ஜி மற்றும் வி வேரியண்ட்களில் தயாராகியுள்ளன.

அதிகாரப்பூர்வ அறிவிப்புக்கு முன்னரே தொடங்கியதா க்ளான்ஸா புக்கிங்...? சிறப்பு தகவல்!

இதில் க்ளான்ஸாவின் வி மாடலானது மாருதி பலேனோவின் ஆல்பா ட்ரிமிலும், ஜி மாடலானது பலோனோவின் ஜெட்டா ட்ரிம் பிளாட்பாரத்தில் வைத்து உருவாக்கப்பட்டுள்ளன. மேலும், க்ளான்ஸா ப்ளூ, சில்வர், க்ரே, ஒயிட் மற்றும் ரெட் ஆகிய ஐந்து வண்ண தேர்வில் கிடைக்க இருக்கின்றது.

டொயோட்டா க்ளான்ஸா காரில் பிஎஸ்-6 தரத்திலான, 1.2 லிட்டர் கே12எம் விவிடி என்/ஏ 4 சிலிண்டர் பெட்ரோல் எஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது 82.94 பவரையும் (61 kW), 113 என்எம் டார்க்கையும் வெளப்படுத்தும் திறன் கொண்டது. இது லிட்டருக்கு 21.01 கிமீ மைலேஜை தரும் எனவும் கூறப்படுகிறது.

அதிகாரப்பூர்வ அறிவிப்புக்கு முன்னரே தொடங்கியதா க்ளான்ஸா புக்கிங்...? சிறப்பு தகவல்!

இத்துடன், 5 ஸ்பீடு எம்டி அல்லது 19.56 கிமீ/லி சிவிடி ஆகிய ஆப்ஷன்களிலும் இந்த கார் கிடைக்க இருக்கின்றது. அதேசமயம், இந்த க்ளான்ஸா கார் டொயோட்டா நிறுவனத்தின் மூலம் விற்பனைக்கு வரவிருப்பதால், பலேனோவைக் காட்டிலும் கணிசமான விலையுயர்வைப் பெறலாம் என கூறப்படுகிறது.

Note: Images are representational purpose only.

Most Read Articles
மேலும்... #டொயோட்டா #toyota
English summary
Toyota Glanza Launch-Date Confirmed — Official Bookings To Begin Soon. Read In Tamil.
Story first published: Sunday, May 19, 2019, 8:59 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X