இன்னோவா க்ரிஸ்ட்டா காரில் டீசல் எஞ்சின்களுக்கு விடை கொடுக்க டொயோட்டா முடிவு!

புதிய தலைமுறை டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா காரில் டீசல் மாடல்கள் விலக்கிக் கொள்ளப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

இன்னோவா க்ரிஸ்ட்டா காரில் டீசல் எஞ்சின்களுக்கு விடை கொடுக்க டொயோட்டா முடிவு!

இந்திய எம்பிவி கார் சந்தையில் தன்னிகரற்ற மாடலாக டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா கார் வலம் வருகிறது. ஆளுமையான தோற்றம், சக்திவாய்ந்த எஞ்சின் தேர்வுகள், வசதிகள், நீடித்த உழைப்பு மற்றும் மறுவிற்பனை மதிப்பு என அனைத்திலும் சிறந்த தேர்வாக பெயர் பெற்றுவிட்டது.

இன்னோவா க்ரிஸ்ட்டா காரில் டீசல் எஞ்சின்களுக்கு விடை கொடுக்க டொயோட்டா முடிவு!

வாடிக்கையாளர்களின் கனவு மாடலாக பெயர் பெற்றுவிட்ட டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா காரில் இப்போது இரண்டு டீசல் எஞ்சின் தேர்வுகளும், ஒரு பெட்ரோல் எஞ்சின் தேர்வும் வழங்கப்படுகிறது. இதில் 2.4 லிட்டர் மாடல் 148 பிஎச்பி பவரையும், 343 என்எம் டார்க்கையும் வழங்க வல்லது. மற்றொரு 2.8 லிட்டர் டீசல் மாடல் 171 பிஎச்பி பவரையும், 360 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும்.

இன்னோவா க்ரிஸ்ட்டா காரில் டீசல் எஞ்சின்களுக்கு விடை கொடுக்க டொயோட்டா முடிவு!

பெட்ரோல் மாடலில் இருக்கும் 2.7 லிட்டர் எஞ்சின் அதிகபட்சமாக 163.7 பிஎச்பி பவரையும், 245 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். அனைத்து விதத்திலுமே புதிய டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா மிகவும் சக்திவாய்ந்த மாடலாக இருக்கிறது.

இன்னோவா க்ரிஸ்ட்டா காரில் டீசல் எஞ்சின்களுக்கு விடை கொடுக்க டொயோட்டா முடிவு!

எனினும், டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா காரில் டீசல் மாடல்களுக்குத்தான் அதிக மவுசு இருந்து வருகிறது. பெட்ரோல் மாடலுக்கான வரவேற்பு குறைவாகவே இருந்து வருகிறது.

இன்னோவா க்ரிஸ்ட்டா காரில் டீசல் எஞ்சின்களுக்கு விடை கொடுக்க டொயோட்டா முடிவு!

டீசல் மாடல்கள் அதிக டார்க் திறனையும், சிறப்பான மைலேஜையும் வழங்குவதே வாடிக்கையாளர்களின் ஆதரவு டீசல் எஞ்சின் தேர்வுகள் பக்கமே இன்னோவா க்ரிஸ்ட்டாவை பொறுத்தவரை இருந்து வருகின்றன. அதுவும், சில இன்னோவா க்ரிஸ்ட்டா கார்கள் பல லட்சம் கிலோமீட்டர்கள் வரை எந்த பிரச்னையும் இல்லாமல் இருப்பதால், இதன் டீசல் எஞ்சின்கள் மிகவும் நம்பகமானதாக கருதப்படுகிறது.

இன்னோவா க்ரிஸ்ட்டா காரில் டீசல் எஞ்சின்களுக்கு விடை கொடுக்க டொயோட்டா முடிவு!

இந்த நிலையில், புதிய தலைமுறை இன்னோவா க்ரிஸ்ட்டா காரில் டீசல் எஞ்சின் தேர்வுகள் நிறுத்தப்பட இருப்பதாக செய்திகள் வெளியாகி இருக்கின்றன. அதுமாத்திரமல்ல, புதிய இன்னோவா க்ரிஸ்ட்டா கார் பெட்ரோல் ஹைப்ரிட் மாடலில் வர இருப்பதாக லைவ்மின்ட் தளத்தின் செய்தி கூறுகிறது.

இன்னோவா க்ரிஸ்ட்டா காரில் டீசல் எஞ்சின்களுக்கு விடை கொடுக்க டொயோட்டா முடிவு!

வரும் 2022ம் ஆண்டு புதிய மாசு உமிழ்வு விதிகள் மற்றும் குறைந்தபட்ச மைலேஜ் விதிகள் அமலுக்கு கொண்டு வரப்படுவதற்கு அரசு திட்டமிட்டுள்ளது. அதே ஆண்டில்தான் புதிய தலைமுறை இன்னோவா க்ரிஸ்ட்டா காரும் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. எனவே, அந்த விதிகளுக்கு ஒப்பாக இன்னோவா க்ரிஸ்ட்டா காரில் ஹைப்ரிட் மாடலாக கொண்டு வரப்பட இருக்கிறது.

இன்னோவா க்ரிஸ்ட்டா காரில் டீசல் எஞ்சின்களுக்கு விடை கொடுக்க டொயோட்டா முடிவு!

வரும் 2023ம் ஆண்டில் நடைமுறை பயன்பாட்டில் எஞ்சின்கள் வெளிப்படுத்தும் மாசு உமிழ்வு விதிகள் அமலுக்கு கொண்டு வரப்பட இருக்கின்றன. எனவே, கார் நிறுவனங்கள் இப்போதே, அந்த விதிகளுக்கு ஒப்பாக தனது கார்களை உருவாக்கும் முயற்சிகளை கையில் எடுத்துள்ளன.

இன்னோவா க்ரிஸ்ட்டா காரில் டீசல் எஞ்சின்களுக்கு விடை கொடுக்க டொயோட்டா முடிவு!

புதிய மாசு உமிழ்வு விதிகளுக்கு ஏற்ப டீசல் எஞ்சின்களை குறைவான மாசு உமிழ்வு மற்றும் அதிக மைலேஜ் தரும் வகையில் மேம்படுத்துவதற்கு அதிக சிக்கல்களும், முதலீட்டு பிரச்னைகளும் உள்ளன. எனவே, பெட்ரோல் மாடலை வைத்து மைலேஜ் விஷயத்தை நிறைவு செய்ய இயலாது. எனவே, ஹைப்ரிட் மாடலாக அறிமுகம் செய்ய டொயோட்டா நிறுவனம் முடிவு செய்துள்ளது.

Most Read Articles
English summary
Toyota India might discontinue the diesel variant of the Innova Crysta in the coming years. The next-generation Toyota Innova Crysta will be available only with a petrol-hybrid engine option as the diesel engine will be phased out.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X