டொயோட்டாவின் ஆதிக்கத்திற்கு முடிவு கட்ட நாள் குறித்தது கியா... மார்க்கெட்டை கைப்பற்ற அடுத்த அதிரடி

இந்திய மார்க்கெட்டில் டொயோட்டாவின் ஆதிக்கத்திற்கு முடிவு கட்ட கியா நிறுவனம் நாள் குறித்துள்ளது. மார்க்கெட்டை கைப்பற்றுவதற்காக இந்த அதிரடியை கியா மேற்கொண்டுள்ளது.

டொயோட்டாவின் ஆதிக்கத்திற்கு முடிவு கட்ட நாள் குறித்தது கியா... மார்க்கெட்டை கைப்பற்ற அடுத்த அதிரடி

தென் கொரியாவை சேர்ந்த கியா மோட்டார்ஸ் நிறுவனத்தின் தொழிற்சாலை ஆந்திர மாநிலம் அனந்த்ப்பூர் பகுதியில் அமைக்கப்பட்டுள்ளது. முதலில் இந்த தொழிற்சாலை தமிழகத்தில்தான் அமைக்கப்படுவதாக இருந்தது. ஆனால் அதன்பின் கியா நிறுவனம் திடீரென ஆந்திராவிற்கு சென்றது.

தமிழக ஆட்சியாளர்கள் அதிகப்படியாக லஞ்சம் கேட்டதே இதற்கு காரணமாக கூறப்படுகிறது. இந்த சர்ச்சை இன்றும் தொடர்ந்து கொண்டிருக்கும் சூழலில், அனந்த்ப்பூரில் அமைக்கப்பட்டுள்ள கியா தொழிற்சாலையில் சோதனை அடிப்படையிலான உற்பத்தியே தொடங்கப்பட்டு விட்டது.

டொயோட்டாவின் ஆதிக்கத்திற்கு முடிவு கட்ட நாள் குறித்தது கியா... மார்க்கெட்டை கைப்பற்ற அடுத்த அதிரடி

எஸ்பி2ஐ (SP2i) என்ற குறியீட்டு பெயரில் அழைக்கப்பட்டு வரும் கார்தான் கியா நிறுவனம் இந்தியாவில் களமிறக்கவுள்ள முதல் தயாரிப்பு ஆகும். வரும் தீபாவளி பண்டிகைக்கு முன்னதாக கியா எஸ்பி2ஐ விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு விடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இது 5 சீட்டர் பிரீமியம் எஸ்யூவி கார் ஆகும். டாடா ஹாரியர், மஹிந்திரா எக்ஸ்யூவி500, நிஸான் கிக்ஸ் மற்றும் ஹூண்டாய் கிரெட்டா உள்ளிட்ட கார்களுக்கு கியா எஸ்பி2ஐ எஸ்யூவி கடுமையான போட்டியை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

எஸ்பி2ஐ காருக்கு பிறகு, கார்னிவல் 7 சீட்டர் எம்பிவி (Carnival MPV) காரை கியா நிறுவனம் இந்தியாவில் களமிறக்கவுள்ளது. எம்பிவி செக்மெண்ட்டில் தனிக்காட்டு ராஜாவாக வலம் வந்து கொண்டிருக்கும் டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டாவிற்கு கார்னிவல் கடும் சவால் அளிக்கும்.

கியா கார்னிவல் எம்பிவி கார் இந்தியாவில் களமிறக்கப்படுவது கடந்த சில நாட்களுக்கு முன்புதான் உறுதி செய்யப்பட்டது. எனவே இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் தற்போதே எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. ஆனால் இந்த கார் இந்தியாவிற்கு எப்போது வரும்? என்ற தகவல் மட்டும் வெளியாகாமல் இருந்தது.

டொயோட்டாவின் ஆதிக்கத்திற்கு முடிவு கட்ட நாள் குறித்தது கியா... மார்க்கெட்டை கைப்பற்ற அடுத்த அதிரடி

தற்போது அதற்கும் விடை கிடைத்துள்ளது. இந்தியாவிற்கான கியா கார்னிவல் கார் மாடல், 2020ம் ஆண்டு நடைபெறவுள்ள டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன்பின் அதே ஆண்டு மார்ச் மாதம் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு விடும் என கூறப்படுகிறது.

செக்மெண்ட் லீடரான டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டாவிற்கான சிறந்த மாற்றாக கியா கார்னிவல் எம்பிவி இருக்கும். இன்னோவா க்ரிஸ்ட்டாவை காட்டிலும் கியா கார்னிவல் அளவில் பெரியது. அத்துடன் இதில் இடம்பெறவுள்ள சிறப்பம்சங்கள் மீதும் பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.

இந்த செக்மெண்ட்டில் வேறு எந்த காரிலும் இல்லாத சிறப்பம்சங்கள் மற்றும் வசதிகளை கார்னிவல் எம்பிவி காரில் கியா நிறுவனம் வழங்கும் என கூறப்படுகிறது. இதன் விலை 22-28 லட்ச ரூபாய்க்குள் இருக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியாவிற்கான கியா கார்னிவல் பிரீமியம் எம்பிவி மாடலின் இன்ஜின் மற்றும் டைமன்சன் ஆகியவை, அதன் நேரடி போட்டியாளரான டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டாவுடன் ஒப்பிடுகையில் சற்று மாறுபட்டதாக இருக்கும்.

டொயோட்டாவின் ஆதிக்கத்திற்கு முடிவு கட்ட நாள் குறித்தது கியா... மார்க்கெட்டை கைப்பற்ற அடுத்த அதிரடி

கியா கார்னிவல் எம்பிவி காரின் நீளம் 5,155 மிமீ ஆகவும், அகலம் 1,985 மிமீ ஆகவும், உயரம் 1,740 மிமீ ஆகவும், வீல் பேஸ் 2,060 மிமீ ஆகவும் இருக்கும். சர்வதேச மார்கெட்களில் 7 சீட், 8 சீட், 9 சீட், 11 சீட் என 4 சீட்டிங் லே அவுட்களில் கியா கார்னிவல் எம்பிவி விற்பனை செய்யப்படுகிறது.

என்றாலும் இந்தியாவில் முதற்கட்டமாக 7 சீட்டர் மாடல் மட்டுமே விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என கூறப்படுகிறது. அதேபோல் வெளிநாடுகளில் கியா கார்னிவல் எம்பிவி கார் பெட்ரோல் மற்றும் டீசல் என 2 இன்ஜின் ஆப்ஷன்களிலும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

ஆனால் இந்திய மாடலில், 2.2 லிட்டர் இ-விஜிடி (E-VGT) டீசல் இன்ஜின் ஆப்ஷன் மட்டுமே வழங்கப்படும் என கூறப்படுகிறது. இது பிஎஸ் 6 மாசு உமிழ்வு விதிகளுக்கு உட்பட்டதாக இருக்கும். இந்த இன்ஜின் அதிகபட்சமாக 199 பிஎச்பி பவர் மற்றும் 441 என்எம் டார்க் திறனை உருவாக்க கூடியது.

டொயோட்டாவின் ஆதிக்கத்திற்கு முடிவு கட்ட நாள் குறித்தது கியா... மார்க்கெட்டை கைப்பற்ற அடுத்த அதிரடி

ஆனால் இதன் நேரடி போட்டியாளரான டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா காரில் பெட்ரோல் மற்றும் டீசல் என இரண்டு இன்ஜின் ஆப்ஷன்களும் வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. இதுதவிர மேலும் பல்வேறு கார்களை கியா நிறுவனம் வரிசையாக களமிறக்குவதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறது.

எனவே இந்தியா முழுவதும் டீலர்ஷிப் அமைக்கும் பணிகளும் முடுக்கி விடப்பட்டுள்ளன. இதன் ஒரு பகுதியாக இந்தியாவின் முதல் கியா டீலர்ஷிப், நொய்டாவில் திறக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

Most Read Articles
English summary
Toyota Innova Crysta Rival Kia Carnival 7-Seater MPV India Launch In Early 2020. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X