டொயோட்டா இன்னோவா கிரிஸ்டாவை அடித்து காலி செய்ய வரும் கியா கார்! மிரட்டலான வசதிகள் என்னென்ன தெரியுமா?

இந்தியாவில் தனி ராஜாங்கம் நடத்தி வரும் டொயோட்டா இன்னோவா கிரிஸ்டாவிற்கு சரி நிகர் போட்டியாக களமிறங்கவுள்ள கியா கார்னிவல் கார் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த கார் தொடர்பான புதிய தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன.

டொயோட்டா இன்னோவா கிரிஸ்டாவை அடித்து காலி செய்ய வரும் கியா கார்... என்னென்ன வசதிகள் தெரியுமா?

தென் கொரியாவை சேர்ந்த கியா மோட்டார்ஸ் நிறுவனம் இந்திய மார்க்கெட்டில் வெகு விரைவில் தனது கார் விற்பனையை தொடங்கவுள்ளது. கியா நிறுவனத்தின் செல்டோஸ் எஸ்யூவி இந்திய மார்க்கெட்டில் வரும் ஆகஸ்ட் 22ம் தேதி முறைப்படி விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ளது. செல்டோஸ்தான் இந்திய மார்க்கெட்டில் கியா மோட்டார்ஸ் களமிறக்கும் முதல் கார் என்பது குறிப்பிடத்தக்கது.

டொயோட்டா இன்னோவா கிரிஸ்டாவை அடித்து காலி செய்ய வரும் கியா கார்... என்னென்ன வசதிகள் தெரியுமா?

தற்போது கியா செல்டோஸ் எஸ்யூவி காருக்கான புக்கிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதன்பின் இந்தியாவில் ஏராளமான கார் மாடல்களை கியா மோட்டார்ஸ் நிறுவனம் களமிறக்கவுள்ளது. இதில், கியா கார்னிவல் (Kia Carnival) கார் குறிப்பிடத்தக்கது. இது எம்பிவி ரக கார். இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் எம்பிவி ரக கார்களில் ஒன்று டொயோட்டா இன்னோவா கிரிஸ்டா.

டொயோட்டா இன்னோவா கிரிஸ்டாவை அடித்து காலி செய்ய வரும் கியா கார்... என்னென்ன வசதிகள் தெரியுமா?

ஆனால் தற்போது வரை டொயோட்டா இன்னோவா கிரிஸ்டா காருக்கு இந்திய மார்க்கெட்டில் சரி நிகரான போட்டியாளர் இல்லை. அந்த குறையை கியா கார்னிவல் போக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் கியா கார்னிவல் எம்பிவி பெரும் ஆவலை தூண்டியுள்ளது.

டொயோட்டா இன்னோவா கிரிஸ்டாவை அடித்து காலி செய்ய வரும் கியா கார்... என்னென்ன வசதிகள் தெரியுமா?

பிரீமியம் எம்பிவி காரான கார்னிவலை கியா மோட்டார்ஸ் நிறுவனம் வரும் 2020ம் ஆண்டின் முதல் பாதியில் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. டொயோட்டா இன்னோவா கிரிஸ்டா காரை விட கியா கார்னிவல் கார் அளவில் பெரிதாக இருப்பதுடன், அதிக பிரீமியம் வசதிகள் கொண்டதாக இருக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

டொயோட்டா இன்னோவா கிரிஸ்டாவை அடித்து காலி செய்ய வரும் கியா கார்... என்னென்ன வசதிகள் தெரியுமா?

டொயோட்டா இன்னோவா கிரிஸ்டா காரின் நீள, அகலங்கள் முறையே 4735 மிமீ மற்றும் 1830 மிமீ மட்டுமே. ஆனால் கியா கார்னிவல் காரின் நீளம் 5115 மிமீ ஆகவும், அகலம் 1985 மிமீ ஆகவும் இருக்கும். அதே சமயம் கியா கார்னிவல் காரின் உயரம் 1740 மிமீ ஆகவும், வீல் பேஸ் 3060 மிமீ ஆகவும் இருக்கும். கியா கார்னிவல் காரில் அதிநவீன மற்றும் சொகுசு வசதிகளுக்கும் பஞ்சமிருக்காது.

டொயோட்டா இன்னோவா கிரிஸ்டாவை அடித்து காலி செய்ய வரும் கியா கார்... என்னென்ன வசதிகள் தெரியுமா?

இதில், பவர் ஸ்லைடிங் டோர்கள் வழங்கப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. காரில் எளிதாக ஏறி, இறங்க பவர் ஸ்லைடிங் டோர்கள் உதவும். பவர் ஸ்லைடிங் டோர்கள் தவிர இன்னும் ஏராளமான ஆர்வமூட்டும் வசதிகளும் கியா கார்னிவல் எம்பிவி காரில் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

டொயோட்டா இன்னோவா கிரிஸ்டாவை அடித்து காலி செய்ய வரும் கியா கார்... என்னென்ன வசதிகள் தெரியுமா?

இதில், ஆப்பிள் கார் பிளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ வசதிகளுடன் 8 இன்ச் டச் ஸ்கீரின், 7 இன்ச் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்டர், பார்க்கிங் சென்சார்களுடன் ரிவர்ஸ் கேமரா, 3-ஜோன் க்ளைமேட் கண்ட்ரோல், 360 டிகிரி கேமரா, வயர்லெஸ் சார்ஜிங், யுவோ கனெக்ட் உள்ளிட்ட வசதிகள் முக்கியமாக இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

டொயோட்டா இன்னோவா கிரிஸ்டாவை அடித்து காலி செய்ய வரும் கியா கார்... என்னென்ன வசதிகள் தெரியுமா?

அதே சமயம் பாதுகாப்பு வசதிகளுக்கும் பஞ்சமிருக்காது என எதிர்பார்க்கலாம். இதில், பிளைண்ட் ஸ்பாட் டிடெக்ஸன், தன்னிச்சையான அவசர கால பிரேக்கிங், ஏர் பேக் உள்ளிட்ட பாதுகாப்பு வசதிகள் மிகவும் முக்கியமானவை. ஆனால் எத்தனை ஏர் பேக்குகள் இடம்பெறும் என்பது உறுதியாக தெரியவில்லை. அதே நேரத்தில் 17 இன்ச், 18 இன்ச், 19 இன்ச் வீல் ஆப்ஷன்களுடன் வரும் என தெரிகிறது.

டொயோட்டா இன்னோவா கிரிஸ்டாவை அடித்து காலி செய்ய வரும் கியா கார்... என்னென்ன வசதிகள் தெரியுமா?

கியா கார்னிவல் எம்பிவி காரில் 80 லிட்டர் கொள்ளளவு கொண்ட எரிபொருள் டேங்க் வழங்கப்படலாம். இதன் க்ரவுண்ட் க்ளியரன்ஸ் 171 மிமீ ஆக இருக்கும். இந்திய மார்க்கெட்டிற்கான கியா கார்னிவல் காரில், CRDi VGT டீசல் இன்ஜின் வழங்கப்படும் என கூறப்படுகிறது. அனேகமாக 6 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் அல்லது 8 ஸ்பீடு ஆட்டோமெட்டிக் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

டொயோட்டா இன்னோவா கிரிஸ்டாவை அடித்து காலி செய்ய வரும் கியா கார்... என்னென்ன வசதிகள் தெரியுமா?

இதனிடையே டொயோட்டா இன்னோவா கிரிஸ்டாவை விட கியா கார்னிவல் காரின் எடை அதிகமாக இருக்கும் என தெரிகிறது. டொயோட்டா இன்னோவா கிரிஸ்டா காரின் எடை 1,880 கிலோ. ஆனால் கியா கார்னிவல் காரின் எடை 2,195 கிலோவாக இருக்கலாம். ஆனால் கியா கார்னிவல் காரின் விலைதான் கொஞ்சம் அதிகமாக இருக்கும். ரூ.22 லட்சம் முதல் ரூ.30 லட்சம் வரையிலான விலைகளில் கியா கார்னிவல் எதிர்பார்க்கப்படுகிறது.

டொயோட்டா இன்னோவா கிரிஸ்டாவை அடித்து காலி செய்ய வரும் கியா கார்... என்னென்ன வசதிகள் தெரியுமா?

கியா நிறுவனத்தின் தொழிற்சாலை ஆந்திர பிரதேச மாநிலம் அனந்த்பூர் பகுதியில் அமைக்கப்பட்டுள்ளது. அங்கு கார்னிவல் எம்பிவி காருக்கான அசெம்ளி லைனை கியா மோட்டார்ஸ் நிறுவனம் ஏற்கனவே ஒதுக்கி விட்டதாக கூறப்படுகிறது. இது குறித்து ஜிக்வீல்ஸ் தளம் செய்தி வெளியிட்டுள்ளது.

Most Read Articles
English summary
Toyota Innova Crysta Rival Kia Carnival MPV India Launch Details, Expected Price, Features. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X