விற்பனையில் இமாலய சாதனை படைத்த டொயோட்டா லேண்ட் க்ரூஸர்!

டொயோட்டா நிறிவனத்தின் நீண்ட கால தனி அடையாளமாக திகழும் டொயோட்டா லேண்ட் க்ரூஸர் விற்பனையில் 10 மில்லியன் யூனிட்டுகளை கடந்து புதிய சாதனை படைத்துள்ளது.

விற்பனையில் இமாலய சாதனை படைத்த டொயோட்டா லேண்ட் க்ரூஸர்!

வாடிக்கையாளர்களின் ஆல்டைம் பேவரட்டாக இருக்கும் டொயோட்டா லேண்ட் க்ரூஸர் அதன் முரட்டுத்தன்மை மற்றும் பல சிறப்பு திறன்களால் உலகம் முழுவதும் காலூன்றி உள்ளது.

விற்பனையில் இமாலய சாதனை படைத்த டொயோட்டா லேண்ட் க்ரூஸர்!

டொயோட்டா லேண்ட் க்ரூஸரின் முதல் மாடல் கார் 1951ல் அறிமுகப்படுத்தப்பட்டு, தற்போது கிட்டத்தட்ட அனைத்து கண்டங்களிலும் விற்பனையில் இருந்து வருகிறது.

விற்பனையில் இமாலய சாதனை படைத்த டொயோட்டா லேண்ட் க்ரூஸர்!

அறிமுகம் செய்யப்பட்டது முதல் 14 வித்தியாசமான மாடல்களில் ஆயிரக்கணக்கான வேரியண்டுகளில் விற்பனையில் இருந்து வருகிறது. டொயோட்டா லேண்ட் க்ரூஸர் ஜப்பானில் போலீஸ் வாகனமாகவும் பயன்படுத்தப்பட்டுள்ளது. லேண்ட் க்ரூஸர் அதன் அபரிமிதமான ஆஃப்-ரோடிங் மற்றும் 4×4 குணாதிசயங்களுக்காக பெரும் வரவேற்பை பெற்றிருக்கிறது.

விற்பனையில் இமாலய சாதனை படைத்த டொயோட்டா லேண்ட் க்ரூஸர்!

1955ல் ஜப்பானில் ஆண்டுக்கு ஆயிரம் லேண்ட் க்ரூஸர்கள் தயாரிக்கப்பட்டு பெரும் வரவேற்பை பெற்றது. 1960ஆம் ஆண்டின் மத்தியில் இதன் உற்பத்தி 10,000 என்ற அளவை எட்டியது. 1975ல் இங்கிலாந்தில் கால்பதித்தது டொயோட்டா, 1980ம் ஆண்டு லேண்ட்க்ரூஸர் விற்பனை 1 மில்லியனை கடந்து மற்ற அனைத்து நிறுவனங்களையும் திரும்பி பார்க்க வைத்தது.

விற்பனையில் இமாலய சாதனை படைத்த டொயோட்டா லேண்ட் க்ரூஸர்!

தற்சமயம் 170 நாடுகளில் டொயோட்டா லேண்ட் க்ரூஸர் விற்பனை செய்யப்படுகிறது. வருடத்திற்கு 4 லட்சம் லேண்ட்க்ரூஸர் கார்களை இறக்குமதி செய்து வருகிறது. இந்நிலையில் தான் டொயோட்டா லேண்ட் க்ரூஸர் 10 மில்லியன் வாடிக்கையாளர்களை கடந்து விற்பனையில் புதிய மைல்கல்லை எட்டி இருப்பதாக டொயோட்டா மோட்டார் கார்ப்பரேஷன் அறிவித்துள்ளது.

விற்பனையில் இமாலய சாதனை படைத்த டொயோட்டா லேண்ட் க்ரூஸர்!

ஆஸ்திரேலியாவில் ஜிங்க் மற்றும் காப்பரை எடுக்க பூமிக்கு அடியில் 1.6 கிலோமீட்டர் செல்ல உதவும் இதே டொயோட்டா நிறுவன கார் தான், காஸ்ட்டா ரிகா என்ற நாட்டில் சவாலான 3.5 கிலோமீட்டர் சாலையில் பயணம் செய்து மலை உச்சியில் பயிரிடப்பட்ட கேரட்டை அறுவடை செய்யவும் பயன்படுத்தப்படுகிறது.

விற்பனையில் இமாலய சாதனை படைத்த டொயோட்டா லேண்ட் க்ரூஸர்!

இதனால் இக்காரினை, உலகின் அனைத்து மூலை முடுக்கிற்கும் சென்ற கார் என கூறுவர். 50 வருடத்திற்கும் மேல் பழமையான இம்மாடல் காரின் லேட்டஸ்ட் வெளியீடாக வெளிவந்த லேண்ட் க்ரூஸர் 200 VX மாடல், ரூபாய் 1.47 கோடிக்கு விற்பனை செய்யப்படுகிறது. 4.5 லிட்டர் கொள் அளவும், 262 bhp மற்றும் 650 Nm இந்த லேட்டஸ்ட் மாடலின் சிறப்பம்சமாகும். மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் ஆஸ்தான வாகனமாகவும் இருந்தது நினைவுகூறத்தக்கது.

Most Read Articles
மேலும்... #டொயோட்டா #toyota
English summary
Toyota Land Cruiser achieves another record. 10 million sales milestone reached.
Story first published: Tuesday, September 24, 2019, 13:12 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X