டொயோட்டா பிராண்டில் மாருதி பலேனோ கார் அறிமுகம் எப்போது?

டொயோட்டா பிராண்டில் ரீபேட்ஜ் செய்யப்படும் மாருதி பலேனோ கார் அடுத்த நிதி ஆண்டின் இரண்டாவது பாதியில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தகவல்வெளியாகி இருக்கின்றது.

டொயோட்டா பிராண்டில் மாருதி பலேனோ கார் வர இருப்பது தெரிந்ததே. இந்த கார் எப்போது அறிமுகம் செய்யப்பட இருக்கிறது என்பது உள்ளிட்ட கூடுதல் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

டொயோட்டா பிராண்டில் மாருதி பலேனோ கார் அறிமுகம் எப்போது?

முதலீடுகளை பெருமளவு மிச்சப்படுத்தி வருவாயை கூட்டும் விதத்தில், நாட்டின் மிகப்பெரிய கார் நிறுவனமான மாருதி சுஸுகி டொயோட்டா கார் நிறுவனத்துடன் கூட்டணி அமைத்துள்ளது. இதன்படி, எலெக்ட்ரிக் கார்களுக்கான பேட்டரியை உற்பத்தி செய்வதற்கு முடிவு செய்துள்ளன.

டொயோட்டா பிராண்டில் மாருதி பலேனோ கார் அறிமுகம் எப்போது?

மேலும், சில கார் மாடல்களை ரீபேட்ஜ் எஞ்சினியரிங் செய்து தங்களது பிராண்டில் விற்பனை செய்ய முடிவு செய்துள்ளன. அதன்படி, மாருதி விட்டாரா பிரெஸ்ஸா எஸ்யூவியும், பலேனோ காரும் டொயோட்டா பிராண்டில் ரீபேட்ஜ் செய்து விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட இருக்கின்றன.

டொயோட்டா பிராண்டில் மாருதி பலேனோ கார் அறிமுகம் எப்போது?

அதேபோன்று, டொயோட்டா கரொல்லா ஆல்டிஸ் கார் மாருதி பிராண்டில் வர இருக்கிறது. இந்த நிலையில், டொயோட்டா பிராண்டில் ரீபேட்ஜ் செய்யப்படும் மாருதி பலேனோ கார் அடுத்த நிதி ஆண்டின் இரண்டாவது பாதியில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தகவல்வெளியாகி இருக்கின்றது.

டொயோட்டா பிராண்டில் மாருதி பலேனோ கார் அறிமுகம் எப்போது?

டொயோட்டா பிராண்டின் லோகோ உள்ளிட்ட சில மாற்றங்களுடன் மாருதி பலேனோ கார் மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. ஒட்டுமொத்த தோற்றத்தில் அதிக வித்தியாசங்கள் இருக்காது.

டொயோட்டா பிராண்டில் மாருதி பலேனோ கார் அறிமுகம் எப்போது?

அதேநேரத்தில், மாருதி பலேனோ காரைவிட விலை அதிகம் நிர்ணயிக்கப்படுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இதுகுறித்து தீவிரமாக ஆய்வு செய்து வருவதாக டொயோட்டா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

டொயோட்டா பிராண்டில் மாருதி பலேனோ கார் அறிமுகம் எப்போது?

இதைத்தொடர்ந்து, மாருதி விட்டாரா பிரெஸ்ஸா எஸ்யூவியையும் ரீபேட்ஜ் செய்து தனது பிராண்டில் விற்பனைக்கு அறிமுகம் செய்வதற்கு டொயோட்டா திட்டமிட்டுள்ளது. மறுபுறத்தில் மாருதி நிறுவனம் டொயோட்டா கரொல்லா ஆல்டிஸ் காரை தனது பிராண்டில் கொண்டு வருவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளது.

டொயோட்டா பிராண்டில் மாருதி பலேனோ கார் அறிமுகம் எப்போது?

இதற்கான கால அளவு குறித்து தகவல்கள் இல்லை. அடுத்த நிதி ஆண்டில் டொயோட்டா கரொல்லா ஆல்டிஸ் காரை மாருதி நிறுவனமும் விற்பனைக்கு களமிறக்குவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக கருதப்படுகிறது.

டொயோட்டா பிராண்டில் மாருதி பலேனோ கார் அறிமுகம் எப்போது?

மாருதியின் பரந்து விரிந்த டீலர் நெட்வொர்க் மூலமாக டொயோட்டா கரொல்லா ஆல்டிஸ் காரின் விற்பனை வெகுவாக அதிகரிக்கும் வாய்ப்புள்ளது. இதனால், வாடிக்கையாளர்களுக்கு சிறந்த சர்வீஸ் சேவைகளை பெறும் வாய்ப்பு ஏற்படும்.

Most Read Articles
மேலும்... #டொயோட்டா #toyota
English summary
Toyota is said to be working towards the launch of their version of the Maruti Baleno premium hatchback in the Indian market. The Toyota rebadged Maruti Baleno is said to be introduced in the Indian market, sometime during the next fiscal year.
Story first published: Monday, January 14, 2019, 11:13 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X