டொயோட்டாவின் விற்பனையில் தொடரும் இன்னோவா க்ரிஸ்ட்டாவின் ஆதிக்கம்...

டொயோட்டா நிறுவனத்தின் கார்கள் கடந்த நவம்பர் மாதத்தில் 8,312 யூனிட்கள் விற்பனையை பதிவு செய்துள்ளன. இதில் எந்தெந்த மாடல்கள் எத்தனை யூனிட்கள் விற்பனையாகியுள்ளன என்பதை இந்த செய்தியில் பார்ப்போம்.

டொயோட்டாவின் விற்பனையில் தொடரும் இன்னோவா க்ரிஸ்ட்டாவின் ஆதிக்கம்...

டொயோட்டா நிறுவனத்தில் இருந்து கடந்த மாதம் அதிகம் விற்பனையாக காராக வழக்கம்போல் இன்னோவா க்ரிஸ்ட்டா மாடல் உள்ளது. கடந்த நவம்பரில் 3,414 இன்னோவா க்ரிஸ்ட்டா கார்கள் விற்பனையாகி இருந்தாலும் இந்த எண்ணிக்கை 5,425 யூனிட்கள் விற்பனையான 2018 நவம்பரை விட சுமார் 37 சதவீதம் குறைவாகும்.

டொயோட்டாவின் விற்பனையில் தொடரும் இன்னோவா க்ரிஸ்ட்டாவின் ஆதிக்கம்...

7 இருக்கைகளுடன் விற்பனையாகி வரும் இந்த காரின் விற்பனை அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஆட்டோ எக்ஸ்போ நிகழ்ச்சிக்கு பிறகு இன்னும் குறையும் என்றே தெரிகிறது. ஏனெனில் இந்த நிகழ்ச்சியில் இந்த காருக்கு போட்டியாக மிக அதிக தொழிற்நுட்ப அம்சங்களுடன் கியா கார்னிவல் எம்பிவி அறிமுகமாகவுள்ளது.

டொயோட்டாவின் விற்பனையில் தொடரும் இன்னோவா க்ரிஸ்ட்டாவின் ஆதிக்கம்...

இந்த லிஸ்ட்டில் இரண்டாவது இடத்தில் டொயோட்டா க்ளான்ஸா உள்ளது. கடந்த ஜூன் மாதத்தில் அறிமுகமான இந்த கார் கடந்த நவம்பர் மாதத்தில் 2,313 யூனிட்கள் விற்பனையாகியுள்ளது. அறிமுகமானதில் இருந்து அனைத்து மாதங்களிலும் தொடர்ந்து 2,000- 2,500 யூனிட்கள் விற்பனையை பதிவு செய்துவரும் டொயோட்டா க்ளான்ஸா மாடல் மாருதி சுசுகியின் பலேனோ மாடலின் மறு உருவாக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.

டொயோட்டாவின் விற்பனையில் தொடரும் இன்னோவா க்ரிஸ்ட்டாவின் ஆதிக்கம்...

ஃபார்ச்சூனர், 2019 நவம்பரில் சிறந்த முறையில் விற்பனையான மூன்றாவது டொயோட்டா மாடலாக உள்ளது. 1,063 ஃபார்ச்சூனர் கார்கள் கடந்த மாதத்தில் விற்பனையாகியுள்ளன. இந்த எண்ணிக்கை 2018 நவம்பர் மாதத்தின் விற்பனை பதிவான 1,475-ஐ விட 28 சதவீதம் குறைவு.

டொயோட்டாவின் விற்பனையில் தொடரும் இன்னோவா க்ரிஸ்ட்டாவின் ஆதிக்கம்...

913 கார்கள் விற்பனையுடன் டொயோட்டா எடியோஸ் நான்காவது இடத்தில் உள்ளது. இது 1,622 கார்கள் விற்பனையான 2018 நவம்பர் மாதத்தை விட 44 சதவீதம் குறைவு. எடியோஸ் லிவா மற்றும் க்ராஸ் லெட் மாடல்களின் கூட்டணி 314 கார்கள் விற்பனை பதிவுடன் ஐந்தாவது இடத்தில் உள்ளது. இந்த எண்ணிக்கையும் 2018 நவம்பர் மாதத்தை விட 77 சதவீதம் குறைவாகும்.

டொயோட்டாவின் விற்பனையில் தொடரும் இன்னோவா க்ரிஸ்ட்டாவின் ஆதிக்கம்...

இதற்கு அடுத்த 6, 7, 8, 9 மற்றும் 10வது இடங்களில் முறையே டொயோட்டா யாரிஸ் (107), காம்ரி (99), கரொல்லா (76), வெல்ஃபயர் (8), லேண்ட்க்ரூஸர் (5) மாடல்கள் உள்ளன. டொயோட்டா ப்ராடோ மாடல் கடந்த மாதத்தில் ஒன்று கூட விற்பனையாகவில்லை.

டொயோட்டாவின் விற்பனையில் தொடரும் இன்னோவா க்ரிஸ்ட்டாவின் ஆதிக்கம்...

மொத்தமாக டொயோட்டா நிறுவனம் கடந்த நவம்பர் மாதத்தில் 8,312 கார்களை விற்பனை செய்துள்ளது. இந்த மொத்த எண்ணிக்கை 10,721 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்ட 2018 நவம்பர் மாதத்தை விட 22 சதவீதம் குறைவாகும். இதில் கவனிக்கக்கூடிய விஷயம் என்னவென்றால் கடந்த மாதத்தில் ஒரு மாடல் கூட 2018 நவம்பர் மாதத்தை விட அதிக விற்பனையை பதிவு செய்யவில்லை.

டொயோட்டாவின் விற்பனையில் தொடரும் இன்னோவா க்ரிஸ்ட்டாவின் ஆதிக்கம்...

இருப்பினும் ஹோண்டா, ஃபோர்டு, எம்ஜி மோட்டார்ஸ் மற்றும் ஃபோக்ஸ்வேகன் உள்ளிட்ட நிறுவனங்களை முந்தி டொயோட்டா மொத்த விற்பனையில் ஏழாவது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Most Read Articles
மேலும்... #டொயோட்டா #toyota
English summary
Toyota Nov 2019 Sales Analysis Innova Crysta Top
Story first published: Monday, December 9, 2019, 18:16 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X