நடப்பாண்டில் 2வது முறையாக இதை செய்யும் டொயோட்டா... வாடிக்கையாளர்கள் வருந்த காரணம் இதுதான்...

நடப்பாண்டில் 2வது முறையாக டொயோட்டா நிறுவன கார்களின் விலை உயர்கிறது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

நடப்பாண்டில் 2வது முறையாக இதை செய்யும் டொயோட்டா... வாடிக்கையாளர்கள் வருந்த காரணம் இதுதான்...

ஜப்பானை சேர்ந்த டொயோட்டா நிறுவனத்தின் கார்கள் உலகம் முழுவதும் உள்ள வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகவும் புகழ்பெற்று விளங்குகின்றன. டொயோட்டா நிறுவன கார்களின் விலை சற்று அதிகம் என்றாலும் கூட, அவை விற்பனையில் சக்கை போடு போடுகின்றன. டொயோட்டா நிறுவனத்தின் மீது வாடிக்கையாளர்களுக்கு இருக்கும் நம்பிக்கை, அந்நிறுவன கார்களில் காணப்படும் தரம் ஆகியவையே இதற்கு முக்கிய காரணங்கள்.

நடப்பாண்டில் 2வது முறையாக இதை செய்யும் டொயோட்டா... வாடிக்கையாளர்கள் வருந்த காரணம் இதுதான்...

அதாவது டொயோட்டா நிறுவனத்தின் தயாரிப்புகள் கொடுக்கும் பணத்திற்கு மதிப்பு வாய்ந்தவையாக திகழ்கின்றன. தற்போதைய நிலையில் இந்தியாவில் விற்பனையாகும் இன்னோவா கிரிஸ்டா எம்பிவி, பார்ச்சூனர் எஸ்யூவி ஆகிய டொயோட்டா நிறுவன கார்களுக்கு இங்கு பெரிய ரசிகர்கள் பட்டாளமே இருக்கிறது.

நடப்பாண்டில் 2வது முறையாக இதை செய்யும் டொயோட்டா... வாடிக்கையாளர்கள் வருந்த காரணம் இதுதான்...

இந்த சூழலில் தற்போது இந்தியாவில் விற்பனையாகி கொண்டிருக்கும் ஒரு சில டொயோட்டா கார்களின் விலை விரைவில் அதிகரிக்கவுள்ளது. சில மாடல்களின் விலையை உயர்த்த போவதாக டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார்ஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வமாகவே அறிவித்து விட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

நடப்பாண்டில் 2வது முறையாக இதை செய்யும் டொயோட்டா... வாடிக்கையாளர்கள் வருந்த காரணம் இதுதான்...

வரும் ஏப்ரல் 1ம் தேதி முதல் விலை உயர்வு அமலுக்கு வருகிறது. ஆனால் எந்ததெந்த மாடல்களின் விலை உயரப்போகிறது? விலை எவ்வளவு அதிகரிக்கவுள்ளது? என்பது போன்ற கேள்விகளுக்கு இன்னும் உறுதியான விடை கிடைக்கவில்லை. எனினும் 1-2 சதவீதம் வரை மட்டுமே விலை உயர்த்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நடப்பாண்டில் 2வது முறையாக இதை செய்யும் டொயோட்டா... வாடிக்கையாளர்கள் வருந்த காரணம் இதுதான்...

நடப்பாண்டில் இரண்டாவது முறையாக டொயோட்டா நிறுவன கார்களின் விலை உயர்த்தப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன்னதாக கடந்த ஜனவரி மாதம், சில ஹை-எண்ட் தயாரிப்புகளின் விலையை டொயோட்டா நிறுவனம் 4 சதவீதம் வரை உயர்த்தியது. உற்பத்தி செலவு அதிகரிப்பு காரணமாகவே தற்போது டொயோட்டா நிறுவனம் மீண்டும் விலையை உயர்த்துகிறது.

நடப்பாண்டில் 2வது முறையாக இதை செய்யும் டொயோட்டா... வாடிக்கையாளர்கள் வருந்த காரணம் இதுதான்...

இதனிடையே இந்திய மார்க்கெட்டில் பிரீமியம் எம்பிவி ரக கார்களை விற்பனைக்கு அறிமுகம் செய்வது தொடர்பாக டொயோட்டா நிறுவனம் ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. திட்டமிட்டபடி அனைத்தும் சரியாக நடைபெற்றால், அடுத்த 12 முதல் 18 மாதங்களுக்கு உள்ளாக, 2 ஹை எண்ட் எம்பிவி ரக கார்களை டொயோட்டா நிறுவனம் இந்திய மார்க்கெட்டில் விற்பனைக்கு அறிமுகம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Most Read Articles
மேலும்... #டொயோட்டா #toyota
English summary
Toyota To Hike Prices Of Certain Models In India — Prices To Increase From April
Story first published: Tuesday, March 19, 2019, 21:35 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X