இந்தியர்கள் தவம் கிடக்கும் டொயோட்டா கார் முதல் முறையாக தென்பட்டது... விற்பனைக்கு அறிமுகமாகிறதா?

இந்தியர்களிடையே உச்சகட்ட எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள டொயோட்டா ரஷ் கார் முதல் முறையாக தென்பட்டுள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இந்தியர்கள் தவம் கிடக்கும் டொயோட்டா கார் முதல் முறையாக தென்பட்டது... விற்பனைக்கு அறிமுகமாகிறதா?

டொயோட்டா நிறுவனம் இந்தியாவில் க்ளான்சா பிரீமியம் ஹேட்ச்பேக் கார்களை விற்பனைக்கு அறிமுகம் செய்ய முழு வீச்சில் தயாராகி வருகிறது. மாருதி சுஸுகி பலேனோ கார்தான், ரீபேட்ஜ் செய்யப்பட்டு க்ளான்சா என்ற பெயரில் டொயோட்டா பிராண்டில் விற்பனைக்கு அறிமுகமாகிறது.

இந்தியர்கள் தவம் கிடக்கும் டொயோட்டா கார் முதல் முறையாக தென்பட்டது... விற்பனைக்கு அறிமுகமாகிறதா?

இந்தியா மற்றும் சர்வதேச மார்க்கெட்களில் புதிய தயாரிப்புகளை அறிமுகம் செய்வதற்காக டொயோட்டா மற்றும் சுஸுகி ஆகிய இரண்டு நிறுவனங்களும் கைகோர்த்துள்ளன. இதன் ஒரு பகுதியாகதான் டொயோட்டா க்ளான்சா களமிறக்கப்படுகிறது.

இந்தியர்கள் தவம் கிடக்கும் டொயோட்டா கார் முதல் முறையாக தென்பட்டது... விற்பனைக்கு அறிமுகமாகிறதா?

இதுதவிர இந்திய மார்க்கெட்டிற்கு என பிரத்யேகமாக புத்தம் புதிய சி-செக்மெண்ட் எம்பிவி கார் ஒன்றையும் டொயோட்டா மற்றும் சுஸுகி நிறுவனங்கள் உருவாக்கி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. முன்னதாக டொயோட்டா நிறுவனம் ரஷ் காரை இந்தோனேசிய மார்க்கெட்டில் விற்பனை செய்து வருகிறது.

இந்தியர்கள் தவம் கிடக்கும் டொயோட்டா கார் முதல் முறையாக தென்பட்டது... விற்பனைக்கு அறிமுகமாகிறதா?

7 சீட்டர் எஸ்யூவி காரான டொயோட்டா ரஷ் இந்திய மார்க்கெட்டில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என ஏற்கனவே யூகங்கள் கிளம்பியுள்ளன. இப்படிப்பட்ட சூழலில் சில டொயோட்டா ரஷ் கார்கள் இந்திய சாலையில் கேமரா கண்களில் சிக்கியிருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியர்கள் தவம் கிடக்கும் டொயோட்டா கார் முதல் முறையாக தென்பட்டது... விற்பனைக்கு அறிமுகமாகிறதா?

இது புதிய தலைமுறை கார்கள் ஆகும். இதனை வைத்து பார்க்கையில் ரஷ் கார்களை இந்தியாவில் களம் இறக்க டொயோட்டா தீவிரமாக பரிசீலித்து வருகிறதா? என்ற கேள்வி எழுகிறது. அதே சமயம் இங்கு ரஷ் தற்போதைக்கு அறிமுகம் செய்யப்படாது எனவும் சில தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தியர்கள் தவம் கிடக்கும் டொயோட்டா கார் முதல் முறையாக தென்பட்டது... விற்பனைக்கு அறிமுகமாகிறதா?

எனவே சோதனை முயற்சிகளுக்காக மட்டுமே டொயோட்டா நிறுவனம் ரஷ் கார்களை இந்தியாவிற்கு இறக்குமதி செய்திருக்கும் என கூறப்படுகிறது. டொயோட்டா ரஷ் இந்தியாவில் வரும் 2021ம் ஆண்டு களமிறக்கப்படலாம் என சமீபத்திய பத்திரிக்கை செய்தி ஒன்று தெரிவிக்கிறது.

இந்தியர்கள் தவம் கிடக்கும் டொயோட்டா கார் முதல் முறையாக தென்பட்டது... விற்பனைக்கு அறிமுகமாகிறதா?

ஆனால் இது தொடர்பாக டொயோட்டா நிறுவனம் இதுவரை எவ்விதமான அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் வெளியிடவில்லை என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளது. இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் ரஷ் கார் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்து வருகிறது.

இந்தியர்கள் தவம் கிடக்கும் டொயோட்டா கார் முதல் முறையாக தென்பட்டது... விற்பனைக்கு அறிமுகமாகிறதா?

அவர்களுக்கு ரஷ் போன்ற கார்கள் தேவை என்பதே இந்த எதிர்பார்ப்பிற்கு காரணம். என்றாலும் கூட ரஷ் எஸ்யூவி காரை டொயோட்டா நிறுவனம் இந்தியாவில் தற்போது அறிமுகம் செய்யவதற்கான எவ்வித முகாந்திரங்களும் தென்படவில்லை.

இந்தியர்கள் தவம் கிடக்கும் டொயோட்டா கார் முதல் முறையாக தென்பட்டது... விற்பனைக்கு அறிமுகமாகிறதா?

ஏனெனில் புத்தம் புதிய மாடலை மார்க்கெட்டில் அறிமுகம் செய்வதென்றால் பெரிய முதலீடு தேவைப்படும். ஆனால் 2020ம் ஆண்டிற்கு முன்பாக இந்தியாவில் புதிதாக பெரிய முதலீடு செய்யும் திட்டம் எதுவும் தங்களிடம் இல்லை என டொயோட்டா நிறுவனம் ஏற்கனவே கூறியுள்ளது.

இந்தியர்கள் தவம் கிடக்கும் டொயோட்டா கார் முதல் முறையாக தென்பட்டது... விற்பனைக்கு அறிமுகமாகிறதா?

டொயோட்டா ரஷ் காரின் நீளம் 4,435 மிமீ. அகலம் 1,695 மிமீ. உயரம் 1,705 மிமீ. வீல் பேஸ் 2,685 மிமீ. இந்த 7 சீட்டர் எஸ்யூவி காரில், 2NR-VE, 4-சிலிண்டர், ட்யூயல் விவிடி-ஐ பெட்ரோல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 104 பிஎஸ் பவர் மற்றும் 136 என்எம் டார்க் திறனை உருவாக்கும்.

இந்தியர்கள் தவம் கிடக்கும் டொயோட்டா கார் முதல் முறையாக தென்பட்டது... விற்பனைக்கு அறிமுகமாகிறதா?

இந்திய வாடிக்கையாளர்களிடையே டொயோட்டா ரஷ் உச்சகட்ட எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் இந்திய சாலைகளில் டொயோட்டா ரஷ் காண கிடைத்திருப்பது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.

Source: Brajesh Sing

மத்திய அரசின் அதிரடியால் புதிய கார்கள் விலை தாறுமாறாக பல லட்ச ரூபாய் உயர்கிறது... ஏன் தெரியுமா?

டொயோட்டா ரஷ் இந்திய வாடிக்கையாளர்களின் ஆவலை தூண்டியுள்ள சூழலில், டொயோட்டா இன்னோவா கிரிஸ்டா மற்றும் பார்ச்சூனர் ஆகிய கார்கள் இங்கு ஏற்கனவே மிகவும் பிரபலமாக உள்ளன. ஆனால் மத்திய அரசின் பிஎஸ்-6 அதிரடி காரணமாக இவ்விரு கார்களின் விலையும் மிக கடுமையாக உயரவுள்ளது.

மத்திய அரசின் அதிரடியால் புதிய கார்கள் விலை தாறுமாறாக பல லட்ச ரூபாய் உயர்கிறது... ஏன் தெரியுமா?

எனவே இவ்விரு கார்களையும் வாங்க நீங்கள் திட்டமிட்டிருந்தால், உடனே வாங்கி விடுங்கள். இதுகுறித்த விரிவான தகவல்களை இனி பார்க்கலாம். ஆனால் நீங்கள் பலவீனமான இதயம் கொண்டவர் என்றால், விலை எவ்வளவு உயரவுள்ளது? என்பதை தெரிந்து கொள்ள வேண்டாம்!!

மத்திய அரசின் அதிரடியால் புதிய கார்கள் விலை தாறுமாறாக பல லட்ச ரூபாய் உயர்கிறது... ஏன் தெரியுமா?

இந்தியாவில் வரும் 2020ம் ஆண்டு ஏப்ரல் 1ம் தேதி முதல் மிகவும் கடுமையான பிஎஸ்-6 மாசு உமிழ்வு விதிகள் அமலுக்கு வரவுள்ளன. எனவே அனைத்து நிறுவனங்களும் தங்கள் வாகனங்களின் இன்ஜின்களை வேக வேகமாக பிஎஸ்-6 விதிமுறைகளுக்கு ஏற்ப மேம்படுத்தி வருகின்றன. இதற்காக அனைத்து வாகன நிறுவனங்களும் மிகப்பெரிய அளவில் முதலீடு செய்துள்ளன.

மத்திய அரசின் அதிரடியால் புதிய கார்கள் விலை தாறுமாறாக பல லட்ச ரூபாய் உயர்கிறது... ஏன் தெரியுமா?

பெட்ரோல் இன்ஜின்களை பிஎஸ்-6 விதிமுறைகளுக்கு இணங்கும் வகையில் அப்டேட் செய்ய ஆகும் செலவு குறைவுதான். அதே சமயம் டீசல் இன்ஜின்களை பிஎஸ்-6 தரத்திற்கு இணையாக மேம்படுத்த அதிக செலவு ஆகும். எனவே பிஎஸ்-6 விதிமுறைகள் அமலுக்கு வந்த பிறகு டீசல் இன்ஜின் கார்களின் விலை வெகுவாக உயரவுள்ளது.

மத்திய அரசின் அதிரடியால் புதிய கார்கள் விலை தாறுமாறாக பல லட்ச ரூபாய் உயர்கிறது... ஏன் தெரியுமா?

குறிப்பாக டொயோட்டா நிறுவனத்தின் புகழ்பெற்ற மாடல்களான பார்ச்சூனர் மற்றும் இன்னோவா கிரிஸ்டா ஆகிய 2 கார்களின் டீசல் மாடல்களின் விலை மிக கடுமையாக உயரவுள்ளதாக தற்போது வெளியாகியுள்ள தகவல்கள் தெரிவிக்கின்றன. இதில், டொயோட்டா பார்ச்சூனர் எஸ்யூவி ரக கார் ஆகும். அதே சமயம் டொயோட்டா இன்னோவா கிரிஸ்டா எம்பிவி ரகத்தை சேர்ந்தது.

மத்திய அரசின் அதிரடியால் புதிய கார்கள் விலை தாறுமாறாக பல லட்ச ரூபாய் உயர்கிறது... ஏன் தெரியுமா?

தற்போதைய நிலையிலேயே இவை இரண்டின் விலையும் கொஞ்சம் அதிகம்தான். எனினும் மிக சிறப்பான கட்டுமான தரம், டொயோட்டா நிறுவனத்தின் மீதான நம்பகத்தன்மை உள்ளிட்ட காரணங்களால், இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில், பார்ச்சூனர் மற்றும் இன்னோவா கிரிஸ்டா ஆகிய இரண்டு கார்களுக்கும் மிகப்பெரிய ஆதரவு உள்ளது.

மத்திய அரசின் அதிரடியால் புதிய கார்கள் விலை தாறுமாறாக பல லட்ச ரூபாய் உயர்கிறது... ஏன் தெரியுமா?

தற்போது டொயோட்டா பார்ச்சூனர் காரின் பேஸ் டீசல் வேரியண்ட்டின் (2.8 4×2 மேனுவல் டிரான்ஸ்மிஷன்) டெல்லி எக்ஸ்ஷோரூம் விலை 29.84 லட்ச ரூபாய். அதே சமயம் டொயோட்டா இன்னோவா கிரிஸ்டா காரின் பேஸ் டீசல் வேரியண்ட்டின் தற்போதைய டெல்லி எக்ஸ்ஷோரூம் விலை 15.67 லட்ச ரூபாய் என்பது குறிப்பிடத்தக்கது.

மத்திய அரசின் அதிரடியால் புதிய கார்கள் விலை தாறுமாறாக பல லட்ச ரூபாய் உயர்கிறது... ஏன் தெரியுமா?

இந்த 2 கார்களும் அந்தந்த செக்மெண்ட்டில் மிக சிறப்பாக விற்பனையாகி வருகின்றன. அத்துடன் மிக நீண்ட காலமாக தங்களுக்கென தனி இடத்தை அவை உருவாக்கி வைத்துள்ளன. ஆனால் அடுத்த ஆண்டு முதல் இந்த 2 கார்களையும் வாங்க உங்களுக்கு மனம் வருமா? என்பது உறுதியாக தெரியவில்லை.

மத்திய அரசின் அதிரடியால் புதிய கார்கள் விலை தாறுமாறாக பல லட்ச ரூபாய் உயர்கிறது... ஏன் தெரியுமா?

அதிரடியான விலை உயர்வுதான் இதற்கு காரணம். ஆம், டொயோட்டா பார்ச்சூனர் டீசல் காரின் விலை 4.5 லட்ச ரூபாய் வரை உயரவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதே சமயம் டொயோட்டா இன்னோவா கிரிஸ்டா டீசல் காரின் விலை 3 முதல் 4.5 லட்ச ரூபாய் வரை உயர வாய்ப்புகள் உள்ளதாக தெரிகிறது.

 மத்திய அரசின் அதிரடியால் புதிய கார்கள் விலை தாறுமாறாக பல லட்ச ரூபாய் உயர்கிறது... ஏன் தெரியுமா?

நம்ப முடியவில்லையா? ஆனால் நம்பித்தான் ஆக வேண்டும். அடுத்த ஆண்டு பிஎஸ்-6 விதிமுறைகளுக்கு பிறகு இந்த கடுமையான விலை உயர்வு எதிர்பார்க்கப்படுகிறது. எனவே இந்த 2 கார்களையும் வாங்க வேண்டும் என நீங்கள் திட்டமிட்டு கொண்டிருந்தால், அதற்கு இதுவே சரியான நேரம். பல்வேறு காரணங்களால் உங்கள் திட்டம் தள்ளி போய் கொண்டே இருக்கலாம்.

 மத்திய அரசின் அதிரடியால் புதிய கார்கள் விலை தாறுமாறாக பல லட்ச ரூபாய் உயர்கிறது... ஏன் தெரியுமா?

ஆனால் இனியும் தாமதித்தால் நீங்கள் அதிக விலை கொடுக்க வேண்டியதாக இருக்கும். எனவே உடனடியாக டொயோட்டா ஷோரூமிற்கு சென்று விடுங்கள். அத்துடன் தற்போது மார்க்கெட்டில் மந்த நிலை நிலவி வருகிறது. எனவே இதனை பயன்படுத்தி கொண்டு டீலர்ஷிப்பில் நீங்கள் அடித்து பேரம் பேசலாம்.

 மத்திய அரசின் அதிரடியால் புதிய கார்கள் விலை தாறுமாறாக பல லட்ச ரூபாய் உயர்கிறது... ஏன் தெரியுமா?

பிஎஸ்-6 விதிமுறைகளுக்கு இணங்க வேண்டும் என்பதற்காக டீசல் கார்களின் விலையை 15-20 சதவீதம் வரை உயர்த்துவதற்கு டொயோட்டா நிறுவனம் திட்டமிட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுகுறித்து ET Auto செய்தி வெளியிட்டுள்ளது. ஆனால் விலை உயர்வு எவ்வளவு? என்பது தொடர்பான இறுதி முடிவு இன்னும் எட்டப்படவில்லை.

 மத்திய அரசின் அதிரடியால் புதிய கார்கள் விலை தாறுமாறாக பல லட்ச ரூபாய் உயர்கிறது... ஏன் தெரியுமா?

தற்போது வெளிவந்துள்ள தகவல்களை வைத்து பார்த்தால், இது அதிகப்படியான விலை உயர்வுதான். எனவே எதிர்காலத்தில் இதை விட குறைவான விலையில் கிடைக்கும் போட்டியாளர்களின் கார் மாடல்களுக்கு வாடிக்கையாளர்கள் மாறுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. இருந்தபோதும் விலை உயர்வதற்கு முன்னதாகவே இந்த கார்களை வாங்கி விட பலர் நினைப்பார்கள்.

 மத்திய அரசின் அதிரடியால் புதிய கார்கள் விலை தாறுமாறாக பல லட்ச ரூபாய் உயர்கிறது... ஏன் தெரியுமா?

எனவே வரும் மாதங்களில், அதாவது பிஎஸ்-6 விதிமுறைகள் அமலுக்கு வருவதற்கு முன்னதாக டொயோட்டா பார்ச்சூனர் மற்றும் இன்னோவா கிரிஸ்டா கார்களின் விற்பனை உயர்வதற்கான வாய்ப்புகளும் உள்ளன. தற்போது இந்திய மார்க்கெட்டில் நிலவி வரும் மந்த நிலையால் அனைத்து கார் நிறுவனங்களும் மிக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

 மத்திய அரசின் அதிரடியால் புதிய கார்கள் விலை தாறுமாறாக பல லட்ச ரூபாய் உயர்கிறது... ஏன் தெரியுமா?

இந்த கடுமையான சரிவில் இருந்து மீண்டு வர டொயோட்டா நிறுவனத்திற்கு இது உதவலாம். இதனிடையே மிகவும் கடுமையான பிஎஸ்-6 மாசு உமிழ்வு விதிமுறைகளுக்கு ஏற்ப டீசல் இன்ஜின்களை மேம்படுத்துவது அவ்வளவு லாபகரமானதாக இருக்காது எனவும் சில நிறுவனங்கள் நினைத்து வருகின்றன.

 மத்திய அரசின் அதிரடியால் புதிய கார்கள் விலை தாறுமாறாக பல லட்ச ரூபாய் உயர்கிறது... ஏன் தெரியுமா?

எனவே பிஎஸ்-6 விதிமுறைகள் அமலுக்கு வந்த பிறகு டீசல் இன்ஜின் கார்களின் உற்பத்தியை நிறுத்தி விடுவது என அவை முடிவு செய்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. எது எப்படியோ பிஎஸ்-6 விதிமுறைகள் இந்தியாவின் வாகன மார்க்கெட்டை தலை கீழாக புரட்டி போட போகின்றன என்பது மட்டும் உறுதி.

English summary
Toyota Rush Spotted In India. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X