இந்திய மக்களின் மிக நீண்ட நாள் எதிர்பார்ப்பு... அதகளம் செய்ய களம் இறங்குகிறதா புதிய டொயோட்டா கார்?

இந்திய வாடிக்கையாளர்கள் மிக நீண்ட நாட்களாக எதிர்பார்த்து கொண்டிருக்கும் டொயோட்டா ரஷ் காரின் அறிமுகம் தொடர்பாக புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

இந்திய மக்களின் மிக நீண்ட நாள் எதிர்பார்ப்பு... அதகளம் செய்ய களம் இறங்குகிறதா புதிய டொயோட்டா கார்?

டொயோட்டா நிறுவனத்தின் ரஷ் (Toyota Rush) கார், பல்வேறு சர்வதேச மார்க்கெட்களில் பேபி பார்ச்சூனர் என கருதப்பட்டு வருகிறது. பிலிப்பைன்ஸ் மற்றும் தாய்லாந்து போன்ற ஆசிய மார்க்கெட்களிலும் டொயோட்டா ரஷ் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இந்திய மக்களின் மிக நீண்ட நாள் எதிர்பார்ப்பு... அதகளம் செய்ய களம் இறங்குகிறதா புதிய டொயோட்டா கார்?

இது க்ராஸ்ஓவர் எஸ்யூவி ரக கார் ஆகும். ரஷ் காரின் லேட்டஸ்ட் ஜென்ரேஷன் மாடல், கடந்த 2017ம் ஆண்டு நவம்பர் மாதம் வெளியிடப்பட்டது. அப்போது ரஷ் காருக்கு டொயோட்டா நிறுவனம் புதிய ஸ்டைலை கொடுத்திருந்தது. அத்துடன் பல்வேறு கூடுதல் வசதிகளும் வழங்கப்பட்டன.

இந்திய மக்களின் மிக நீண்ட நாள் எதிர்பார்ப்பு... அதகளம் செய்ய களம் இறங்குகிறதா புதிய டொயோட்டா கார்?

டிஎன்ஜிஏ (TNGA - Toyota New Global Architecture) பிளாட்பார்ம் அடிப்படையில் டொயோட்டா ரஷ் கார் உருவாக்கப்பட்டுள்ளது. டொயோட்டா கேம்ரி உள்பட பல்வேறு மாடல்களும் இதே பிளாட்பார்ம் அடிப்படையில்தான் உருவாக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

இந்திய மக்களின் மிக நீண்ட நாள் எதிர்பார்ப்பு... அதகளம் செய்ய களம் இறங்குகிறதா புதிய டொயோட்டா கார்?

சர்வதேச மார்க்கெட்களில் விற்பனை செய்யப்படும் டொயோட்டா ரஷ் காரின் நீளம் 4,435 மிமீ, அகலம் 1,695 மிமீ, உயரம் 1,705 மிமீ. இதன் வீல் பேஸ் 2,685 மிமீ. க்ரவுண்ட் க்ளியரன்ஸ் 220 மிமீ. டொயோட்டா ரஷ் காரின் க்ரவுண்ட் க்ளியரன்ஸ் சிறப்பான ஒன்றாக பார்க்கப்படுகிறது.

இந்திய மக்களின் மிக நீண்ட நாள் எதிர்பார்ப்பு... அதகளம் செய்ய களம் இறங்குகிறதா புதிய டொயோட்டா கார்?

இந்த சூழலில் டொயோட்டா ரஷ் கார் இந்திய மார்க்கெட்டிலும் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட இருப்பதாக கடந்த சில மாதங்களாகவே தகவல்கள் உலா வந்து கொண்டுள்ளன. ஆனால் அதனை டொயோட்டா நிறுவனம் உறுதி செய்யவில்லை.

இந்திய மக்களின் மிக நீண்ட நாள் எதிர்பார்ப்பு... அதகளம் செய்ய களம் இறங்குகிறதா புதிய டொயோட்டா கார்?

டொயோட்டா ரஷ் கார் இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் உச்சகட்ட எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே டொயோட்டா ரஷ் கார் தொடர்பாக புதிய தகவல் ஒன்று தற்போது வெளியாகி, வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது.

இந்திய மக்களின் மிக நீண்ட நாள் எதிர்பார்ப்பு... அதகளம் செய்ய களம் இறங்குகிறதா புதிய டொயோட்டா கார்?

டொயோட்டா ரஷ் கார் இந்திய மார்க்கெட்டில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படுவது உறுதியாகி விட்டதாக கார்பிளாக்இந்தியா தளம் செய்தி வெளியிட்டுள்ளது. அனேகமாக வரும் 2021ம் ஆண்டில் டொயோட்டா ரஷ் இந்தியாவில் களமிறக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்திய மக்களின் மிக நீண்ட நாள் எதிர்பார்ப்பு... அதகளம் செய்ய களம் இறங்குகிறதா புதிய டொயோட்டா கார்?

இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டால், புதிய தலைமுறை ஹூண்டாய் கிரெட்டாவுடன் டொயோட்டா ரஷ் போட்டியிடும். புதிய தலைமுறை ஹூண்டாய் கிரெட்டா கார் அடுத்த ஆண்டு விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ளது.

MOST READ: மாருதி சுஸுகி ஏஜிஎஸ்: அனைத்து இந்தியர்களுக்கும் ஓர் புரட்சிகரமான ஆட்டோமெட்டிக் கியர் பாக்ஸ்

இந்திய மக்களின் மிக நீண்ட நாள் எதிர்பார்ப்பு... அதகளம் செய்ய களம் இறங்குகிறதா புதிய டொயோட்டா கார்?

ஹூண்டாய் கிரெட்டா தவிர, டாடா ஹாரியர் மற்றும் மஹிந்திரா எக்ஸ்யூவி500 கார்களின் லோ-எண்ட் மாடல்களுடனும் டொயோட்டா ரஷ் கார் போட்டியிடும். டொயோட்டா ரஷ் கார் இந்திய மார்க்கெட்டிற்கு 7-சீட்டர் மாடலாக கொண்டு வரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்திய மக்களின் மிக நீண்ட நாள் எதிர்பார்ப்பு... அதகளம் செய்ய களம் இறங்குகிறதா புதிய டொயோட்டா கார்?

இதில், மஹிந்திரா எக்ஸ்யூவி500 காரின் க்ரவுண்ட் க்ளியரன்ஸ் 200 மிமீ மட்டுமே. அதாவது டொயோட்டா ரஷ் காரை காட்டிலும், மஹிந்திரா எக்ஸ்யூவி500 காரின் க்ரவுண்ட் க்ளியரன்ஸ் 20 மிமீ குறைவு. ஆனால் நீளம், அகலம், உயரம் ஆகிய அம்சங்களில் ரஷ் காரை விட எக்ஸ்யூவி500 பெரியது.

இந்திய மக்களின் மிக நீண்ட நாள் எதிர்பார்ப்பு... அதகளம் செய்ய களம் இறங்குகிறதா புதிய டொயோட்டா கார்?

அதே சமயம் தற்போதைய தலைமுறை ஹூண்டாய் கிரெட்டா காரானது, ரஷ் காரை விட சிறியதுதான். அத்துடன் அதன் வீல் பேஸ் கூட சிறியதே. ஆனால் அடுத்த தலைமுறை ஹூண்டாய் கிரெட்டா கார் பெரியதாகவும், அனைத்து அம்சங்களிலும் சிறந்ததாகவும் வரவுள்ளது.

இந்திய மக்களின் மிக நீண்ட நாள் எதிர்பார்ப்பு... அதகளம் செய்ய களம் இறங்குகிறதா புதிய டொயோட்டா கார்?

டொயோட்டா ரஷ் காரில், 2NR-VE 1.5 லிட்டர் ட்யூயல் விவிடி-ஐ நான்கு-சிலிண்டர் பெட்ரோல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 6,000 ஆர்பிஎம்மில் 105 பிஎஸ் பவரையும், 4,200 ஆர்பிஎம்மில் 136 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்த கூடியது.

இந்திய மக்களின் மிக நீண்ட நாள் எதிர்பார்ப்பு... அதகளம் செய்ய களம் இறங்குகிறதா புதிய டொயோட்டா கார்?

இதில், 5 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் அல்லது 4 ஸ்பீடு ஆட்டோமெட்டிக் டிரான்ஸ்மிஷன் ஆப்ஷன்கள் வழங்கப்படுகின்றன. ஆனால் இந்திய மார்க்கெட்டிற்கான ரஷ் கார், டொயோட்டா யாரிஸ் செடானுடன் இன்ஜினை பகிர்ந்து கொள்வதற்கான வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது.

இந்திய மக்களின் மிக நீண்ட நாள் எதிர்பார்ப்பு... அதகளம் செய்ய களம் இறங்குகிறதா புதிய டொயோட்டா கார்?

அதாவது இந்தியாவிற்கான டொயோட்டா ரஷ் காரில், 1.5 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் வழங்கப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 106 பிஎச்பி பவர் மற்றும் 140 என்எம் டார்க் திறனை உருவாக்க கூடியது.

இந்திய மக்களின் மிக நீண்ட நாள் எதிர்பார்ப்பு... அதகளம் செய்ய களம் இறங்குகிறதா புதிய டொயோட்டா கார்?

அதேபோல் இந்திய மார்க்கெட்டிற்கு நன்றாக பொருந்தும் வகையில் மேலும் பல்வேறு மாற்றங்களும் ரஷ் காரில் செய்யப்படும் என கூறப்படுகிறது. வசதிகளை பொறுத்தவரை சர்வதேச மார்க்கெட்டிற்கான மாடலில் பல்வேறு சிறப்பம்சங்கள் இடம்பெற்றுள்ளன.

இந்திய மக்களின் மிக நீண்ட நாள் எதிர்பார்ப்பு... அதகளம் செய்ய களம் இறங்குகிறதா புதிய டொயோட்டா கார்?

இதில், எல்இடி ஹெட்லைட்ஸ் மற்றும் எல்இடி டிஆர்எல்கள், 17 இன்ச் ட்யூயல் டோன் அலாய் வீல்கள், கீ லெஸ் எண்ட்ரி, புஷ்-பட்டன் ஸ்டார்ட், 7.0 இன்ச் டச் ஸ்கீரின் இன்போடெயின்மெண்ட் சிஸ்டம் ஆகியவை குறிப்பிடத்தகுந்தவை.

இந்திய மக்களின் மிக நீண்ட நாள் எதிர்பார்ப்பு... அதகளம் செய்ய களம் இறங்குகிறதா புதிய டொயோட்டா கார்?

பாதுகாப்பு வசதிகள் என எடுத்து கொண்டால், டொயோட்டா ரஷ் காரின் டாப் வேரியண்ட்டில், ஆறு ஏர் பேக்குகள், இபிடி உடனான ஏபிஎஸ், ஸ்டெபிளிட்டி கண்ட்ரோல் மற்றும் ஹில் ஸ்டார்ட் அஸிஸ்ட் ஆகியவை வழங்கப்படுகின்றன.

இந்திய மக்களின் மிக நீண்ட நாள் எதிர்பார்ப்பு... அதகளம் செய்ய களம் இறங்குகிறதா புதிய டொயோட்டா கார்?

இந்தியாவில் உள்ள ஒரு சில டொயோட்டா டீலர்ஷிப்களில் விசாரித்ததில், ரஷ் காரின் ஆரம்ப விலையை ரூ.13 லட்சம் என்ற அளவில் டொயோட்டா நிறுவனம் நிர்ணயிக்க வாய்ப்புகள் இருப்பது தெரியவந்துள்ளது. ஆனால் இதனை டொயோட்டா நிறுவனம் இன்னும் உறுதி செய்யவில்லை.

Most Read Articles
மேலும்... #டொயோட்டா #toyota
English summary
Toyota Rush SUV India Launch Details. Read in Tamil
Story first published: Thursday, May 30, 2019, 17:50 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X