மலிவு விலை பேட்டரி காரை களமிறக்க இரு ஜம்பவான்கள் இணைவு: மின்வாகன உலகின் புரட்சிக்கான ஆரம்பம் இதுதான்

சிறிய மற்றும் பட்ஜெட் விலையிலான பேட்டரி காரை இந்தியாவில் களமிறக்க இரு ஜம்பவான் நிறுவனங்கள் கூட்டு சேர்ந்துள்ளன. இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் காணலாம்.

மலிவு விலை பேட்டரி காரை களமிறக்க இரு ஜம்பவான்கள் இணைவு... மின்வாகன உலகின் புரட்சிக்கான ஆரம்பம் இதுதான்...

உலகம் நாடுகள் அனைத்திற்குமான மிகப்பெரிய தேடல்களில் ஒன்றாக மின்சார வாகனங்கள் மாறியிருக்கின்றன. இதற்கு அண்மைக் காலங்களாக மிகப்பெரிய அச்சுறுத்தலாக மாறிவரும் காற்று மாசு மற்றும் சுற்றுப்புறசூழல் மாசு முக்கிய காரணமாக இருக்கின்றது.

இந்த மாசுறுதலுக்கு பல்வேறு காரணங்கள் இருக்கின்றன. ஆனால், அதில் முக்கிய காரணியாக இருப்பது, பெட்ரோல் மற்றும் டீசல் வாகனங்களின் பயன்பாடுதான்.

மலிவு விலை பேட்டரி காரை களமிறக்க இரு ஜம்பவான்கள் இணைவு... மின்வாகன உலகின் புரட்சிக்கான ஆரம்பம் இதுதான்...

வாகனங்கள் மனித வாழ்க்கைக்கு இன்றியமையாத ஒன்றாக மாறிவிட்டன. ஆகையால், வாகனங்களை முற்றுலுமாக ஒழித்துக்கட்ட முடியாது. ஆனால், எரிபொருள் வாகனங்களுக்கு மாற்றாக சுற்றுப்புறச் சூழலுக்கு நண்பனாக விளங்கும் மாற்று வழியை நம்மால் கையாள முடியும்.

அதில், தற்போது முதல் இடத்தில் மின்சார வாகனங்கள் இருக்கின்றன. இவை பூஜ்ஜியம் உமிழ்வு தன்மைக் கொண்டவையாகும்.

மலிவு விலை பேட்டரி காரை களமிறக்க இரு ஜம்பவான்கள் இணைவு... மின்வாகன உலகின் புரட்சிக்கான ஆரம்பம் இதுதான்...

இதன்காரணமாகவே, உலக நாடுகள் அனைத்தும், தங்கள் சாலைகள் அனைத்தையும் மின்சார வாகனங்களே ஆள வேண்டும் என எண்ணுகின்றன. இதில், இந்தியாவும் விதி விலக்கல்ல. எனவே, பல்வேறு வாகன உற்பத்தி நிறுவனங்கள் தங்களின் அனைத்து கவனத்தையும் மின் வாகன தயாரிப்பின் பக்கம் திருப்பியுள்ளன.

மலிவு விலை பேட்டரி காரை களமிறக்க இரு ஜம்பவான்கள் இணைவு... மின்வாகன உலகின் புரட்சிக்கான ஆரம்பம் இதுதான்...

இந்நிலையில், ஜப்பான் நாட்டின் மிக முக்கிய வாகன தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான டொயோட்டா, சுஸுகி மோட்டார் கார்பரேஷனுடன் இணைந்து மின் வாகனத்தை உற்பத்தி செய்ய முடிவு செய்துள்ளது. இதற்காக புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதுகுறித்த தகவலை ஆங்கில செய்தி தளம் ஈடி ஆட்டோ வெளியிட்டுள்ளது.

மலிவு விலை பேட்டரி காரை களமிறக்க இரு ஜம்பவான்கள் இணைவு... மின்வாகன உலகின் புரட்சிக்கான ஆரம்பம் இதுதான்...

இந்த ஒப்பந்தத்தின்படி, தொழில்நுட்பம் சார்ந்த உதவியை டொயோட்டா நிறுவனமும், வாகன கட்டுமானத்தை சுஸுகியும் கையாள இருக்கின்றது.

இவ்விரு நிறுவனங்களின் இணைவில் தயாராகும் வாகனங்கள் இந்தியா உட்பட உலகின் பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய இருக்கின்றன. ஆனால், இதில் இந்திய சந்தையைக் கருத்தில் கொண்டே இந்த வாகனம் தயாராகி வருகின்றது. எனவே, முதலில் அது இந்தியாவிலேயே களமிறக்கப்பட உள்ளது.

மலிவு விலை பேட்டரி காரை களமிறக்க இரு ஜம்பவான்கள் இணைவு... மின்வாகன உலகின் புரட்சிக்கான ஆரம்பம் இதுதான்...

இதற்கான ஒப்பந்தம் சமீபத்தில் போடப்பட்டதல்ல, கடந்த 2017ம் ஆண்டு நவம்பர் மாதமே போடப்பட்டுள்ளது. அதில், டொயோட்டா-சுஸுகி ஆகிய இரு நிறுவனங்கள் இணைந்து மின்சார வாகனங்களை தயாரித்து விற்பனைச் செய்யப்படும் என கூறப்பட்டுள்ளது.

மலிவு விலை பேட்டரி காரை களமிறக்க இரு ஜம்பவான்கள் இணைவு... மின்வாகன உலகின் புரட்சிக்கான ஆரம்பம் இதுதான்...

தொடர்ந்து இந்த வாகனங்கள் இந்திய சந்தை மட்டுமின்றி சில தயாரிப்புகளை டொயோட்டாவிற்கு வழங்கவும் ஒப்பந்தத்தில் கூறப்பட்டுள்ளது.

இவ்விரு நிறுவனங்களும் இணைந்து தயாரிக்கும் புதிய பேட்டரி கார், மலிவு விலைக் கொண்ட சிறிய ரக காராக இருக்கும் என தகவல் தெரிவிக்கின்றன.

மலிவு விலை பேட்டரி காரை களமிறக்க இரு ஜம்பவான்கள் இணைவு... மின்வாகன உலகின் புரட்சிக்கான ஆரம்பம் இதுதான்...

இதுகுறித்து டொயோட்டா நிறுவனத்தின் துணை தலைவர் ஷிகேகி டெராஷி கூறியதாவது, "ஜப்பானில் டோயோட்டாவிற்கு நல்ல வரவேற்பு நிலவுகின்றது. ஆனால், இந்தியாவில் அது குறைவாகவே காணப்படுகின்றது. ஆகையால், மாருதி சுஸுகி நிறுவனத்துடன் இணைந்து இந்தியாவில் புதிய வரலாற்றைப் படைக்க நாங்கள் இந்த காம்பேக்ட் ரக மின்சார காரை அறிமுகம் செய்ய இருக்கின்றோம்" என்றார்.

மலிவு விலை பேட்டரி காரை களமிறக்க இரு ஜம்பவான்கள் இணைவு... மின்வாகன உலகின் புரட்சிக்கான ஆரம்பம் இதுதான்...

மேலும் பேசிய அவர், "டொயோட்டா-மாருதி இணைப்பில் தயாராகும் பேட்டரி கார், உருவத்தில் சிறியதாகவும், விலைக்கேற்ற தரத்திலும் கிடைக்கும். இதற்கான பணியில் இரு நிறுவனங்களும் தற்போது தீவிரம் காட்டி வருகின்றது. ஆனால், அது எப்போது விற்பனைக்கு வரும் என்பது மட்டும் ரகசியம்" என்றார்.

ஆகையால், இரு ஜாம்பவான் நிறுவனங்களின் இணைவில் தயாராகும் புதிய எலெக்ட்ரிக் கார் எப்போது இந்தியாவில் களமிறங்கும் என்பது கேள்விக்குறியாகியுள்ளது.

மலிவு விலை பேட்டரி காரை களமிறக்க இரு ஜம்பவான்கள் இணைவு... மின்வாகன உலகின் புரட்சிக்கான ஆரம்பம் இதுதான்...

இருப்பினும், மாருதி சுஸுகி நிறுவனம் ஏற்கனவே அதன் வேகன் ஆர் மாடலை மின்சார காராக தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தகுந்தது. ஆனால், பரிசோதனையின் அடிப்படையிலேயே வெறும் 50 யூனிட்டுகளை மட்டுமே அது தயாரித்துள்ளது. இவை, தனியாரின் பயன்பாட்டிற்கு அல்லாமல் வணிகத்துறை பயன்பாட்டிற்கு மட்டுமே களமிறக்கப்பட இருக்கின்றது என கூறப்படுகின்றது.

மலிவு விலை பேட்டரி காரை களமிறக்க இரு ஜம்பவான்கள் இணைவு... மின்வாகன உலகின் புரட்சிக்கான ஆரம்பம் இதுதான்...

எலெக்ட்ரிக் வெர்ஷன் வேகன் ஆர் கார் இந்தியாவில் களமிறங்கும்போது ரூ. 12 லட்சம் என்ற விலையில் களமிறக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Most Read Articles
English summary
Toyota Suzuki Builds Compact Battery Electric For India. Read In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X