டொயோட்டா வெல்ஃபயர் சொகுசு காரில் அதுவே இல்லையா... என்னங்க சொல்றீங்க?

டொயோட்டா வெல்ஃபயர் சொகுசு ரக எம்பிவி கார் விரைவில் இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட இருக்கிறது. முதல்கட்டமாக ஒதுக்கீடு செய்யப்பட்ட வெல்ஃபயர் கார்கள் தற்போது டீலர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றன.

டொயோட்டா வெல்ஃபயர் சொகுசு காரில் அதுவே இல்லையா... என்னங்க சொல்றீங்க?

மெர்சிடிஸ் பென்ஸ் வி க்ளாஸ் சொகுசு காருக்கு இணையான ரகத்தில் வர இருக்கும் இந்த புதிய கார் பெரும் பணக்காரர்கள் மற்றும் நட்சத்திர விடுதிகளின் கவனத்தை ஈர்த்துள்ளது. இந்த காரில் ஏராளமான சிறப்பு அம்சங்கள் இருப்பதே வாடிக்கையாளர்களை ஈர்த்து வருவதற்கு காரணமாக இருக்கிறது. இந்த நிலையில், டீலருக்கு வந்த முதல் வெல்ஃபயர் கார் ஒன்றின் படம் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டுள்ளது.

டொயோட்டா வெல்ஃபயர் சொகுசு காரில் அதுவே இல்லையா... என்னங்க சொல்றீங்க?

எதிர்பார்த்தது போலவே, படங்களில் இந்த கார் மிக பிரம்மாண்டமாகவும், அதிக இடவசதியையும் பெற்றிருக்கிறது. எல்இடி ஹெட்லைட்டுகள், கார்னரிங் லைட்டுகள், அலை அலையாய் ஒளிரும் டர்ன் இண்டிகேட்டர்கள், பவர் ஸ்லைடு வசதியுடன் கதவுகள், சாய்மான வசதியுடன் இருக்கைகள், இரட்டை சன்ரூஃப் ஆகியவை இடம்பெற்றுள்ளன.

டொயோட்டா வெல்ஃபயர் சொகுசு காரில் அதுவே இல்லையா... என்னங்க சொல்றீங்க?

இந்த காரில் பல்வேறு வண்ணங்களில் ஒளிரும் ஆம்பியன்ட் லைட் சிஸ்டம், ஒவ்வொரு இருக்கைக்கும் தனித்தனி டேபிள், வெதுவெதுப்பாக மாற்றும் வசதியுடன் இருக்கைகள், மர அலங்கார வேலைப்பாடுகளும் இடம்பெற்றுள்ளன. இந்த காரில் இடம்பெற்றிருக்கும் வசதிகளை இவ்வாறு அடுக்கிக் கொண்டே போகலாம்.

டொயோட்டா வெல்ஃபயர் சொகுசு காரில் அதுவே இல்லையா... என்னங்க சொல்றீங்க?

ஆனால், எல்லோரும் நம்பிக்கொண்டிருந்த ஒரு சிறந்த விஷயம் இந்த காரில் இல்லை என்பது பெரும் ஏமாற்றத்தை தந்துள்ளது. ஆம், டீலருக்கு வந்துள்ள வெல்ஃபயர் காரில் தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் இல்லை. இந்த காரின் படங்களை பெரும் ஆவலுடன் பார்த்தவர்களுக்கு அதிர்ச்சியும், ஏமாற்றமும் கிடைத்தது.

டொயோட்டா வெல்ஃபயர் சொகுசு காரில் அதுவே இல்லையா... என்னங்க சொல்றீங்க?

வாடிக்கையாளர் விருப்பத்தின்பேரில் டீலரில் இந்த காருக்கு இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் பொருத்தித் தந்து விடுவார்கள் என்பதில் ஐயமில்லை. ஆனால், கார் உற்பத்தி செய்யப்படும் ஆலையிலேயே இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் பொருத்தி வந்தால்தான், அது சிறப்பாக இருக்கும்.

டொயோட்டா வெல்ஃபயர் சொகுசு காரில் அதுவே இல்லையா... என்னங்க சொல்றீங்க?

டீலரில் பொருத்தித் தரும்போது நீண்ட கால பயன்பாட்டின்போது நிச்சயம் சில பிரச்னைகளையும், எலெக்ட்ரிக்கல் வயரிங்கில் சில பிர்சனைகளையும் ஏற்படுத்தும். கிட்டத்தட்ட ரூ.75 லட்சம் விலையில் எதிர்பார்க்கப்படும் இந்த காரில் தரமான இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் அதிக வசதிகளுடன் வரும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

டொயோட்டா வெல்ஃபயர் சொகுசு காரில் அதுவே இல்லையா... என்னங்க சொல்றீங்க?

ஆனால், அந்த எதிர்பார்ப்பை பொய்க்கும் விதத்தில், இந்த படங்களில் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் இல்லை என்பது பெரும் ஏமாற்றம்தான். எனினும், வரும் காலத்தில் ஆலையிலேயே இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் பொருத்தி கொண்டு வரப்படும் என்று எதிர்பார்க்கலாம்.

Source: Customtunerzpro/Instagram

Most Read Articles
மேலும்... #டொயோட்டா #toyota
English summary
Toyota velfire has reached dealerships and displayed for potential customers. Strangely, It doesn't have infotainment system. It might get the infotainment system as dealer level fitment.
Story first published: Tuesday, October 15, 2019, 10:49 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X