டீலரில் டொயோட்டா வெல்ஃபயர்... பார்க்க பார்க்க இன்பம்!

பிரிமீயம் ரக கார் மார்க்கெட்டில் டொயோட்டா கார் நிறுவனம் வாடிக்கையாளர்கள் மத்தியில் சிறப்பான வரவேற்பை பெற்றிருக்கிறது. இதனை அடுத்தபடிக்கு கொண்டு செல்லும் விதமாக, தனது வெல்ஃபயர் சொகுசு எம்பிவி காரை மிக விரைவில் விற்பனைக்கு கொண்டு வர இருக்கிறது. இந்த நிலையில், டீலரில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த வெல்ஃபயர் காரின் படங்கள் பார்க்கும்போதே சொக்க வைக்கிறது.

டீலரில் டொயோட்டா வெல்ஃபயர்... பார்க்க பார்க்க இன்பம்!

டொயோட்டா அல்ஃபார்டு காரின் மிக உயரிய சொகுசு வகை எம்பிவி மாடல்தான் வெல்ஃபயர் என்ற பெயரில் குறிப்பிடப்படுகிறது. இந்த கார் பெரும் பணக்காரர்கள் எதிர்பார்க்கும் அத்துனை வசதிகளையும் நிரம்பவே பெற்றிருக்கிறது.

டீலரில் டொயோட்டா வெல்ஃபயர்... பார்க்க பார்க்க இன்பம்!

இந்த காரில் இருக்கும் இருக்கைகளை பார்த்தாலே பயணித்து விட வேண்டும் என்ற வேட்கையை உருவாக்குகிறது. அவ்வளவு சொகுசான இருக்கைகள் கொடுக்கப்பட்டுள்ளன.

டீலரில் டொயோட்டா வெல்ஃபயர்... பார்க்க பார்க்க இன்பம்!

பெரும்பாலான இந்திய கார்களில் பின் இருக்கை மிகவும் நெருக்கடியாக இருக்கும். ஆனால், மிக விசாலமான உணர்வை ஏற்படுத்தும் வகையில் அதிக இடவசதியுடன் மிக சொகுசான இருக்கைகள் வழங்கப்பட்டுள்ளன.

டீலரில் டொயோட்டா வெல்ஃபயர்... பார்க்க பார்க்க இன்பம்!

புதிய டொயோட்டா வெல்ஃபயர் காரின் உட்புறம் மிக தாராளமான இடவசதியுடன் பிரிமீயம் பிளாஸ்டிக் பாகங்களுடன் உருவாக்கப்பட்டு இருக்கிறது. அதேநேரத்தில், இந்த காரில் தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சாதனம் இல்லை என்பது பெரிய ஏமாற்றம். இதனை டீலர் மூலமாக பொருத்தி தருவதற்கு டொயோட்டா திட்டமிட்டுள்ளது.

டீலரில் டொயோட்டா வெல்ஃபயர்... பார்க்க பார்க்க இன்பம்!

ஆனால், இவ்வளவு விலை உயர்ந்த காரில் கட்டமைக்கப்படும் ஆலையிலேயே இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் பொருத்தித் தந்தால் சிறப்பானதாக இருக்கும். நீண்ட கால உழைக்கும் விதமாகவும் இருக்கும் என்பது வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

டீலரில் டொயோட்டா வெல்ஃபயர்... பார்க்க பார்க்க இன்பம்!

இன்ஃபோடெயின்மென்ட் தவிர்த்து பெரிய குறை ஏதும் இல்லை. 3 ஸோன் ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கன்ட்ரோல் சிஸ்டம், ஆம்பியன்ட் லைட் சிஸ்டம், சிறிய டேபிள், கிங் சைஸ் இருக்கைகள், சாய்மான வசதி, பின் இருக்கை பயணிகளுக்காக 10.2 அங்குல டிவி திரைகள் உள்ளிட்டவை உள்ளன.

டீலரில் டொயோட்டா வெல்ஃபயர்... பார்க்க பார்க்க இன்பம்!

இந்த காரில் 2.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் மின் மோட்டார் இணைந்து செயல்படும் ஹைப்ரிட் மாடலில் வர இருக்கிறது. இந்த எஞ்சினுடன் சிவிடி கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கும். இந்த எஞ்சின்- மின் மோட்டார் இணைந்து அதிகபட்சமாக 197 பிஎஸ் பவரை வெளிப்படுத்தும். லெக்சஸ் என்எக்ஸ்300எச் காரில் இருக்கும் அதே எஞ்சின்- மின்மோட்டார்தான் இதிலும் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது.

டீலரில் டொயோட்டா வெல்ஃபயர்... பார்க்க பார்க்க இன்பம்!

புதிய டொயோட்டா அல்ஃபார்டு வெல்ஃபயர் கார் மிக விரைவில் இந்திய சந்தையில் களமிறக்கப்பட இருக்கிறது. ரூ.75 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையை ஒட்டி வரும் வாய்ப்புள்ளது. எனினும், அடுத்த ஆண்டு மார்ச் முதல்தான் டெலிவிரி கொடுக்கப்படும். மெர்சிடிஸ் பென்ஸ் வி க்ளாஸ் எலைட் காருக்கு போட்டியாக இருக்கும்.

டீலரில் டொயோட்டா வெல்ஃபயர்... பார்க்க பார்க்க இன்பம்!

மத்திய அரசு கொண்டு வந்த புதிய இறக்குமதி வரி மூலமாக முதல் 2,500 கார்களை எந்த மாற்றமும் இல்லாமல் விற்பனை செய்ய முடியும். அதன் அடிப்படையில்தான் இந்த கார் இறக்குமதி செய்து விற்பனைக்கு கொண்டு வரப்பட இருக்கிறது. அடிக்கடி வெளியூர் பயணிக்கும் வர்த்தகர்கள், அரசியல்வாதிகள், சினிமா நட்சத்திரங்களை இந்த கார் வசீகரிக்கும். நட்சத்திர ஓட்டல்களிலும் விருந்தினர் பயன்பாட்டிற்கும் உகந்ததாக இருக்கும்.

டொயோட்டா வெல்ஃபயர் வருவதை கண்டு, மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் தனது வி க்ளாஸ் காரின் மிக உயரிய வகை எலைட் மாடலை களமிறக்கி உள்ளது. அதன் விபரங்களை தொடர்ந்து காணலாம்.

Source: Team BHP

டீலரில் டொயோட்டா வெல்ஃபயர்... பார்க்க பார்க்க இன்பம்!

கடந்த ஜனவரி மாதம் மெர்சிடிஸ் நிறுவனம் தனது வி க்ளாஸ் சொகுசு எம்பிவி காரை இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வந்தது. டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா காரைவிட்டால் வேறு சிறந்த எம்பிவி இல்லை என்ற குறையை போக்கும் விதத்தில் இந்த புதிய மாடல் அமைந்தது.

டீலரில் டொயோட்டா வெல்ஃபயர்... பார்க்க பார்க்க இன்பம்!

இந்தியாவில் மெர்சிடிஸ் பென்ஸ் வி க்ளாஸ் கார் எக்ஸ்பிரெஸன் மற்றும் எக்ஸ்க்ளூசிவ் ஆகிய இரண்டு வேரியண்ட்டுகளில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. இதில், எக்ஸ்பிரஸன் வேரியண்ட்டிற்கு ரூ.68.40 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையும், எக்ஸ்க்ளூசிவ் வேரியண்ட்டிற்கு ரூ.81.90 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையும் நிர்ணயிக்கப்பட்டது.

டீலரில் டொயோட்டா வெல்ஃபயர்... பார்க்க பார்க்க இன்பம்!

இந்த நிலையில், கடந்த மார்ச் மாதம் மெர்சிடிஸ் பென்ஸ் வி க்ளாஸ் காரின் ஃபேஸ்லிஃப்ட் மாடல் உலகளாவிய அளவில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த மாடலை தற்போது இந்தியாவிலும் விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது மெர்சிடிஸ் பென்ஸ்.

டீலரில் டொயோட்டா வெல்ஃபயர்... பார்க்க பார்க்க இன்பம்!

இந்த புதிய மாடல் வி க்ளாஸ் எலைட் என்ற பெயரில் விற்பனைக்கு கிடைக்கும். ஏற்கனவே விற்பனையில் இருக்கும் மாடலிலிருந்து இது சிறிய அளவிலான டிசைன் வேறுபாடுகளை பெற்றிருக்கிறது. புதிய க்ரில் அமைப்பு, பம்பர் அமைப்புடன் கவர்கிறது. உட்புறத்திலும் கூடுதல் அலங்கார அம்சங்கள், புதிய ஏசி வென்ட்டுகள், பெரிய தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் ஆகியவை இடம்பெற்றுள்ளன.

டீலரில் டொயோட்டா வெல்ஃபயர்... பார்க்க பார்க்க இன்பம்!

நப்பா லெதர் இன்டீரியர், 360 டிகிரி கேமரா, பனோரமிக் சன்ரூஃப், எலெக்ட்ரிக் ஸ்லைடிங் கதவுகள், ஆம்பியன்ட் லைட் சிஸ்டம், விசேஷ சஸ்பென்ஷன் அமைப்பு என பயணிப்பவர்களுக்கு புதிய அனுபவத்தை இந்த கார் வழங்கும் என்று எதிர்பார்க்கலாம்.

டீலரில் டொயோட்டா வெல்ஃபயர்... பார்க்க பார்க்க இன்பம்!

புதிய மெர்சிடிஸ் பென்ஸ் வி க்ளாஸ் எலைட் காரில் மிக முக்கிய மாற்றமாக புதிய 2.0 லிட்டர் டீசல் எஞ்சின் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 163 எச்பி பவரையும், 380 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். இந்த எஞ்சின் பிஎஸ்-6 மாசு உமிழ்வு தரத்திற்கு இணையானது என்பது முக்கியமான விஷயமாக கூறலாம். இந்த காரில் 9 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது.

டீலரில் டொயோட்டா வெல்ஃபயர்... பார்க்க பார்க்க இன்பம்!

புதிய மெர்சிடிஸ் பென்ஸ் வி க்ளாஸ் காரில் 8 ஏர்பேக்குகள், எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி புரோகிராம், இபிடியுடன் கூடிய ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், ஆக்டிவ் பார்க்கிங் சிஸ்டம், க்ராஸ் விண்ட் அசிஸ்ட், அட்டென்ஷன் அசிஸ்ட், டிராக்ஷன் கன்ட்ரோல், ஹில் ஸ்டார்ட் அசிஸ்ட் உள்ளிட்ட ஏராளமான பாதுகாப்பு அம்சங்கள் உள்ளன.

டீலரில் டொயோட்டா வெல்ஃபயர்... பார்க்க பார்க்க இன்பம்!

புதிய மெர்சிடிஸ் பென்ஸ் வி க்ளாஸ் எலைட் மாடலுக்கு ரூ.1.10 கோடி எக்ஸ்ஷோரூம் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. விரைவில் வர இருக்கும் டொயோட்டா வெல்ஃபயர் காருக்கு இது நேரடி போட்டியாக இருக்கும் என்று கருதலாம்.

Most Read Articles
மேலும்... #டொயோட்டா #toyota
English summary
Toyota Vellfire have spotted again at a dealership ahead of launch in India.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X