கியா கார்னிவல் வருகை எதிரொலி... சொகுசு எம்பிவி காரை களமிறக்கும் டொயோட்டா!

இன்னோவா க்ரிஸ்ட்டா காரைவிட அதிக சொகுசு அம்சங்கள் நிரம்பிய புதிய எம்பிவி காரை டொயோட்டா கார் நிறுவனம் விரைவில் அறிமுகம் செய்ய இருக்கிறது. அதன் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

கியா கார்னிவல் வருகை எதிரொலி... சொகுசு எம்பிவி காரை களமிறக்கும் டொயோட்டா!

எம்பிவி கார் என்றாலே இன்னோவாதான் என்று இந்தியர்களின் மனதில் முத்திரை பதித்துவிட்டது. புதிய தலைமுறை இன்னோவா க்ரிஸ்ட்டா கார் விற்பனையில் சக்கைபோடு போட்டு வருகிறது. அதிக இடவசதி, சொகுசான பயணம், நீடித்த உழைப்பு, அதிக ரீசேல் மதிப்பு என இன்னோவா க்ரிஸ்ட்டா காரின் சாதகங்களை அடுக்கிக் கொண்டே செல்லலாம்.

கியா கார்னிவல் வருகை எதிரொலி... சொகுசு எம்பிவி காரை களமிறக்கும் டொயோட்டா!

இந்த நிலையில், அடுத்த ஆண்டு கியா கார்னிவல் எம்பிவி கார் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட இருப்பதை மனதில் வைத்து புதிய எம்பிவி காரை களமிறக்க டொயோட்டா திட்டமிட்டுள்ளது. மேலும், தன் பிராண்டு மீது வாடிக்கையாளர்கள் வைத்திருக்கும் மதிப்பை மேலும் ஒருபடி மேலே கொண்டு செல்லும் விதத்திலும் இந்த காரை நிலைநிறுத்த டொயோட்டா முடிவு செய்துள்ளது.

கியா கார்னிவல் வருகை எதிரொலி... சொகுசு எம்பிவி காரை களமிறக்கும் டொயோட்டா!

அதன்படி, வெளிநாடுகளில் அல்ஃபார்டு மற்றும் வெல்ஃபயர் என்ற இருவேறு பெயர்களில் விற்பனை செய்யப்பட்டு வரும் இந்த சொகுசு எம்பிவி காரை இந்தியாவில் விரைவில் விற்பனைக்கு கொண்டு வர இருக்கிறது டொயோட்டா நிறுவனம். இந்த கார் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட இருப்பது குறித்த ஆதாரங்களை டீம் பிஎச்பி தளத்தை சேர்ந்த உறுப்பினர் ஒருவர் பகிர்ந்து கொண்டுள்ளார்.

கியா கார்னிவல் வருகை எதிரொலி... சொகுசு எம்பிவி காரை களமிறக்கும் டொயோட்டா!

இந்தியாவில் டொயோட்டா வெல்ஃபயர் என்ற பெயரில் இந்த புதிய மாடல் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தெரிகிறது. இந்த கார் டொயோட்டா இன்னோவா காரைவிட பரிமாணத்தில் மிகப்பெரிய காராக இருப்பதோடு, சொகுசு கார் ரகத்தில் நிலைநிறுத்தப்படும்.

கியா கார்னிவல் வருகை எதிரொலி... சொகுசு எம்பிவி காரை களமிறக்கும் டொயோட்டா!

யாரிஸ் — மாருதி சியாஸ் மற்றும் ஹோண்டா சிட்டி கார்களுக்கான டொயோட்டாவின் பதில்! டெஸ்ட் டிரைவ் செய்து பார்க்க வேண்டுமா?

புதிய டொயோட்டா வெல்ஃபயர் எம்பிவி கார் 4,950 மிமீ நீளமும், 1,850 மிமீ அகலமும், 1,950 மிமீ உயரமும் பெற்றிருக்கிறது. இதன் வீல் பேஸ் 3,000 மிமீ என்பது கவனிக்கத்தக்க விஷயம்.. இந்த கார் 8 சீட்டர் மாடலில் விற்பனைக்கு கிடைக்கும். 8 பேர் அமர்வதற்கு மிகச் சிறப்பான இடவசதியை அளிக்கும்.

கியா கார்னிவல் வருகை எதிரொலி... சொகுசு எம்பிவி காரை களமிறக்கும் டொயோட்டா!

டொயோட்டா கேம்ரி காரில் பயன்படுத்தப்படும் அதே 2.5 லிட்டர் பெட்ரோல் ஹைப்ரிட் எஞ்சின்தான் வெல்ஃபயர் காரிலும் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 202 பிஎச்பி பவரை வெளிப்படுத்தும் திறன் வாய்ந்ததாக இருக்கும். சிவிடி கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கிறது. லிட்டருக்கு 19 முதல் 20 கிமீ வரை மைலேஜ் தரும் என்பது இதன் ஆகச் சிறந்த விஷயமாக இருக்கும்.

கியா கார்னிவல் வருகை எதிரொலி... சொகுசு எம்பிவி காரை களமிறக்கும் டொயோட்டா!

புதிய டொயோட்டா வெல்ஃபயர் சொகுசு எம்பிவி காரில் 12 ஸ்பீக்கர்களுடன் கூடிய ஜேபிஎல் தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், சாய்மான வசதியுடன் லெதர் இருக்கைகள், வென்ட்டிலேட்ட சீட்டுகள், எலெக்ட்ரிக் ஷன்ஷேடு, 3 ஸோன் க்ளைமேட் கன்ட்ரோல் சிஸ்டம், எல்இடி ஹெட்லைட்டுகள் ஆகியவை உள்ளன.

கியா கார்னிவல் வருகை எதிரொலி... சொகுசு எம்பிவி காரை களமிறக்கும் டொயோட்டா!

இந்த காரில் 7 ஏர்பேக்குகள், இபிடியுடன் கூடிய ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், டிராக்ஷன் கன்ட்ரோல் மற்றும் ஹில் ஹோல்டு அசிஸ்ட் உள்ளிட்ட ஏராளமான பாதுகாப்பு வசதிகளும் இடம்பெற்றுள்ளன.

கியா கார்னிவல் வருகை எதிரொலி... சொகுசு எம்பிவி காரை களமிறக்கும் டொயோட்டா!

புதிய டொயோட்டா வல்ஃபயர் சொகுசு எம்பிவி கார் மிக விலை உயர்ந்த மாடலாக நிலைநிறுத்தப்படும். தற்போது டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா காரின் டாப் வேரியண்ட் ரூ.23.5 லட்சத்தில் விற்பனை செய்யப்படும் நிலையில், புதிய வெல்ஃபயர் கார் ரூ.50 லட்சம் விலையில் விற்பனைக்கு கொண்டு வரப்படும் வாய்ப்புள்ளது.

கியா கார்னிவல் வருகை எதிரொலி... சொகுசு எம்பிவி காரை களமிறக்கும் டொயோட்டா!

கடந்த ஜனவரி மாதம் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட மெர்சிடிஸ் பென்ஸ் வி க்ளாஸ் சொகுசு எம்பிவி காருக்கு போட்டியாக இருக்கும். மேலும், பென்ஸ் வி க்ளாஸ் காரைவிட குறைவான விலையில் சிறந்த தேர்வாக அமையும்.

கியா கார்னிவல் வருகை எதிரொலி... சொகுசு எம்பிவி காரை களமிறக்கும் டொயோட்டா!

இந்தியாவில் 2,500 கார்களை எந்த மாற்றமும் இல்லாமல் இறக்குமதி செய்வதற்கு அரசு வழி வகுத்துள்ளது. அதனை பயன்படுத்தி, புதிய டொயோட்டா வெல்ஃபயர் கார் இறக்குமதி செய்து விற்பனை செய்யப்பட உள்ளன.

Most Read Articles
மேலும்... #டொயோட்டா #toyota
English summary
According to media reports, Toyota is planning to launch Vellfire (Alphard) luxury MPV car in India soon.
Story first published: Wednesday, July 17, 2019, 13:36 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X