குவாலிஸ், இன்னோவா வரிசையில் வெல்ஃபயர்... டொயோட்டாவின் அடுத்த அஸ்திரம்!

குவாலிஸ், இன்னோவா, ஃபார்ச்சூனர் கார்கள் இந்தியர்களின் மனதில் நீங்கா இடத்தை பிடித்துள்ளது டொயோட்டா நிறுவனம். இந்த வரிசையில், மிக பிரிமீயமான புதிய எம்பிவி கார் மாடலை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்ய இருக்கிறது டொயோட்டா.

குவாலிஸ், இன்னோவா வரிசையில் வெல்ஃபயர்... டொயோட்டாவின் அடுத்த அஸ்திரம்!

அடுத்த அஸ்திரம்

வெளிநாடுகளில் விற்பனையில் இருக்கும் வெல்ஃபயர் சொகுசு கார்தான் இந்தியாவில் டொயோட்டா நிறுவனத்தின் அடுத்த அஸ்திரமாக இருக்கப் போகிறது என்பது கிட்டத்தட்ட உறுதியாகி விட்டது. அண்மையில் இந்த புதிய சொகுசு ரக எம்பிவி காரை டீலர்களின் பார்வைக்கு கொண்டு வந்தது டொயோட்டா நிறுவனம். புதிய டொயோட்டா வெல்ஃபயர் காரில் இருக்கும் சில முக்கிய விஷயங்கள் குறித்து இந்த செய்தியில் பார்க்கலாம்.

குவாலிஸ், இன்னோவா வரிசையில் வெல்ஃபயர்... டொயோட்டாவின் அடுத்த அஸ்திரம்!

பிரிமீயம் மாடல்

டொயோட்டா அல்ஃபார்டு காரின் அடிப்படையில் கவர்ச்சிகரமான ஆக்சஸெரீகள் மற்றும் கூடுதல் சிறப்பம்சங்கள் கொண்ட மாடலாக வெல்ஃபயர் விற்பனையில் வைக்கப்பட்டு இருக்கிறது. அல்ஃபார்டு ஸ்டான்டர்டு மாடலாகவும், வெல்ஃபயர் அதிக சிறப்பம்சங்கள் நிறைந்த மாடலாகவும் நிலைநிறுத்தப்பட்டுள்ளன.

குவாலிஸ், இன்னோவா வரிசையில் வெல்ஃபயர்... டொயோட்டாவின் அடுத்த அஸ்திரம்!

ஹைப்ரிட் மாடல்

புதிய டொயோட்டா வெல்ஃபயர் காரில் 2.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் எலெக்ட்ரிக் மோட்டாருடன் ஹைப்ரிட் மாடலாக வர இருக்கிறது. இந்த மாடலில் சிவிடி கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 178 பிஎச்பி பவரையும், 235 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். இது ரியர் வீல் டிரைவ் சிஸ்டம் கொண்டதாக இருக்கும். வெளிநாடுகளில் ஆல் வீல் டிரைவ் ஆப்ஷனிலும் வழங்கப்படுகிறது.

குவாலிஸ், இன்னோவா வரிசையில் வெல்ஃபயர்... டொயோட்டாவின் அடுத்த அஸ்திரம்!

கேபின்

டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா கேபினை பார்த்து அசந்தவர்களை மேலும் அசரடிக்கும் விதத்தில் இதன் கேபின் மிக சவுகரியாகவும், அதிக இடவசதி கொண்டதாகவும் இருக்கும். நடுவரிசையில் கேப்டன் இருக்கைகள் சாய்மான வசதியுடன் கொடுக்கப்பட்டு இருக்கும். போதிய லெக்ரூம், ஹெட்ரூம் கொண்டதாக மினி வேன் அளவுக்கு சவுகரியத்தை வழங்கும். இருக்கைகளை மடக்கும் வசதியும் இருக்கும்.

குவாலிஸ், இன்னோவா வரிசையில் வெல்ஃபயர்... டொயோட்டாவின் அடுத்த அஸ்திரம்!

யாரிஸ் — மாருதி சியாஸ் மற்றும் ஹோண்டா சிட்டி கார்களுக்கான டொயோட்டாவின் பதில்! டெஸ்ட் டிரைவ் செய்து பார்க்க வேண்டுமா?

சிறப்பம்சங்கள்

இந்த காரில் எல்இடி ஹெட்லைட்டுகள், பகல்நேர விளக்குகள், இரண்டு சன்ரூஃப் அமைப்புகள், பிளைண்ட் ஸ்பாட் மானிட்டரிங் சிஸ்டம், வயர்லெஸ் சார்ஜர், 18 அங்குல அலாய் சக்கரங்கள், 7 ஏர்பேக்குகள், பின்புற பயணிகளுக்கான 10.2 அங்குலத்தில் தனி டிவி திரைகள், 360 டிகிரி கேமரா உள்ளிட்டவை இந்த காரில் கொடுக்கப்பட்டு இருக்கின்றன.

குவாலிஸ், இன்னோவா வரிசையில் வெல்ஃபயர்... டொயோட்டாவின் அடுத்த அஸ்திரம்!

விலை

புதிய டொயோட்டா வெல்ஃபயர் கார் மெர்சிடிஸ் பென்ஸ் வி க்ளாஸ் எம்பிவி காருடன் நேரடியாக போட்டி போடும். அடுத்த சில மாதங்களில் இந்தியா வர இருக்கிறது. இந்த கார் ரூ.70 லட்சம் முதல் ரூ.80 லட்சம் இடையிலான விலையில் எதிர்பார்க்கப்படுகிறது. புதிய இறக்குமதி விதியை பயன்படுத்தி, முதல்கட்டமாக 2,500 வெல்ஃபயர் கார்களை இறக்குமதி செய்து விற்பனை செய்ய டொயோட்டா திட்டமிட்டுள்ளது.

Most Read Articles
மேலும்... #டொயோட்டா #toyota
English summary
Here are some of the top things to know about the upcoming Toyota Vellfire luxury MPV car.
Story first published: Tuesday, July 23, 2019, 15:38 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X