டொயோட்டாவை ஆட்டம் காண வைத்த மாருதி... இந்த காருக்கு ரூ.1.5 லட்சம் தள்ளுபடி வழங்க காரணம் இதுதான்...

டொயோட்டா யாரிஸ் காருக்கு ரூ.1.5 லட்சம் வரை தள்ளுபடி வழங்கப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

டொயோட்டா யாரிஸ் காருக்கு ரூ.1.5 லட்சம் வரை தள்ளுபடி வழங்கப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

டொயோட்டாவை ஆட்டம் காண வைத்த மாருதி... இந்த காருக்கு ரூ.1.5 லட்சம் தள்ளுபடி வழங்க காரணம் இதுதான்...

டொயோட்டா நிறுவனத்தின் யாரிஸ் (Toyota Yaris) கார், பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், கடந்த ஆண்டு மே மாதம் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. டொயோட்டா யாரிஸ் காரானது, செடான் (Sedan) வகையை சேர்ந்தது ஆகும்.

இந்தியாவின் செடான் செக்மெண்ட்டில், மாருதி சுஸுகி சியாஸ், ஹோண்டா சிட்டி, ஹூண்டாய் வெர்னா உள்ளிட்ட கார்கள்தான் ஆதிக்கம் செலுத்தி கொண்டுள்ளன. குறிப்பாக மாருதி சியாஸ். இப்படிப்பட்ட சூழலில்தான், டொயோட்டா யாரிஸ் கார், செடான் செக்மெண்ட்டில் கெத்தாக கால் பதித்தது.

டொயோட்டாவை ஆட்டம் காண வைத்த மாருதி... இந்த காருக்கு ரூ.1.5 லட்சம் தள்ளுபடி வழங்க காரணம் இதுதான்...

டொயோட்டா நிறுவனத்தின் தயாரிப்பு என்பதால், போட்டியாளர்களை மிக எளிதாக காலி செய்து விடும் என்ற எதிர்பார்ப்பு யாரிஸ் மீது நிலவியது. இதனால் அதன் போட்டி நிறுவனங்கள் சற்று அச்சத்தில்தான் இருந்தன. ஆனால் நடந்ததோ வேறு.

அறிமுகம் செய்யப்பட்ட புதிதில், ஒவ்வொரு மாதமும் சராசரியாக 2,000 யாரிஸ் கார்களை டொயோட்டா நிறுவனம் விற்பனை செய்து வந்தது. இரண்டாயிரம்தான் என்றாலும் கூட, இது ஓரளவிற்கு நல்ல எண்ணிக்கைதான்.

ஆனால் அதன்பின் வந்த மாதங்களில் யாரிஸ் காரின் விற்பனை மிக கடுமையாக சரிந்தது. டொயோட்டா நிறுவனம் சற்றும் எதிர்பார்க்காத அளவிற்கு யாரிஸ் காரின் விற்பனை அதலபாதாளத்திற்கு சென்றதால், ஆட்டோமொபைல் துறை வல்லுனர்கள் கூட அதிர்ச்சியடைந்தனர்.

இந்த சூழலில் கடந்த ஜனவரி மாதம் வெறும் 343 யாரிஸ் கார்களை மட்டுமே டொயோட்டா நிறுவனம் விற்பனை செய்துள்ளது. யாரிஸ் கார் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது முதல் ஒரு மாதத்தில் பதிவான மிக குறைந்த விற்பனை எண்ணிக்கை இதுவாகும்.

டொயோட்டாவை ஆட்டம் காண வைத்த மாருதி... இந்த காருக்கு ரூ.1.5 லட்சம் தள்ளுபடி வழங்க காரணம் இதுதான்...

இதன்மூலம் செடான் செக்மெண்ட்டில் மிகவும் குறைவாக விற்பனையாகும் கார் என்ற மிக மோசமான சாதனையை படைத்திருக்கிறது டொயோட்டா யாரிஸ். அதாவது ஸ்கோடா ரேபிட், ஃபோக்ஸ்வேகன் வெண்டோ ஆகிய கார்களை காட்டிலும் யாரிஸ் பின்தங்கி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

எதிர்பார்த்த அளவிற்கு விற்பனையாகாததால், டொயோட்டா யாரிஸ் காருக்கு டீலர்கள் தற்போது ரூ.1.5 லட்சம் வரையிலான தள்ளுபடி/பலன்களை (Discounts/Benefits) வழங்குவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதில், எக்ஸ்சேஞ்ச் ஆஃபர், கேஷ் டிஸ்கவுண்ட், இலவச இன்சூரன்ஸ் மற்றும் ஆக்ஸஸரிஸ் ஆகியவை அடங்கும். கூடுதலாக யாரிஸ் காரை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு சில டீலர்ஷிப்களில் தங்க காயின்கள் வழங்கப்படுவதாகவும் கூறப்படுகிறது.

ஆக மொத்தம் வாடிக்கையாளர்களுக்கு ரூ.1.5 லட்சத்திற்கான பலன்கள் கிடைக்கும் என தெரிகிறது. யாரிஸ் காரில், 1.5 லிட்டர், விடிவிடி-ஐ பெட்ரோல் இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இது அதிகபட்சமாக 106 பிஎச்பி பவர் மற்றும் 140 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தும் வல்லமை வாய்ந்தது.

டொயோட்டாவை ஆட்டம் காண வைத்த மாருதி... இந்த காருக்கு ரூ.1.5 லட்சம் தள்ளுபடி வழங்க காரணம் இதுதான்...

இதில், ஆட்டோமெட்டிக் மற்றும் மேனுவல் டிரான்ஸ்மிஷன் ஆப்ஷன்கள் வழங்கப்பட்டுள்ளன. யாரிஸ் காரில் தற்போதைக்கு டீசல் இன்ஜின் ஆப்ஷன் இல்லை. ஆனால் போட்டி கார்கள் அனைத்திலும் டீசல் இன்ஜின் ஆப்ஷன் வழங்கப்படும்போது, யாரிஸிலும் டீசல் இன்ஜினை வழங்க டொயோட்டா திட்டமிட்டுள்ளது.

செடான் செக்மெண்ட்டில், ஃப்ரண்ட் பார்க்கிங் சென்சார், 7 ஏர் பேக்குகள் உள்ளிட்ட வசதிகளை வழங்கும் ஒரே கார் என்ற பெருமையை யாரிஸ் பெறுகிறது. என்றாலும் இவை வாடிக்கையாளர்களை கவர்ந்து இழுக்கவில்லை.

Disclaimer: மேற்குறிப்பிட்ட தள்ளுபடி/பலன்கள் டீலர்களால் வழங்கப்படுவதாகும். பழைய 2018 மாடல்கள் ஸ்டாக் உள்ளதை பொறுத்து டீலருக்கு டீலர் இந்த தள்ளுபடி/பலன்கள் மாறுபடலாம். எனவே துல்லியமான தள்ளுபடி/பலன்களை தெரிந்து கொள்ள உங்கள் நகரில் உள்ள டொயோட்டா அங்கீகாரம் பெற்ற டீலர்ஷிப்பை அணுகவும்.

Most Read Articles
மேலும்... #டொயோட்டா #toyota
English summary
Toyota Yaris Sales Declined Drastically-Selling At Rs.1.5 Lakh Discount. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X