பெங்களூரில் அதிரடியாக குறைக்கப்பட்ட போக்குவரத்து அபராதம்! எவ்வளவு குறைந்தது தெரியுமா

புதிதாக அமுலுக்கு வந்த மோட்டார் வாகன சட்டம் வாகன ஓட்டிகள் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் பெங்களூர் மக்களுக்கு மட்டும் மகிழ்ச்சியான செய்தியாக அந்த அபராதத்தை சுமார் 50லிருந்து 80 சதவீதம் குறைத்துள்ளது, கர்நாடக அரசு.

பெங்களூரில் அதிரடியாக குறைக்கப்பட்ட போக்குவரத்து அபராதம்! எவ்வளவு குறைந்தது தெரியுமா

அதிகபடியான அபராதத்தை கொண்டு வந்த மோட்டார் வாகன சட்டத்தை எதிர்த்து மக்கள் பலரும் குரல் கொடுத்து வந்தனர்.

பெங்களூரில் அதிரடியாக குறைக்கப்பட்ட போக்குவரத்து அபராதம்! எவ்வளவு குறைந்தது தெரியுமா

இந்த நிலையில் தான் இந்த அபராத குறைப்பு அமலுக்கு வந்துள்ளது. இருந்தாலும் கர்நாடக அரசின் இந்த சட்டத்திற்கு மக்களிடம் இருந்து கலவையான விமர்சனங்களே வந்தவாறு உள்ளன.

பெங்களூரில் அதிரடியாக குறைக்கப்பட்ட போக்குவரத்து அபராதம்! எவ்வளவு குறைந்தது தெரியுமா

சிலரோ இந்த அபராத குறைப்புக்கு வரவேற்று, கர்நாடக அரசு முதலில் தரமான சாலையை அமைப்பதில் தீவிர காட்ட வேண்டும் என்று கூறியுள்ளனர். வேறு சிலரோ இந்த அபராத குறைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த குறைப்பால் சாலை பாதுகாப்பு கேள்வி குறியாகிவிடும் என புலம்பி வருகின்றனர்.

பெங்களூரில் அதிரடியாக குறைக்கப்பட்ட போக்குவரத்து அபராதம்! எவ்வளவு குறைந்தது தெரியுமா

கர்நாடக மக்களை இவ்வாறு புலம்பி வைத்துள்ள அபராத குறைப்புக்கள் பின்வருமாறு, ரூபாய் 2000 என இருந்த இரு மற்றும் மூன்று சக்கர வாகனங்களின் வேக கட்டுப்பாடு அபராதமானது, ரூ.1000 என குறைக்கப்பட்டுள்ளது.

பெங்களூரில் அதிரடியாக குறைக்கப்பட்ட போக்குவரத்து அபராதம்! எவ்வளவு குறைந்தது தெரியுமா

அதே போல், மற்ற வாகனங்களுக்கு விதிக்கப்பட்டு இருந்த அபராதம் 4 ரூபாயும் 2 ஆயிரமாக குறைக்கப்பட்டுள்ளது. ஹெல்மெட் அணியாமல் இரு சக்கர வாகனம் ஓட்டினால் முன்பு ஆயிர ரூபாய் அபராதம். ஆனால் பெங்களூரில் இப்போது 500 ரூபாய் தான்.

பெங்களூரில் அதிரடியாக குறைக்கப்பட்ட போக்குவரத்து அபராதம்! எவ்வளவு குறைந்தது தெரியுமா

சீட் பெல்ட் அணியாமல் வண்டி ஓட்டினாலும் பெங்களூரில் 1000 ரூபாய் கட்ட வேண்டியதில்லை. அதற்கு பதிலாக தான் 500 ரூபாய் என குறைக்கப்பட்டுவிட்டதே. இன்சூரன்ஸ் இல்லாமல் மோட்டார் வாகனம் ஓட்டினால் முதல் தடவைக்கு 2 ஆயிர ரூபாயும் அடுத்தடுத்த முறை மாட்டினால் 4 ஆயிரமாகவும் இருந்த அபராதத்தை இரு சக்கர வாகனங்களுக்கு 1000 ரூபாய் எனவும் கனரக வாகனங்களுக்கு 2000 மற்றும் 4000 எனவும் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

பெங்களூரில் அதிரடியாக குறைக்கப்பட்ட போக்குவரத்து அபராதம்! எவ்வளவு குறைந்தது தெரியுமா

அளவுக்கு அதிகமான சுமைகளை ஏற்றி செல்லும் கனரக வாகனங்களுக்கும் அபராதம் 20 ஆயிரம் ரூபாயில் இருந்து அதிரடியாக 5000 என மாற்றப்பட்டுள்ளது. தடை செய்யப்பட்ட பகுதிகளுக்கு அனுமதியின்றி நுழையும் வாகனங்களுக்கு அபராதம் 10 ஆயிரம் என முன்பு இருந்தது. ஆனால் தற்போது முதல்முறை நுழைந்தால் 5000 எனவும் அடுத்தடுத்த தடவைகளுக்கு அபராதமாக அதே 10 ஆயிரம் கடைப்பிடிக்கப்படவுள்ளது.

பெங்களூரில் அதிரடியாக குறைக்கப்பட்ட போக்குவரத்து அபராதம்! எவ்வளவு குறைந்தது தெரியுமா

கடந்த செப்டம்பர் 1 ஆம் தேதி அமலுக்கு வந்த 2019 ஆண்டிற்கான மோட்டார் வாகன சட்டத்தினால் இந்தியா முழுவதும் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகின்றனர். இதனால் மக்களிடம் நன்மதிப்பை எடுப்பதற்காக கர்நாடக அரசை போல அபராதத்தை குறைக்க முடிவெடுத்து வருகின்றன.

Most Read Articles
English summary
Traffic Fines In Bangalore Reduced: State Government Announces Revised Fines Under New MVA.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X