Just In
- 8 min ago
பாரம்பரியமான தோற்றத்தை இழக்கும் பழமையான ஜாவா பைக்குகள்!! மாடர்ன் பைக்குகளை சமாளித்தாக வேண்டுமே...
- 56 min ago
டாடா அல்ட்ராஸ் ஐ-டர்போ மாடலின் வேரியண்ட் வாரியாக வசதிகள்!
- 1 hr ago
முதல் முறையாக ரஃபேல் போர் விமானங்களை பயன்படுத்த திட்டம்... எப்போது தெரியுமா? தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க!!
- 2 hrs ago
இந்த குடியரசு தினத்தில் புதிய ஸ்கூட்டர் வாங்கும் பிளான் இருக்கா? இதோ உங்களுக்கான டாப் 5 பட்ஜெட் ஸ்கூட்டர்கள்!!
Don't Miss!
- Movies
'சலிக்காம போட்டோ போஸ்ட் பண்றதுல நீங்க வேற லெவல்..' பிரபல நடிகையை கலாய்க்கும் ஃபேன்ஸ்!
- News
பரபரப்பு.. சசிகலாவை தொடர்ந்து இளவரசிக்கும் கொரோனா பாதிப்பு.. சிறையிலிருந்து மருத்துவமனைக்கு ஷிப்ட்?
- Lifestyle
உங்க ராசிப்படி நீங்க எந்த வகையான நண்பர் தெரியுமா? நீங்க தேவாவா இல்ல சூர்யாவா? தெரிஞ்சிக்கோங்க...!
- Sports
ரவி சாஸ்திரி கிடக்காரு.. உங்க இஷ்டம் போல ஆடுங்க.. சிட்னி டெஸ்டில் தெறிக்கவிட்ட இளம் வீரர்!
- Education
ரூ.1.20 லட்சம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை வேண்டுமா? விண்ணப்பிக்கலாம் வாங்க!
- Finance
பழைய சீரியஸ் 100, 10, 5 ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் இருந்து நீக்க முடிவு: ரிசர்வ் வங்கி
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
இளைஞர் ஓட்டி வந்த காரை பார்த்து ஆச்சரியத்தில் திக்கு முக்காடி போன போலீஸ் அதிகாரி... ஏன் தெரியுமா?
இளைஞர் ஓட்டி வந்த காரை பார்த்து, போலீஸ் அதிகாரி ஒருவர் ஆச்சரியத்தில் திக்கு முக்காடி போனார். அது ஏன்? என்பது குறித்த சுவாரஸ்யமான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இந்தியாவை பொறுத்தவரை வாகனங்களை மாடிபிகேஷன் செய்வது சட்ட விரோதமாக பார்க்கப்படுகிறது. வாகனங்களை மாடிபிகேஷன் செய்யக்கூடாது என உச்ச நீதிமன்றமே உத்தரவிட்டுள்ளது. எனவே ஆல்டர் செய்யப்பட்ட வாகனங்களுக்கு எதிராக இந்தியா முழுவதும் போலீசார் கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.

சட்ட விரோதமான செயல்பாடு என்பதால், கார் மாடிபிகேஷன்களை போலீசார் ஊக்குவிப்பதில்லை. ஆனால் அதற்கு மாறாக முற்றிலும் வித்தியாசமான சம்பவம் ஒன்று நடைபெற்றுள்ளது. ஹெவியாக மாடிபிகேஷன் செய்யப்பட்ட ஹூண்டாய் சாண்ட்ரோ கார் ஒன்று போலீஸ் அதிகாரி ஒருவரின் கவனத்தை ஈர்த்துள்ளது. எனவே அந்த போலீஸ் அதிகாரி அந்த காரை நிறுத்தியுள்ளார்.

மேலும் அந்த காரில் அவர் ஜாலியாக ஒரு ரவுண்டும் சென்று விட்டு வந்துள்ளார். மாடிபிகேஷன் செய்யப்பட்ட ஹூண்டாய் சாண்ட்ரோ காரில், இளைஞர்கள் ஜாலியாக ரவுண்டு அடித்து கொண்டிருந்தனர். அப்போது செக் போஸ்ட்டில் இருந்த போலீஸ் அதிகாரி ஒருவர் அந்த காரை பார்த்து நிறுத்தியுள்ளார். அந்த கார் முற்றிலும் வித்தியாசமான முறையில் மாடிபிகேஷன் செய்யப்பட்டிருந்தது.

அதாவது அந்த கார் மிகவும் சிறியதாக மினி காராக மாற்றப்பட்டிருந்தது. இதனால் அந்த காரை பார்த்து போலீஸ் அதிகாரி ஆச்சரியத்தில் மூழ்கி விட்டார். போலீஸ் அதிகாரி ஆச்சரியமாக அந்த கார் பற்றி விசாரித்ததால், அந்த காரின் உரிமையாளர் போலீஸ் அதிகாரியை ஒரு ரவுண்டு சென்று விட்டு வர அனுமதித்தார்.

இதன்பின் அந்த காரை பற்றி போலீஸ் அதிகாரி பாராட்டி பேசினார். அந்த காரை தான் அடிக்கடி பார்ப்பேன் எனவும், ஒவ்வொரு முறையும் காரை நிறுத்தி அதனை முழுவதுமாக ஆராய்ந்து பார்க்க விரும்பியதாகவும் அந்த போலீஸ் அதிகாரி தெரிவித்தார். இது குறித்து மாஸ்டர் பட்டர் வெளியிட்டுள்ள வீடியோவை கீழே காணலாம்.
முதல் தலைமுறை சாண்ட்ரோ அடிப்படையில் இந்த கார் உருவாக்கப்பட்டுள்ளது. மேக்னெட்டோ 11-ஆல் இந்த கார் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த கார் எப்படி உருவாக்கப்பட்டது? என்பது தொடர்பான வீடியோவும் வெளியிடப்பட்டுள்ளது. உண்மையான முழு காரை பாதியாக 'கட்' செய்து இந்த மினி காரை உருவாக்கியுள்ளனர்.

இந்த மினி காரை உருவாக்க சுமார் 25 நாட்கள் ஆனதாக அந்த வீடியோவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த காரின் கேபினும் அருமையாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த காரில் இரண்டு இருக்கைகள் மட்டுமே இடம்பெற்றுள்ளன. வீல் பேஸ் மிகவும் சிறியதாக இருப்பதால், இரண்டு பேருக்கு மட்டுமே இந்த காரில் இடமுள்ளது.

ஆனால் அதே இன்ஜின் மற்றும் டிரான்ஸ்மிஷன்தான் இடம்பெற்றுள்ளன. மெக்கானிக்கல் ரீதியாக இந்த காரில் எவ்விதமான மாற்றங்களும் செய்யப்படவில்லை. கவனம் ஈர்த்துள்ள இந்த மினி கார் எப்படி உருவாக்கப்பட்டது? என்ற வீடியோவை நீங்கள் கீழே பார்க்கலாம்.
ஆனால் ஆர்டிஓ ஒப்புதல் அளிக்காவிட்டால் இதுபோன்ற மாடிபிகேஷன்கள் சட்டத்திற்கு உட்பட்டவை அல்ல என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. உண்மையில் வாகனத்தில் கட்டமைப்பு ரீதியாக மேற்கொள்ளப்படும் இத்தகைய மாடிபிகேஷன்கள் மிகவும் ஆபத்தானது என்பதையும் அனைவரும் கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளது.

இதுபோன்று மாடிபிகேஷன்களை செய்தால், சாலையில் ஓட்டுவதற்கு உகந்ததுதான் என்பதை நிரூபிக்க அராய் நடத்தும் தேர்வுகளில் மீண்டும் பாஸ் ஆக வேண்டும். இங்கே இந்த வாகனத்தின் ஆவணங்களை போலீஸ் அதிகாரி கேட்டாரா? என்பது உறுதியாக தெரியவில்லை. ஆனால் இதுபோன்று மாடிபிகேஷன் செய்யப்பட்ட வாகனங்களை போலீசார் உடனடியாக பறிமுதல் செய்து விடுவார்கள்.

எனினும் அதற்கு மாறாக இங்கே போலீஸ் அதிகாரி ஒருவர் ஜாலியாக ரவுண்டு சென்று விட்டு வந்துள்ளார். அவரை போலவே நாமும் இந்த காரை பாராட்டிதான் ஆக வேண்டும். இதுபோன்று மாடிபிகேஷன் செய்யும் எண்ணம் மற்றும் திறன்கள் பாராட்டப்பட வேண்டிய ஒன்றுதான். எனினும் மாடிபிகேஷன் செய்யப்பட்ட வாகனங்களை கவனமாகதான் எதிர்கொள்ள வேண்டும் என்பதையும் மறந்து விட கூடாது.

குறிப்பாக கட்டமைப்பு ரீதியாக மாடிபிகேஷன் செய்யப்பட்ட வாகனங்களை கவனமாக கையாள்வது அவசியம். இதுபோன்ற வாகனங்களிடம் நீங்களும் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. ஏனெனில் இது போன்ற வாகனங்களின் கட்டமைப்பு வலுவாக இருக்காது. அது ஆபத்தை ஏற்படுத்தலாம்.