மெய் சிலிர்க்க வைத்த கேரள இளைஞர்களின் தேசப்பற்று... இந்திய ராணுவத்திற்காக அவர்கள் செய்தது இதுதான்...

கேரள இளைஞர்களின் தேசப்பற்று அனைவரையும் மெய் சிலிர்க்க வைத்துள்ளது. இந்திய ராணுவத்திற்காக அவர்கள் என்ன செய்தார்கள் என தெரிந்தால் நீங்கள் ஆச்சரியப்படுவது உறுதி.

மெய் சிலிர்க்க வைத்த கேரள இளைஞர்களின் தேசப்பற்று... இந்திய ராணுவத்திற்காக அவர்கள் செய்தது இதுதான்...

பாகிஸ்தானை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் ஜெய்ஸ் இ முகமது என்ற அமைப்பு, காஷ்மீர் மாநிலம் புல்வாமா பகுதியில், கடந்த பிப்ரவரி 14ம் தேதியன்று, திடீரென தற்கொலை படை தாக்குதல் நடத்தியது. இந்த கொடூர தாக்குதலில் 44 சிஆர்பிஎப் வீரர்கள் வீர மரணம் அடைந்தனர்.

மெய் சிலிர்க்க வைத்த கேரள இளைஞர்களின் தேசப்பற்று... இந்திய ராணுவத்திற்காக அவர்கள் செய்தது இதுதான்...

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு, இந்திய விமானப்படையை சேர்ந்த 12 மிராஜ்-2000 ரக போர் விமானங்கள், பாகிஸ்தான் எல்லைக்குள் நுழைந்து அதிரடி தாக்குதல் நடத்தின. இதில், பாலகோட் என்ற பகுதியில் செயல்பட்டு வந்த ஜெய்ஸ் இ முகமது அமைப்பின் முகாம்கள் அழிக்கப்பட்டன.

மெய் சிலிர்க்க வைத்த கேரள இளைஞர்களின் தேசப்பற்று... இந்திய ராணுவத்திற்காக அவர்கள் செய்தது இதுதான்...

இதன்பின் பாகிஸ்தான் போர் விமானங்களும் இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயன்றன. அவற்றை விரட்டி அடிக்கும் பணியில் ஈடுபட்ட இந்திய பைலட் அபிநந்தன், பாகிஸ்தான் ராணுவத்தின் வசம் சிக்கியுள்ளார். அவர் இன்று (மார்ச் 1) விடுவிக்கப்படுவார் என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அறிவித்துள்ளார்.

மெய் சிலிர்க்க வைத்த கேரள இளைஞர்களின் தேசப்பற்று... இந்திய ராணுவத்திற்காக அவர்கள் செய்தது இதுதான்...

என்றாலும் இந்தியா-பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளுக்கும் இடையே தொடர்ந்து பதற்றமான சூழல்தான் நிலவி வருகிறது. இந்த சூழலில், ''திருவனந்தபுரம் ஜீப்பர்ஸ் கிளப்'' (Trivandrum Jeepers Club) என்ற அமைப்பு, இந்திய ராணுவத்திற்கு உதவி செய்ய முன்வந்துள்ளது.

மெய் சிலிர்க்க வைத்த கேரள இளைஞர்களின் தேசப்பற்று... இந்திய ராணுவத்திற்காக அவர்கள் செய்தது இதுதான்...

கேரளா உள்பட நாடு முழுவதும் பல்வேறு இடங்களில், திருவனந்தபுரம் ஜீப்பர்ஸ் கிளப் அமைப்பு சமூக சேவைகளில் ஈடுபட்டு வருகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன் கேரள மாநிலத்தில் பெரு வெள்ளம் ஏற்பட்டபோது, இந்த அமைப்பு மக்களுக்கு உதவிக்கரம் நீட்டியது நினைவிருக்கலாம்.

மெய் சிலிர்க்க வைத்த கேரள இளைஞர்களின் தேசப்பற்று... இந்திய ராணுவத்திற்காக அவர்கள் செய்தது இதுதான்...

வெள்ளத்தில் சிக்கி கொண்ட பொதுமக்களை மீட்கவும், நிவாரண பொருட்களை வினியோகவும் செய்யவும், தங்களது ஜீப் (Jeep) மற்றும் இதர 4×4 வாகனங்களை, திருவனந்தபுரம் ஜீப்பர்ஸ் கிளப் அமைப்பு பயன்படுத்தியது.

மெய் சிலிர்க்க வைத்த கேரள இளைஞர்களின் தேசப்பற்று... இந்திய ராணுவத்திற்காக அவர்கள் செய்தது இதுதான்...

பத்திரிக்கைகளில் இந்த செய்தி வெளியானதையடுத்து, திருவனந்தபுரம் ஜீப்பர்ஸ் கிளப் அமைப்பிற்கு, நாடு முழுவதிலும் இருந்து பாராட்டுக்கள் குவிந்தன. இவ்வாறு இந்தியா முழுக்க தேவைப்படும் இடங்களில் திருவனந்தபுரம் ஜீப்பர்ஸ் கிளப் அமைப்பு சமூக சேவையாற்றி வருகிறது.

மெய் சிலிர்க்க வைத்த கேரள இளைஞர்களின் தேசப்பற்று... இந்திய ராணுவத்திற்காக அவர்கள் செய்தது இதுதான்...

இந்த சூழலில் தற்போது இந்தியா-பாகிஸ்தான் இடையே பதற்றமான சூழல் நிலவி வருகிறது. எனவே இந்திய ராணுவத்தின் பயன்பாட்டிற்காக, தங்களிடம் உள்ள 70க்கும் மேற்பட்ட ஜீப் மற்றும் இதர 4×4 வாகனங்களை வழங்க தயாராக இருப்பதாக திருவனந்தபுரம் ஜீப்பர்ஸ் கிளப் அமைப்பு தெரிவித்துள்ளது.

திருவனந்தபுரம் ஜீப்பர்ஸ் கிளப்பின் பேஸ்புக் பக்கத்தின் வாயிலாக இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த அமைப்பில் உறுப்பினர்களாக உள்ள அனைவரும் ஆட்டோமொபைல் ஆர்வலர்கள் ஆவர். இவர்களிடம் மிகவும் சக்தி வாய்ந்த ஆஃப் ரோடு வாகனங்கள் உள்ளன.

மெய் சிலிர்க்க வைத்த கேரள இளைஞர்களின் தேசப்பற்று... இந்திய ராணுவத்திற்காக அவர்கள் செய்தது இதுதான்...

இவை பிரத்யேகமாக மாடிஃபிகேஷன் செய்யப்பட்டவை என்பதும் குறிப்பிடத்தக்கது. தற்போதைய சூழல் தங்களுக்கு கவலையை ஏற்படுத்தியிருப்பதாகவும், எனவே இந்திய ராணுவத்திற்கு உதவும் வகையில் தங்களது வாகனங்களை வழங்க தயாராக உள்ளதாகவும் அந்த அமைப்பு கூறியுள்ளது.

மெய் சிலிர்க்க வைத்த கேரள இளைஞர்களின் தேசப்பற்று... இந்திய ராணுவத்திற்காக அவர்கள் செய்தது இதுதான்...

கீறல் விழுந்து விடும், வாகனம் சேதமாகி விடும் என்பதற்காக, ஒரு சிலர் தங்களது வாகனத்தின் சாவியை கூட மற்றவர்களுக்கு வழங்க மாட்டார்கள். அப்படிப்பட்டவர்களை சந்தித்த அனுபவம் நம்மில் பலருக்கும் நிச்சயமாக இருக்கும்.

மெய் சிலிர்க்க வைத்த கேரள இளைஞர்களின் தேசப்பற்று... இந்திய ராணுவத்திற்காக அவர்கள் செய்தது இதுதான்...

ஆனால் திருவனந்தபுரம் ஜீப்பர்ஸ் கிளப் அமைப்பினர், தங்களது வாகனங்களை ராணுவத்திற்கே வழங்க தயாராக உள்ளனர். இங்கே கவனிக்க வேண்டிய விஷயம் இதுதான். ராணுவத்திற்கு வாகனங்களை வழங்கினால், சிறு துண்டு கூட மிஞ்சாமல் போவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

மெய் சிலிர்க்க வைத்த கேரள இளைஞர்களின் தேசப்பற்று... இந்திய ராணுவத்திற்காக அவர்கள் செய்தது இதுதான்...

இருந்தபோதும் தங்களது வாகனம் திரும்பி வராவிட்டாலும் பரவாயில்லை என திருவனந்தபுரம் ஜீப்பர்ஸ் கிளப் அமைப்பினர் துணிந்து முடிவெடுத்திருப்பது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. அதே சமயம் இங்கு குறிப்பிட்டாக வேண்டிய மற்றொரு விஷயமும் உள்ளது.

மெய் சிலிர்க்க வைத்த கேரள இளைஞர்களின் தேசப்பற்று... இந்திய ராணுவத்திற்காக அவர்கள் செய்தது இதுதான்...

அனேகமாக திருவனந்தபுரம் ஜீப்பர்ஸ் கிளப் அமைப்பின் உதவி, இந்திய ராணுவத்திற்கு தேவைப்படாது என கூறப்படுகிறது. ஏனெனில் இந்திய ராணுவம் சர்வ வல்லமை பொருந்தியதாகதான் உள்ளது. உலகில் வலுவான ராணுவத்தை கொண்டிருக்கும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.

மெய் சிலிர்க்க வைத்த கேரள இளைஞர்களின் தேசப்பற்று... இந்திய ராணுவத்திற்காக அவர்கள் செய்தது இதுதான்...

பாலைவனம், குளிர் நிறைந்த மலை சிகரம் என வித்தியாசமான இயற்கை சூழல் நிலவும் பகுதிகளிலும், கடினமான நிலப்பரப்புகளிலும் பயன்படுத்துவதற்கு ஏற்ற அதிநவீன வாகனங்கள் தற்போது இந்திய ராணுவத்திடம் உள்ளன.

மெய் சிலிர்க்க வைத்த கேரள இளைஞர்களின் தேசப்பற்று... இந்திய ராணுவத்திற்காக அவர்கள் செய்தது இதுதான்...

எனவேதான் திருவனந்தபுரம் ஜீப்பர்ஸ் கிளப் அமைப்பின் உதவி இந்திய ராணுவத்திற்கு தேவைப்படாது என கூறப்படுகிறது. இருந்தபோதும் இது அவர்களின் தேசப்பற்றை காட்டுவதாக உள்ளது என்பதை மறுக்க முடியாது.

Most Read Articles
English summary
Trivandrum Jeepers Club Ready To Offer 70 Plus Jeeps, Other 4WD Vehicles For Indian Army Use. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X