உச்சகட்ட அபராதத்தை பெற்ற லாரி உரிமையாளர்... எவ்வளவு என தெரிந்தால் அதிர்ந்துபோவீர்கள்!

பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டதாக கூறி டெல்லி போலீஸார் லாரி உரிமையாளருக்கு மிக மிக அதிகளவிலான அபராத தொகையை விதித்துள்ளனர். இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் காணலாம்.

உச்சகட்ட அபராதத்தை பெற்ற லாரி உரிமையாளர்... எவ்வளவு என தெரிந்தால் அதிர்ந்துபோவீர்கள்!

நாடு முழுவதும் மிகப்பெரியளவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது புதிய (திருத்தப்பட்ட) மோட்டார் வாகன சட்டம். இதற்கு முக்கிய காரணமாக இருப்பது இதன்மூலம் விதிக்கப்படும் உச்சபட்ச அபரதம்தான்.

பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் இந்த புதிய அபராத திட்டத்தை கடந்த 1ம் தேதி முதல் நாடு முழுவதும் அமலுக்குக் கொண்டுவந்தது.

உச்சகட்ட அபராதத்தை பெற்ற லாரி உரிமையாளர்... எவ்வளவு என தெரிந்தால் அதிர்ந்துபோவீர்கள்!

இது அறிமுகமமான அன்றிலிருந்து தற்போது வரை நாடே பெரும் பரபரப்பாகவே காணப்படுகின்றது. இதனை உறுதி செய்யும்வகையில், அண்மைக் காலங்களாக வெளிவந்த அபராதம்குறித்த செய்திகள் இருக்கின்றன.

அந்தவகையில், சமீபத்தில் லாரி ஓட்டுநர் ஒருவருக்கு நாட்டிலேயே அதிகபட்ச அபராதமாக ரூ. 86,500 வழங்கப்பட்டிருந்தது. இத்தகைய உச்சபட்ச அபராதத்தை வழங்க போலீஸார் சில காரணங்களை கூறினர்.

உச்சகட்ட அபராதத்தை பெற்ற லாரி உரிமையாளர்... எவ்வளவு என தெரிந்தால் அதிர்ந்துபோவீர்கள்!

அவை, தொடர்பில்லாத நபரை வாகனத்தை இயக்க வைத்தது (ரூ.5 ஆயிரம்). லைசன்ஸ் இல்லாமல் வாகனம் ஓட்டியது (ரூ.5 ஆயிரம்). அனுமதிக்கப்பட்ட அளவை விட கூடுதல் எடையில் சரக்கு ஏற்றியது (ரூ.56 ஆயிரம்). சரக்கை ஒழுங்கற்ற வடிவில் வாகனத்தில் ஏற்றி ஆபத்தான முறையில் எடுத்துச் சென்றது (ரூ.20 ஆயிரம்). பொது விதிமீறல் (ரூ.500). உள்ளிட்ட பல்வேறு விதிமீறல்களின் காரணமாக லாரியின் உரிமையாளருக்கு ஒட்டுமொத்தமாக ரூ. 86,500-க்கான அபராத செல்லாண் வழங்கப்பட்டது.

உச்சகட்ட அபராதத்தை பெற்ற லாரி உரிமையாளர்... எவ்வளவு என தெரிந்தால் அதிர்ந்துபோவீர்கள்!

இச்சம்பவம், ஒடிசா மாநித்தில் உள்ள சாம்பல்பூர் என்ற அரங்கேறியிருந்தது. இத்தகைய அபராதத்தை அசோக் ஜாதவ் என்ற இளைஞருக்கு அப்பகுதி வட்டாரப் போக்குவரத்து அலுவலர்கள் விதித்திருந்தனர்.

ஆனால், இதில் வெறும் 70 ஆயிரம் ரூபாய் மட்டுமே வழங்கப்பட்டது. மீத தொகைப் பற்றிய தகவல் வெளியாகவில்லை.

உச்சகட்ட அபராதத்தை பெற்ற லாரி உரிமையாளர்... எவ்வளவு என தெரிந்தால் அதிர்ந்துபோவீர்கள்!

இந்த அதீத அபராதத்தினால் அசோக் ஜாதவ் மிகவும் ஸ்பெஷலான நபராக காணப்பட்டார். ஏனென்றால், அதுவரை இந்தளவிற்கான அபராதத்தை யாரும் பெறவில்லை. ஆகையால், நாட்டின் முதல் அதிகபட்ச அபராதத்தைப் பெற்றவராக அவர் மாறினார்.

உச்சகட்ட அபராதத்தை பெற்ற லாரி உரிமையாளர்... எவ்வளவு என தெரிந்தால் அதிர்ந்துபோவீர்கள்!

இந்நிலையில், அதிகபட்ச அபராதத்தைப் பெற்றதில் அசோக் ஜாதவையே தோற்கடிக்கும் வகையில் ஓர் சம்பவம் டெல்லியில் நடைபெற்றுள்ளது.

பல்வேறு முறைகேட்டில் ஈடுபட்ட டிரக்கின் உரிமையாளர் மற்றும் ஓட்டுநருக்கு ரூ. 2 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

MOST READ: மற்றொருவரின் பெயரில் எலெக்ட்ரிக் காரை வாங்கி பயன்படுத்தும் அம்பானி... உண்மை வெளிவந்ததால் அதிர்ச்சி!

உச்சகட்ட அபராதத்தை பெற்ற லாரி உரிமையாளர்... எவ்வளவு என தெரிந்தால் அதிர்ந்துபோவீர்கள்!

இதற்கும் பல்வேறு காரணங்கள் கூறப்படுகின்றன. அந்தவகையில், அதிகபட்ச லோடை ஏற்றிவந்த குற்றத்திற்காக ரூ. 20 ஆயிரமும், அனுமதிக்கப்பட்டதை விட 18 டன் எடையுள்ள கூடுதல் பொருட்களை ஏற்றி வந்ததற்காக ரூ. 36 ஆயிரமும் அந்த லாரிக்கு விதிக்கப்பட்டுள்ளது. இதில், ஒவ்வொரு டன்னிற்கும் ரூ. 2 ஆயிரம் என்ற அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

MOST READ: அதிர்ச்சியில் மக்கள்... மத்திய அரசின் அதிரடி முடிவு குறித்த தகவல் வெளியானது... என்னவென்று தெரியுமா?

உச்சகட்ட அபராதத்தை பெற்ற லாரி உரிமையாளர்... எவ்வளவு என தெரிந்தால் அதிர்ந்துபோவீர்கள்!

இத்துடன், ஓட்டுநர் உரிமம் இல்லாதது, பியூசி சான்று இல்லாதது, பெர்மிட் முறைகேடு, காப்பீடு இல்லாதது மற்றும் சீட் பெல்ட் அணியவில்லை உள்ளிட்ட பல்வேறு விதிமீறல்களில் ஈடுபட்டதாக கூறி லாரியின் ஓட்டுநர் மற்றும் உரிமையாளருக்கு அபராத செல்லாண் வழங்கப்பட்டுள்ளது.

MOST READ: இப்படியும் போலீஸார்கள் செய்வார்களா..? மிகவும் வித்தியாசமான அபராத முறையை கையாளும் காவலர்கள்!

உச்சகட்ட அபராதத்தை பெற்ற லாரி உரிமையாளர்... எவ்வளவு என தெரிந்தால் அதிர்ந்துபோவீர்கள்!

இவையனைத்திற்கும் சேர்த்து ஒட்டுமொத்தமாக ரூ. 2 லட்சத்து 500-க்கான அபராத செல்லாண் வழங்கப்பட்டுள்ளது. இந்த அபராதத்திற்கான தொகையை ரோஹினி நீதிமன்ற வளாகத்தில் கட்டும்படி டிரக்கின் உரிமையாளருக்கு கூறப்பட்டுள்ளது.

உச்சகட்ட அபராதத்தை பெற்ற லாரி உரிமையாளர்... எவ்வளவு என தெரிந்தால் அதிர்ந்துபோவீர்கள்!

இந்த டிரக் ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த ராம் கிஷான் என்பவருக்கு சொந்தமானது என தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், போக்குவரத்துத் துறையின் அமலாக்க குழுவினரால் மேற்கொள்ளப்பட்ட வாகன தணிக்கையின்போதே டிரக்கின் விதிமீறல்கள்குறித்த தகவல் வெளிச்சத்திற்கு வந்திருக்கின்றது.

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Truck Driver Gets Rs 2 Lakh Chellan For MV Act Violations In Delhi. Read In Tamil.
Story first published: Friday, September 13, 2019, 14:27 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X