நாடாளுமன்றத்திற்கு மத்திய அமைச்சர் வந்த கார் பத்தி உங்களுக்கு தெரியுமா? நச்சுனு ஒரு காரணம் இருக்கு

மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் நாடாளுமன்றத்திற்கு வந்த கார் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

நாடாளுமன்றத்திற்கு மத்திய அமைச்சர் வந்த கார் பத்தி உங்களுக்கு தெரியுமா? நச்சுனு ஒரு காரணம் இருக்கு

உலகில் காற்று அதிகம் மாசடைந்த பெரும்பாலான நகரங்கள் இந்தியாவில்தான் இருக்கின்றன. எனவே காற்று மாசுபாடு பிரச்னையை கட்டுக்குள் கொண்டு வருவதற்காக பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. எலெக்ட்ரிக் வாகனங்களை அதிகளவில் பயன்பாட்டிற்கு கொண்டு வருவதும் இதில் ஒன்று.

நாடாளுமன்றத்திற்கு மத்திய அமைச்சர் வந்த கார் பத்தி உங்களுக்கு தெரியுமா? நச்சுனு ஒரு காரணம் இருக்கு

காற்று மாசுபாட்டிற்கு பல்வேறு காரணங்கள் இருந்தாலும், பெட்ரோல், டீசலில் இயங்கும் வாகனங்கள் வெளியிடும் புகைதான் மிக முக்கியமான காரணமாக உள்ளது. எனவே பெட்ரோல், டீசல் வாகனங்களின் பயன்பாட்டை குறைத்து விட்டு அதற்கு பதிலாக எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிக்க வேண்டும் என மத்திய அரசு விரும்புகிறது.

நாடாளுமன்றத்திற்கு மத்திய அமைச்சர் வந்த கார் பத்தி உங்களுக்கு தெரியுமா? நச்சுனு ஒரு காரணம் இருக்கு

எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாடு அதிகரித்தால், கச்சா எண்ணெய் இறக்குமதி குறைந்து, பொருளாதார நிலை மேம்படும் என்பதும் கூடுதல் சிறப்பம்சமாக உள்ளது. எனவே இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாடு அதிகரிக்க வேண்டும் என்பதற்காக, ஜிஎஸ்டி குறைப்பு, ஃபேம் இந்தியா திட்டத்தின் கீழ் மானியம் என அவற்றுக்கு பல்வேறு சிறப்பு சலுகைகளை மத்திய அரசு வழங்கி வருகிறது.

நாடாளுமன்றத்திற்கு மத்திய அமைச்சர் வந்த கார் பத்தி உங்களுக்கு தெரியுமா? நச்சுனு ஒரு காரணம் இருக்கு

இந்த சூழலில் மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் பாராளுமன்றத்திற்கு சமீபத்தில் ஹூண்டாய் கோனா எலெக்ட்ரிக் காரில் வந்தார். எலெக்ட்ரிக் எஸ்யூவி ரகத்தை சேர்ந்த ஹூண்டாய் கோனா கடந்த சில மாதங்களுக்கு முன்புதான் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் களமிறங்கிய இந்த காருக்கு வாடிக்கையாளர்கள் அமோக வரவேற்பை வழங்கியுள்ளனர்.

நாடாளுமன்றத்திற்கு மத்திய அமைச்சர் வந்த கார் பத்தி உங்களுக்கு தெரியுமா? நச்சுனு ஒரு காரணம் இருக்கு

இந்த சூழலில் மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் ஹூண்டாய் கோனா எலெக்ட்ரிக் காரில் நாடாளுமன்றத்திற்கு வந்தது, இந்தியாவில் பொதுமக்கள் மத்தியில் எலெக்ட்ரிக் வாகனங்களை பிரபலமாக்கும் மத்திய அரசின் முயற்சிகளில் ஒன்றாக பார்க்கப்படுகிறது. இது தொடர்பாக பிரகாஷ் ஜவடேகர் சில கருத்துக்களை முன்வைத்துள்ளார்.

நாடாளுமன்றத்திற்கு மத்திய அமைச்சர் வந்த கார் பத்தி உங்களுக்கு தெரியுமா? நச்சுனு ஒரு காரணம் இருக்கு

இதுகுறித்து அவர் கூறுகையில், ''காற்று மாசுபாட்டை குறைக்க வேண்டும் என்பதற்காக அரசு படிப்படியாக எலெக்ட்ரிக் கார்களுக்கு மாறி வருகிறது. காற்று மாசுபாட்டிற்கு எதிரான போராட்டத்தில் பொதுமக்களும் தங்கள் பங்களிப்பை வழங்க வேண்டும்'' என்றார். ஹூண்டாய் கோனா எலெக்ட்ரிக் காரில், 134hp permanent-magnet synchronous எலெக்ட்ரிக் மோட்டார் பொருத்தப்பட்டுள்ளது.

நாடாளுமன்றத்திற்கு மத்திய அமைச்சர் வந்த கார் பத்தி உங்களுக்கு தெரியுமா? நச்சுனு ஒரு காரணம் இருக்கு

மேலும் இதில் 39.2 kWh லித்தியம் அயான் பாலிமர் பேட்டரி வழங்கப்பட்டுள்ளது. இந்த காரின் மோட்டார் 394.9 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்த கூடிய திறன் வாய்ந்தது. பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 100 கிலோ மீட்டர்கள் என்ற வேகத்தை ஹூண்டாய் கோனா எலெக்ட்ரிக் கார் வெறும் 9.7 வினாடிகளில் எட்டி விடும் என்பது குறிப்பிடத்தக்கது.

நாடாளுமன்றத்திற்கு மத்திய அமைச்சர் வந்த கார் பத்தி உங்களுக்கு தெரியுமா? நச்சுனு ஒரு காரணம் இருக்கு

ஹூண்டாய் கோனா எலெக்ட்ரிக் காரில், ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்பிளே சப்போர்ட் வசதிகளுடன் கூடிய 6.9 இன்ச் இன்போடெயின்மெண்ட் சிஸ்டம் வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு பல்வேறு சிறப்பம்சங்களை உள்ளடக்கிய ஹூண்டாய் கோனா எலெக்ட்ரிக் காரில், மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் நாடாளுமன்றத்திற்கு வந்திருப்பது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

நாடாளுமன்றத்திற்கு மத்திய அமைச்சர் வந்த கார் பத்தி உங்களுக்கு தெரியுமா? நச்சுனு ஒரு காரணம் இருக்கு

ஆனால் முக்கிய அரசியல் பிரமுகர்கள் எலெக்ட்ரிக் காரில் பயணம் செய்வது இது முதல் முறையல்ல என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு, பீகார் மாநில சட்டசபைக்கு அம்மாநில முதல்வர் நிதிஷ் குமார் எலெக்ட்ரிக் காரில் வந்தார். அவரை தொடர்ந்து அம்மாநில துணை முதல்வர் சுஷில் குமார் மோடியும் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக எலெக்ட்ரிக் காரில் வந்தார்.

நாடாளுமன்றத்திற்கு மத்திய அமைச்சர் வந்த கார் பத்தி உங்களுக்கு தெரியுமா? நச்சுனு ஒரு காரணம் இருக்கு

இவை அனைத்தும் பொதுமக்கள் மத்தியில் எலெக்ட்ரிக் வாகனங்களை பிரபலமாக்கும் முயற்சிகளின் ஒரு பகுதியாகவே பார்க்கப்படுகிறது. தற்போதைய நிலையில் எலெக்ட்ரிக் வாகனங்கள் தொடர்பாக பொதுமக்களுக்கு போதிய விழிப்புணர்வு இல்லை. ஆனால் மத்திய அரசின் முயற்சியால் வருங்காலங்களில் இந்த நிலை மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Most Read Articles
English summary
Union Minister Prakash Javadekar Arrives In Hyundai Kona In A Bid To Promote Electric Vehicles. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X