இந்தியாவில் 50 புதிய கார், டூவீலர்கள் களமிறங்குகின்றன... இதில் நீங்கள் எதை சொந்தமாக்க போகிறீர்கள்?

இந்தியாவில் 50 புதிய வாகனங்கள் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ளன. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இந்தியாவில் 50 புதிய கார், டூவீலர்கள் களமிறங்குகின்றன... இதில் நீங்கள் எதை சொந்தமாக்க போகிறீர்கள்?

உலகின் மிக முக்கியமான மற்றும் மிகப்பெரிய வாகன மார்க்கெட்டை கொண்ட நாடுகளில் ஒன்று இந்தியா. எனவே உலகின் பல்வேறு முன்னணி வாகன உற்பத்தி நிறுவனங்களும் இந்தியாவை நோக்கி படையெடுத்து வருகின்றன. எம்ஜி மற்றும் சிஎஃப் மோட்டோ உள்ளிட்ட நிறுவனங்கள் இதற்கு ஓர் உதாரணம் மட்டுமே. இங்கிலாந்தை சேர்ந்த எம்ஜி நிறுவனம் தனது முதல் காரான ஹெக்டர் எஸ்யூவியை சமீபத்தில் இந்திய மார்க்கெட்டில் விற்பனைக்கு அறிமுகம் செய்தது.

இந்தியாவில் 50 புதிய கார், டூவீலர்கள் களமிறங்குகின்றன... இதில் நீங்கள் எதை சொந்தமாக்க போகிறீர்கள்?

அதேபோல் சீனாவை சேர்ந்த சிஎஃப் மோட்டோ நிறுவனம் கடந்த ஒரு சில நாட்களுக்கு முன்புதான் 4 புதிய மோட்டார்சைக்கிள் மாடல்களை இந்தியாவில் அதிரடியாக களமிறக்கியது. இதுதவிர தென் கொரியாவை சேர்ந்த கியா மோட்டார் நிறுவனம் செல்டோஸ் எஸ்யூவி ரக காரை வெகு விரைவில் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளது. கியா மோட்டார் நிறுவனம் இந்தியாவில் விற்பனைக்கு களமிறக்கவுள்ள முதல் மாடல் செல்டோஸ் எஸ்யூவிதான்.

இந்தியாவில் 50 புதிய கார், டூவீலர்கள் களமிறங்குகின்றன... இதில் நீங்கள் எதை சொந்தமாக்க போகிறீர்கள்?

ஆனால் கடந்த சில மாதங்களாக இந்தியாவின் வாகன மார்க்கெட் 'டல்' அடித்து கொண்டிருக்கிறது என்பதே உண்மை. எனினும் அதற்காக இந்திய மார்க்கெட்டில் புதிய தயாரிப்புகளை அறிமுகம் செய்வதை முன்னணி வாகன உற்பத்தி நிறுவனங்கள் நிறுத்தி விடவில்லை. இந்திய ஆட்டோமொபைல் துறை கூடிய விரைவில் இயல்பு நிலைக்கு திரும்பும் என எதிர்பார்க்கப்படுகிறது. எதிர்வரும் பண்டிகை காலத்தின்போது வாகன விற்பனை மீண்டும் வளர்ச்சி பாதையில் பயணிக்க தொடங்கும் என ஆட்டோமொபைல் நிறுவனங்கள் நம்புகின்றன.

இந்தியாவில் 50 புதிய கார், டூவீலர்கள் களமிறங்குகின்றன... இதில் நீங்கள் எதை சொந்தமாக்க போகிறீர்கள்?

அத்துடன் பிஎஸ்-6 மாசு உமிழ்வு விதிமுறைகள் அமலுக்கு வருவதற்கு முன்பாகவும் வாடிக்கையாளர்கள் வாகனங்களை அதிக அளவில் வாங்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில் பிஎஸ்-6 விதிமுறைகள் காரணமாக வாகனங்களின் விலை கணிசமாக உயரவுள்ளது. எனவே பிஎஸ்-6 விதிகள் அமலுக்கு வருவதற்கு முன்னதாக வாகனங்களை வாங்கி விட்டால், பணத்தை ஓரளவிற்கு மிச்சம் பிடிக்க முடியும். மிகவும் கடுமையான பிஎஸ்-6 மாசு உமிழ்வு விதிகள் வரும் 2020ம் ஆண்டு ஏப்ரல் 1ம் தேதி முதல் அமலுக்கு வரவுள்ளன.

இந்தியாவில் 50 புதிய கார், டூவீலர்கள் களமிறங்குகின்றன... இதில் நீங்கள் எதை சொந்தமாக்க போகிறீர்கள்?

யாரிஸ் — மாருதி சியாஸ் மற்றும் ஹோண்டா சிட்டி கார்களுக்கான டொயோட்டாவின் பதில்! டெஸ்ட் டிரைவ் செய்து பார்க்க வேண்டுமா?

இந்த சூழலில் இந்திய மார்க்கெட்டில் அறிமுகம் செய்யப்படுவதற்காக சுமார் 50 வாகனங்கள் தயாராக இருப்பதாக பிஸ்னஸ் ஸ்டாண்டர்டு தற்போது செய்தி வெளியிட்டுள்ளது. அதாவது நடப்பு நிதியாண்டு இறுதிக்குள் (மார்ச் 2020) சுமார் 30 புதிய நான்கு சக்கர வாகனங்கள் மற்றும் சுமார் 20 புதிய இரு சக்கர வாகனங்கள் இந்திய மார்க்கெட்டில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ளதாக அந்த செய்தி தெரிவிக்கிறது. இதில், கார்கள், பைக்குகள், ஸ்கூட்டர்கள் மற்றும் எலெக்ட்ரிக் வாகனங்கள் ஆகியவை அடங்கும்.

இந்தியாவில் 50 புதிய கார், டூவீலர்கள் களமிறங்குகின்றன... இதில் நீங்கள் எதை சொந்தமாக்க போகிறீர்கள்?

முதலில் இந்திய மார்க்கெட்டில் விற்பனைக்கு எதிர்பார்பார்க்கப்படும் கார்களின் பட்டியலை பார்த்து விடலாம்.

  • கியா செல்டோஸ்
  • மாருதி சுஸுகி எர்டிகா க்ராஸ்
  • மாருதி சுஸுகி எஸ் பிரெஸ்ஸோ
  • மாருதி சுஸுகி எஸ்-க்ராஸ் பெட்ரோல்
  • மாருதி சுஸுகி விட்டாரா
  • மாருதி வேகன்ஆர் எலெக்ட்ரிக்
  • ஹூண்டாய் கிராண்ட் ஐ10 ஃபேஸ்லிஃப்ட்
  • ஹூண்டாய் எலைட் ஐ20 ஃபேஸ்லிஃப்ட்
  • ஹூண்டாய் டக்சன் ஃபேஸ்லிஃப்ட்
  • புதிய ஹோண்டா சிட்டி
  • ஹோண்டா எச்ஆர்-வி
  • டாடா காஸினி
  • டாடா அல்ட்ராஸ்
  • டாடா அல்ட்ராஸ் எலெக்ட்ரிக்
  • எம்ஜி ஹெக்டர் (7 சீட்டர் வேரியண்ட்)
  • எம்ஜி இஇஸட்எஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவி
  • ரெனால்ட் ட்ரைபர்
  • ரெனால்ட் க்விட் ஃபேஸ்லிஃப்ட்
  • ரெனால்ட் க்விட் எலெக்ட்ரிக்
  • ஸ்கோடா கரோக்
  • ஃபோக்ஸ்வேகன் டைகுன் ஆல்ஸ்பேஸ்
  • Jeep Moab
  • மஹிந்திரா கேயூவி100 எலெக்ட்ரிக்
  • நிஸான் லீஃப்
  • ஆடி இ-ட்ரான்
  • இந்தியாவில் 50 புதிய கார், டூவீலர்கள் களமிறங்குகின்றன... இதில் நீங்கள் எதை சொந்தமாக்க போகிறீர்கள்?

    அடுத்ததாக இந்திய மார்க்கெட்டில் விற்பனைக்கு எதிர்பார்க்கப்படும் இரு சக்கர வாகனங்களின் பட்டியலை பார்ப்போம்.

    • ஹோண்டா சிபிஆர்300ஆர்
    • ஹோண்டா பிசிஎக்ஸ் 125
    • ஹோண்டா ஆக்டிவா 125 fi
    • பஜாஜ் பல்சர் 125என்எஸ்
    • பஜாஜ் பல்சர் 180என்எஸ்
    • பஜாஜ் அர்பனைட்
    • ஹீரோ ஹஸ்டர்
    • சுஸுகி ஜிக்ஸெர் 250
    • டிவிஎஸ் க்ரியான்
    • டிவிஎஸ் ஜெப்லின்
    • கேடிஎம் 1050 அட்வென்சர்
    • கேடிஎம் 390 அட்வென்சர்
    • ரிவோல்ட் ஆர்வி400
    • அல்ட்ராவைலட் எஃப்77
    • இந்தியாவில் 50 புதிய கார், டூவீலர்கள் களமிறங்குகின்றன... இதில் நீங்கள் எதை சொந்தமாக்க போகிறீர்கள்?

      இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிப்பதில் மத்திய அரசு மிகவும் தீவிரமாக உள்ளது. எனவே எலெக்ட்ரிக் வாகனங்களை விற்பனைக்கு அறிமுகம் செய்வதில் வாகன உற்பத்தி நிறுவனங்களும் ஆர்வம் காட்டி வருகின்றன. ஆனால் சார்ஜிங் ஸ்டேஷன்கள் பற்றாக்குறை உள்ளிட்ட ஒரு சில காரணங்களால் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு மாறுவதில் மக்களுக்கு சற்று தயக்கம் நிலவி வருகிறது. எனவே சார்ஜிங் ஸ்டேஷன்களின் எண்ணிக்கையை அதிகரிக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதுபோன்ற பிரச்னைகள் களையப்பட்ட பின் இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்களும் மிக அதிக அளவில் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Most Read Articles
English summary
India To Receive Almost 50 New Vehicles By March 2020 — Here Is The list!. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X