2020ல் ஹூண்டாய் நிறுவனம் அறிமுகப்படுத்தவுள்ள கார்கள் இவைதான்...

இந்தியாவின் இரண்டாவது மிக பெரிய கார் விற்பனை நிறுவனமாக ஹூண்டாய் விளங்குகிறது. இந்நிறுவனத்தில் இருந்து நடைபெற்று வரும் 2019ஆம் ஆண்டில் வென்யூ, கோனா இவி மற்றும் க்ராண்ட் ஐ10 நியாஸ் போன்ற வெற்றிக்கரமான மாடல்கள் சந்தையில் இறக்குமதியாகியுள்ளன.

அந்த வகையில் வாடிக்கையாளர்கள் பெரிதும் எதிர்பார்த்திருக்கும் ஹூண்டாய் நிறுவனத்தின் 2020ஆம் ஆண்டின் அறிமுக மாடல்கள் சிலவற்றை இந்த செய்தியில் பார்ப்போம்...

2020ல் ஹூண்டாய் நிறுவனம் அறிமுகப்படுத்தவுள்ள கார்கள் இவைதான்...

ஹூண்டாய் வெர்னா ஃபேஸ்லிப்ட்

2020 டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகப்படுத்தப்பட இருக்கும் இந்த ஹூண்டாய் வெர்னா ஃபேஸ்லிஃப்ட் மாடலில் உட்புறம், வெளிப்புறம் மற்றும் என்ஜின் என அனைத்து பாகங்களும் அப்டேட்டாக கொடுக்கப்பட்டுள்ளன. குறிப்பாக இந்த காரின் முன்புறம் மிகவும் கவர்ச்சிகரமான தோற்றத்தில் உள்ளது.

2020ல் ஹூண்டாய் நிறுவனம் அறிமுகப்படுத்தவுள்ள கார்கள் இவைதான்...

இதன் முன்புற பம்பர் மற்றும் ஹெட்லைட் அமைப்பு இதுவரை எந்த காரிலும் பார்த்திராத டிசைனில் வடிவமைக்கப்பட்டுள்ளது. அலாய் சக்கரங்களும் புதிய வடிவில் மாற்றமடைந்துள்ளன.

2020ல் ஹூண்டாய் நிறுவனம் அறிமுகப்படுத்தவுள்ள கார்கள் இவைதான்...

ஹூண்டாய் க்ரெட்டா எஸ்யூவியின் இரண்டாம் தலைமுறை மாடல்

வாடிக்கையாளரின் பெரிய எதிர்பார்ப்பில் உள்ள எஸ்யூவி கார்களில் ஒன்றாக ஹூண்டாய் க்ரெட்டாவின் இரண்டாம் தலைமுறை கார் விளங்குகிறது. அடுத்த ஆண்டில் ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகமாகும் இந்த கார் கியா செல்டோஸ் மாடலின் அடிப்படையில் சிறிய அளவிலான எஸ்யூவியாக வெளியாகவுள்ளது.

2020ல் ஹூண்டாய் நிறுவனம் அறிமுகப்படுத்தவுள்ள கார்கள் இவைதான்...

மேலும் தற்போதைய மாடலை விட கம்பீரமாகவும் புதிய மாடர்ன் டிசைன்களையும் கொண்டுள்ளது. சீனா மார்கெட்டில் ஏற்கனவே அறிமுகமாகிவிட்ட இந்த காரின் சிறப்பே இதன் முன்புற க்ரில் மற்றும் விளக்கு அமைப்புகள் தான். தற்போதைய மாடலை போல பக்கவாட்டு தோற்றத்தை கொண்டிருந்தாலும் இந்த காரின் பின்புற பகுதி புதிய காருக்கான தோற்றத்தை கொடுக்கிறது.

2020ல் ஹூண்டாய் நிறுவனம் அறிமுகப்படுத்தவுள்ள கார்கள் இவைதான்...

ஹூண்டாய் எக்ஸ்செண்ட் (அவ்ரா)

ஹூண்டாய் எக்ஸ்செண்ட் மாடலின் அடுத்த வெர்சன் கார் அவ்ரா என்ற பெயரில் அடுத்த ஆண்டில் வெளியாகவுள்ளது. ஹூண்டாயின் ஐ10 நியாஸ் மாடலின் தொழிற்நுட்பங்களுடன் வெளியாகும் இந்த புதிய கார் தனி நபர் வாடிக்கையாளர்களுக்கு ஏற்ற வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

2020ல் ஹூண்டாய் நிறுவனம் அறிமுகப்படுத்தவுள்ள கார்கள் இவைதான்...

சப்-4 மீட்டர் பிரிவில் இந்த கார் அறிமுகமானாலும் அகலத்திலும் உயரத்திலும் நன்கு பெரியதாகவே தென்படுகிறது. தற்சமயம் முழுவதும் மறைக்கப்பட்ட நிலையில் சோதனை ஓட்டங்களில் ஈடுப்படுத்தப்பட்டு வரும் இந்த கார் இந்திய சந்தையில் மாருதி டிசைர், ஹோண்டா அமேஸ் போன்ற கார்களுடன் கடுமையாக போட்டியிடவுள்ளது.

2020ல் ஹூண்டாய் நிறுவனம் அறிமுகப்படுத்தவுள்ள கார்கள் இவைதான்...

ஹூண்டாய் சொனாட்டா

2018ஆம் ஆண்டு ஜெனிவா மோட்டார் கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்ட ஹூண்டாய் லீ ஃபில் ரப் கான்செப்ட்டின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட கார் தான் ஹூண்டாய் சொனாட்டா செடான். இந்நிறுவனத்தால் அடுத்த ஆண்டு விற்பனையை துவங்கவுள்ள இந்த கார் புதிய டிசைனில் க்ரில் அமைப்பு, 4 அறைகள் கொண்ட ஹெட்லைட்டுகள், முன்புற பம்பரில் யு வடிவிலான க்ரோம் என அசத்தலான அம்சங்களை தன்னுள் கொண்டுள்ளது.

2020ல் ஹூண்டாய் நிறுவனம் அறிமுகப்படுத்தவுள்ள கார்கள் இவைதான்...

இந்த ஆண்டு இறுதியிலேயே விற்பனையை இந்த செடான் கார் துவங்கிவிடும் என பலரும் நினைத்திருந்தனர். ஆனால் அடுத்த ஆண்டு ஏப்ரலில் ஆட்டோ எக்ஸ்போவில் தான் இதன் அறிமுகம் நடைபெறவுள்ளது. மேலும் இந்த காரின் ஹைப்ரீடு என்ஜின் வேரியண்ட்டில் சூரிய ஒளியின் மூலம் மின்சாரத்தை என்ஜினிற்கு வழங்கும் வகையில் சோலார் பேனலை பொருத்தும் திட்டமும் ஹூண்டாய் நிறுவனத்திடம் உள்ளதாம்.

2020ல் ஹூண்டாய் நிறுவனம் அறிமுகப்படுத்தவுள்ள கார்கள் இவைதான்...

ஹூண்டாய் ஐ10 நியாஸ் என் லைன்

ஹூண்டாய் நிறுவனத்தின் என்-லைன் மாடல்கள் இதுவரை இந்திய சந்தையில் இறக்குமதியானது இல்லை. ஆனால் ஐ10 மாடலின் என்-லைன் காரை அடுத்த ஆண்டில் அறிமுகப்படுத்த ஹூண்டாய் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

2020ல் ஹூண்டாய் நிறுவனம் அறிமுகப்படுத்தவுள்ள கார்கள் இவைதான்...

1.0 லிட்டர் டர்போ-பெட்ரோல் என்ஜினுடன் ஹூண்டாயின் இந்த என்-லைன் கார் அடுத்த ஆண்டு ஆட்டோ எக்ஸ்போவில் வெளியாகவுள்ளது. ஆனால் இந்த காரின் விற்பனை அறிமுகத்திற்கு சில மாதங்களுக்கு பிறகு தான் துவங்கும் என கூறப்படுகிறது.

2020ல் ஹூண்டாய் நிறுவனம் அறிமுகப்படுத்தவுள்ள கார்கள் இவைதான்...

ஹூண்டாய் எலைட் ஐ20 ஃபேஸ்லிஃப்ட்

ஹூண்டாய் மோட்டார்ஸ் இந்தியா நிறுவனம் எலைட் ஐ20 மாடலின் அடுத்த வெர்சனை 2020ல் அறிமுகப்படுத்தவுள்ளது. மாருதி பலேனோ காருக்கு போட்டியாக அறிமுகமாகவுள்ள இந்த காரில் முந்தைய மாடலை விட புதிய டிசைனில் வெளிப்புறம், கம்பீரமான க்ரில், நேர்த்தியான ஹெட்லைட் அமைப்புகளும் கொடுக்கப்பட்டுள்ளது.

2020ல் ஹூண்டாய் நிறுவனம் அறிமுகப்படுத்தவுள்ள கார்கள் இவைதான்...

இத்துடன் ஸ்போர்ட்டியான பம்பர், தற்போதைய மாடலை விட இன்னும் டைனாமிக் தோற்றத்தில் காரின் பக்கவாட்டுகள், ஸ்டைலிஷான எல்இடி லைட்களை கொண்ட பின்புறம் உள்ளிட்டவையுடன் எலைட் ஐ20 மாடலின் இந்த ஃபேஸ்லிஃப்ட் வெர்சன் உள்ளது. பிஎஸ்6 தரத்திற்கு இணக்கமான 1.2 லிட்டர் பெட்ரோல் மற்றும் 1.4 லிட்டர் டீசல் என்ஜின் தேர்வுகளை இந்த கார் கொண்டுள்ளது.

Most Read Articles
English summary
Hyundai Cars Launching In 4 Months (By March 2020)
Story first published: Monday, November 18, 2019, 16:02 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X