விரைவில் களமிறங்க இருக்கும் புதிய மாடல் பொலிரோவின் ஸ்பை படங்கள்!

விரைவில் விற்பனைக்கு களமிறங்க இருக்கும் புதிய மாடல் பொலிரோவின் ஸ்பை படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. இந்த புதிய மாடல் பொலிரோ குறித்த கூடுதல் விவரங்களை இந்த பதிவில் காணலாம்.

விரைவில் களமிறங்க இருக்கும் புதிய மாடல் பொலிரோவின் ஸ்பை படங்கள்!

மஹிந்திரா நிறுவனம் அதன் அப்கமிங் மாடலான 2019 பொலிரோ மாடலை பரிசோதனைச் செய்யும் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த காரினை கேமோபிளாக் (Camouflage) எனப்படும் ஸ்டிக்கரைக் கொண்டு மறைத்து பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது.

விரைவில் களமிறங்க இருக்கும் புதிய மாடல் பொலிரோவின் ஸ்பை படங்கள்!

பரிசோதனைச் செய்யப்பட்ட இந்த புதிய மாடல் பொலிரோவில் பிஎஸ்6 மாசு உமிழ்வுக் கட்டுப்பாடு கொண்ட எஞ்ஜின் பொருத்தப்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது. இத்துடன் வருகின்ற அக்டோபர் மாதம் நடைமுறைக்கு வரவிருக்கும் புதிய பாதுகாப்பு விதிமுறைகளுக்கு ஏற்பவும், இது தயாராகி இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

விரைவில் களமிறங்க இருக்கும் புதிய மாடல் பொலிரோவின் ஸ்பை படங்கள்!

தற்போது வெளியாகி இருக்கும் பொலிரோ குறித்த ஸ்பை படம், அதன் தோற்றத்தில் பெரிதாக எந்தவொரு மாற்றமும் செய்யப்படவில்லை என்பதை உறுதி செய்கிறது. ஆனால், அதன் முகப்பு பக்கத்தில் பொருத்தப்பட்டுள்ள கிரில் அமைப்பில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. அந்த வகையில், புதிய மாடல் கிரில் கொடுக்கப்பட்டுள்ளது.

விரைவில் களமிறங்க இருக்கும் புதிய மாடல் பொலிரோவின் ஸ்பை படங்கள்!

மேலும், இன்டெக்ரேடட் டர்ன் சிக்னலுடன் கூடிய சிங்கிள்-பாட் முகப்பு விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. இத்துடன், பனி விளக்குகள் காரின் பம்பரில் பொருத்தப்பட்டுள்ளன. மஹிந்திராவின் இந்த புதிய மாடல் பொலிரோவில் கிரே பிளாஸ்டிக் டிரிம்ஸ் அனைத்து பக்க வீல்களிலும் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த காரில் டேலிகேட் மவுண்டட் ஸ்பேர் வீல்கள் டியூவல் டோன் கலருடன் இடம்பெற்றிருக்கிறது.

விரைவில் களமிறங்க இருக்கும் புதிய மாடல் பொலிரோவின் ஸ்பை படங்கள்!

இந்த ஸ்பை படத்தில் காட்சியாகியிருக்கும் பொலிரோ, இசட்எல்எக்ஸ் வேரியண்ட் என கூறப்படுகிறது. இந்த காருக்கு ஓஆர்விஎம் கலரில் வர்ணம் தீட்டப்பட்டுள்ளது. இதன், பின் இருக்கையில் பயணிகளுக்கான ஹெட்ரெஸ்ட் நிறுவப்பட்டுள்ளன.

விரைவில் களமிறங்க இருக்கும் புதிய மாடல் பொலிரோவின் ஸ்பை படங்கள்!

தற்போது விற்பனையில் இருக்கும் பொலிரோவில் 2.5 லிட்டர் எம்2டிஐசிஆர் டர்போசார்ஜட் எஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது 62 பிஎச்பி பவரை 3,200 ஆர்பிஎம்-இல் வெளிப்படுத்தும். மேலும், 195 என்எம் டார்க்கை 1,400 முதல் 2,200 ஆர்பிஎம்-இல் வெளிப்படுத்தும் திறன் கொண்டது.

விரைவில் களமிறங்க இருக்கும் புதிய மாடல் பொலிரோவின் ஸ்பை படங்கள்!

ஆனால், ஸ்பை படத்தில் காட்சியாகி இருக்கும் புதிய ஜெனரேஷன் பொலிரோவில், எம்ஹாக் டி70 பேட்ச் பொருத்தப்பட்டுள்ளது. இது, இந்த புதிய மாடலில் எம்ஹாக் டி70 எஞ்ஜின் பொருத்தப்பட்டிருப்பதை உறுதி செய்கிறது. இந்த எஞ்ஜின் 3 சிலிண்டர்களைக் கொண்டது.

விரைவில் களமிறங்க இருக்கும் புதிய மாடல் பொலிரோவின் ஸ்பை படங்கள்!

மேலும், இதில் 1.5 லிட்டர் டீசல் எஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது, 70 பிஎச்பி பவரை 3,600 ஆர்பிஎம்-இல் வெளிப்படுத்தும். மேலும், 195 என்எம் டார்க்கை 1,400 முதல் 2,200 ஆர்பிஎம்-இல் வெளிப்படுத்தும் திறன் கொண்டது. இந்த இரண்டு எஞ்ஜின்களும் 5 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷனில் இயங்கும் தன்மைக் கொண்டது.

Source: Teambhp

Most Read Articles
மேலும்... #மஹிந்திரா #mahindra
English summary
Upcoming Mahindra Bolero Spotted On Test. Read In Tamil.
Story first published: Saturday, April 20, 2019, 16:29 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X