டொயோட்டா இன்னோவா கிரிஸ்டாவிற்கு ஆபத்து... மலையை சரிக்க களமிறங்கும் புதிய கார்கள் இவைதான்...

டொயோட்டா இன்னோவா கிரிஸ்டா காருக்கு போட்டியாக பல்வேறு புதிய மாடல் கார்கள் இந்திய மார்க்கெட்டில் அறிமுகம் செய்யப்படவுள்ளன. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

டொயோட்டா இன்னோவா கிரிஸ்டாவிற்கு ஆபத்து... மலையை சரிக்க களமிறங்கும் புதிய கார்கள் இவைதான்...

இந்திய மார்க்கெட்டை பொறுத்தவரை எம்பிவி ரக கார்கள் அவ்வளவாக பிரபலம் இல்லாத ஒன்று. குறிப்பாக பிரீமியம் எம்பிவி ரக கார்களுக்கு இங்கு மவுசு குறைவுதான். ஆனால் இதற்கு டொயோட்டா இன்னோவா கிரிஸ்டா மட்டும் விதிவிலக்கு.

டொயோட்டா இன்னோவா கிரிஸ்டாவிற்கு ஆபத்து... மலையை சரிக்க களமிறங்கும் புதிய கார்கள் இவைதான்...

சற்று விலை உயர்ந்த கார் என்றாலும் கூட டொயோட்டா இன்னோவா கிரிஸ்டா விற்பனையில் பெரிதாக சாதித்து கொண்டே வருகிறது. சில மலிவான விலை கொண்ட எம்பிவி கார்களை காட்டிலும் டொயோட்டா இன்னோவா கிரிஸ்டா அதிகம் விற்பனையாவது ஆச்சரியமான விஷயம்தான்.

டொயோட்டா இன்னோவா கிரிஸ்டாவிற்கு ஆபத்து... மலையை சரிக்க களமிறங்கும் புதிய கார்கள் இவைதான்...

டொயோட்டா இன்னோவா கிரிஸ்டா காரில் கிடைக்கும் நல்ல இடவசதி, சக்தி வாய்ந்த இன்ஜின்கள் மற்றும் சிறப்பான வசதிகள் கலவையே அதன் வெற்றிக்கு முக்கியமான காரணம். ஆனால் டொயோட்டா இன்னோவா கிரிஸ்டாவிற்கு போட்டி அதிகரித்து கொண்டே வருகிறது.

டொயோட்டா இன்னோவா கிரிஸ்டாவிற்கு ஆபத்து... மலையை சரிக்க களமிறங்கும் புதிய கார்கள் இவைதான்...

டொயோட்டா இன்னோவா கிரிஸ்டா எம்பிவி காருக்கு போட்டியாக சில புதிய கார்கள் இந்திய மார்க்கெட்டில் விரைவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ளன. வாடிக்கையாளர்கள் மத்தியில் ஆவலை தூண்டியுள்ள அந்த கார்கள் குறித்து இனி பார்க்கலாம்.

டொயோட்டா இன்னோவா கிரிஸ்டாவிற்கு ஆபத்து... மலையை சரிக்க களமிறங்கும் புதிய கார்கள் இவைதான்...

1. எம்ஜி ஹெக்டர் 7 சீட்டர் (MG Hector 7-Seater)

இங்கிலாந்தை சேர்ந்த எம்ஜி நிறுவனம் இந்திய மார்க்கெட்டில் தனது முதல் மாடலான ஹெக்டர் காரை மிக விரைவில் களமிறக்கவுள்ளது. சீனாவில் விற்பனையாகும் பயோஜன் 530 எஸ்யூவி காரின் அடிப்படையில், இது உருவாக்கப்பட்டுள்ளது.

டொயோட்டா இன்னோவா கிரிஸ்டாவிற்கு ஆபத்து... மலையை சரிக்க களமிறங்கும் புதிய கார்கள் இவைதான்...

இதில், பல்வேறு அதிநவீன வசதிகள் வழங்கப்படவுள்ளன. அத்துடன் பெட்ரோல், டீசல் என இரண்டு இன்ஜின் ஆப்ஷன்களும், மேனுவல் மற்றும் ஆட்டோமெட்டிக் என இரண்டு டிரான்ஸ்மிஷன் ஆப்ஷன்களும் எம்ஜி ஹெக்டர் காரில் வழங்கப்படவுள்ளன.

டொயோட்டா இன்னோவா கிரிஸ்டாவிற்கு ஆபத்து... மலையை சரிக்க களமிறங்கும் புதிய கார்கள் இவைதான்...

எம்ஜி ஹெக்டர் காரின் 5 சீட்டர் வெர்ஷன் வரும் ஜூன் மாதம் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே சமயம் ஹெக்டர் காரின் 7 சீட்டர் வெர்ஷன் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் அறிமுகம் செய்யப்படவுள்ளது.

டொயோட்டா இன்னோவா கிரிஸ்டாவிற்கு ஆபத்து... மலையை சரிக்க களமிறங்கும் புதிய கார்கள் இவைதான்...

டொயோட்டா இன்னோவா கிரிஸ்டாவை காட்டிலும் மிகவும் மலிவான விலையில் எம்ஜி ஹெக்டர் 7 சீட்டர் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. எனவே இது கொடுக்கும் பணத்திற்கு மதிப்பு வாய்ந்த மாடலாக இருக்கும்.

டொயோட்டா இன்னோவா கிரிஸ்டாவிற்கு ஆபத்து... மலையை சரிக்க களமிறங்கும் புதிய கார்கள் இவைதான்...

எனவே டொயோட்டா இன்னோவா கிரிஸ்டா எம்பிவி காரை வாங்க வேண்டும் என்ற முடிவில் உள்ள ஒரு சில வாடிக்கையாளர்களாவது அதற்கு பதிலாக எம்ஜி ஹெக்டர் 7 சீட்டர் எஸ்யூவி மாடலுக்கு மாறலாம் என கூறப்படுகிறது.

டொயோட்டா இன்னோவா கிரிஸ்டாவிற்கு ஆபத்து... மலையை சரிக்க களமிறங்கும் புதிய கார்கள் இவைதான்...

2. மஹிந்திரா மராஸ்ஸோ டபிள்யூ10 (Mahindra Marazzo W10)

மஹிந்திரா நிறுவனம் வரும் மாதங்களில் மராஸ்ஸோ காரின் புதிய வேரியண்ட்டை இந்தியாவில் அறிமுகம் செய்யவுள்ளது. இது மஹிந்திரா மராஸ்ஸோ டபிள்யூ10 என அழைக்கப்படும். இந்த புதிய மாடல் கூடுதலாக சில வசதிகளை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

டொயோட்டா இன்னோவா கிரிஸ்டாவிற்கு ஆபத்து... மலையை சரிக்க களமிறங்கும் புதிய கார்கள் இவைதான்...

அதாவது புஷ்-ஸ்டார்ட் பட்டன், சன் ரூஃப், எல்இடி ப்ரொஜெக்டர் ஹெட்லேம்ப்ஸ் ஆகிய கூடுதல் வசதிகள் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போதைய நிலையில் டபிள்யூ8 ட்ரிம்மில் 17 இன்ச் அலாய் வீல்கள்தான் வழங்கப்படுகிறது.

டொயோட்டா இன்னோவா கிரிஸ்டாவிற்கு ஆபத்து... மலையை சரிக்க களமிறங்கும் புதிய கார்கள் இவைதான்...

அதற்கு பதிலாக மஹிந்திரா மராஸ்ஸோ டபிள்யூ10 காரில் 18 இன்ச் அலாய் வீல்கள் வழங்கப்படலாம் என கூறப்படுகிறது. இந்த புதிய மாடலின் விலை, மிட்-ஸ்பெக் டொயோட்டா இன்னோவா கிரிஸ்டா காருக்கு நெருக்கமாக நிர்ணயம் செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.

டொயோட்டா இன்னோவா கிரிஸ்டாவிற்கு ஆபத்து... மலையை சரிக்க களமிறங்கும் புதிய கார்கள் இவைதான்...

3. டாடா பஸ்ஸார்டு (7 சீட்டர் ஹாரியர்) Tata Buzzard (7-Seater Harrier)

2019 ஜெனீவா மோட்டார் ஷோ சமீபத்தில் நடைபெற்றது. இதில், பஸ்ஸார்டு காரினை டாடா நிறுவனம் வெளியிட்டது. இது டாடா ஹாரியர் காரின் 7 சீட்டர் வெர்ஷன் ஆகும். பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள டாடா பஸ்ஸார்டு நடப்பு ஆண்டு இறுதியில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படலாம் என தெரிகிறது.

டொயோட்டா இன்னோவா கிரிஸ்டாவிற்கு ஆபத்து... மலையை சரிக்க களமிறங்கும் புதிய கார்கள் இவைதான்...

இது டொயோட்டா இன்னோவா கிரிஸ்டா காருக்கு நல்ல மாற்றாக இருக்கும். ஹாரியரை போல் பஸ்ஸார்ட் காரும் ஒமேகா பிளாட்பார்ம் அடிப்படையில்தான் உருவாக்கப்படுகிறது. இதன் விலை டொயோட்டா இன்னோவா கிரிஸ்டாவிற்கு நெருக்கமாக நிர்ணயம் செய்யப்படலாம்.

டொயோட்டா இன்னோவா கிரிஸ்டாவிற்கு ஆபத்து... மலையை சரிக்க களமிறங்கும் புதிய கார்கள் இவைதான்...

4. கியா கார்னிவல் (Kia Carnival)

மேற்கண்ட மாடல்களை காட்டிலும் கியா கார்னிவல் எம்பிவி கார் டொயோட்டா இன்னோவா கிரிஸ்டாவிற்கு சரி நிகரான போட்டியாளராக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கியா கார்னிவல் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படுவது கடந்த சில மாதங்களுக்கு முன்தான் உறுதியானது.

டொயோட்டா இன்னோவா கிரிஸ்டாவிற்கு ஆபத்து... மலையை சரிக்க களமிறங்கும் புதிய கார்கள் இவைதான்...

ஆரம்பத்தில் கியா கார்னிவல் காரின் இந்திய வருகை சந்தேகத்தில் இருந்து வந்தது குறிப்பிடத்தக்கது. அனைத்து அம்சங்களிலும் டொயோட்டா இன்னோவா கிரிஸ்டாவை விட கியா கார்னிவல் தலை சிறந்து விளங்குவதற்கான வாய்ப்புகள் உள்ளன. ஆனால் விலை மட்டும் டொயோட்ட இன்னோவா கிரிஸ்டாவை காட்டிலும், 2-3 லட்சங்கள் அதிகமாக இருக்கலாம்.

Most Read Articles
English summary
Upcoming Toyota Innova Crysta Rivals - Kia Carnival, Hector 7-Seater, Marazzo W10, Tata Buzzard. Read in Tamil
Story first published: Thursday, May 23, 2019, 16:38 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X