Just In
- 54 min ago
பாரம்பரியமான தோற்றத்தை இழக்கும் பழமையான ஜாவா பைக்குகள்!! மாடர்ன் பைக்குகளை சமாளித்தாக வேண்டுமே...
- 1 hr ago
டாடா அல்ட்ராஸ் ஐ-டர்போ மாடலின் வேரியண்ட் வாரியாக வசதிகள்!
- 1 hr ago
முதல் முறையாக ரஃபேல் போர் விமானங்களை பயன்படுத்த திட்டம்... எப்போது தெரியுமா? தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க!!
- 2 hrs ago
இந்த குடியரசு தினத்தில் புதிய ஸ்கூட்டர் வாங்கும் பிளான் இருக்கா? இதோ உங்களுக்கான டாப் 5 பட்ஜெட் ஸ்கூட்டர்கள்!!
Don't Miss!
- Movies
ஜாமீன் கிடைச்சு 2 நாளாச்சு.. 140 நாளுக்குப் பிறகு சிறையில் இருந்து வர காத்திருக்கும் ராகிணி திவேதி!
- Lifestyle
உங்க இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருக்க இந்த கசப்பு உணவுகளை சாப்பிட்டாலே போதுமாம்..!
- Finance
வாராக் கடன்களை வசூலிக்க தனி வங்கி.. மோடி அரசின் புதிய திட்டம்..!
- News
எல்லாம் கூடி.. வெண்ணை திரண்டு வரும்போது.. இப்படி பானையை போட்டு உடைக்கிறாரே பாரதி!
- Education
8-வது தேர்ச்சியா? ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் சென்னையிலேயே அரசாங்க வேலை!
- Sports
ரவி சாஸ்திரி கிடக்காரு.. உங்க இஷ்டம் போல ஆடுங்க.. சிட்னி டெஸ்டில் தெறிக்கவிட்ட இளம் வீரர்!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
கடும் அதிர்ச்சி... முறைகேட்டில் ஈடுபட்ட ஹூண்டாய் நிறுவனம் வசமாக சிக்கியது... என்னவென்று தெரியுமா?
முறைகேட்டில் ஈடுபட்ட ஹூண்டாய் நிறுவனத்திற்கு கடுமையான தண்டனை கிடைத்துள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

பெட்ரோல், டீசல் வாகனங்கள் சுற்றுச்சூழலை மிக கடுமையாக மாசுபடுத்தி வருகின்றன. எனவே பல்வேறு நாடுகளின் அரசுகளும் பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கு எதிராக தீவிரமான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. இதன் ஒரு பகுதியாக சுற்றுச்சூழலை மாசுபடுத்தாத எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது.

இதுதவிர பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கு கடுமையான உமிழ்வு தரநிலைகளும் (Emission Standards) கட்டாயமாக்கப்பட்டுள்ளன. ஆனால் லாபம் ஈட்டும் நோக்கத்தில், பல்வேறு நிறுவனங்கள் இதனை மீறி முறைகேடுகளில் ஈடுபட்டு வருகின்றன. இதற்கு உலகம் முழுவதும் பிரபலமாக உள்ள முன்னணி நிறுவனங்களும் கூட விதிவிலக்கு அல்ல.

இந்த சூழலில், உமிழ்வு தரநிலைகளை மீறியது தொடர்பான புகாரில், உலகின் முன்னணி வாகன உற்பத்தி நிறுவனமான ஹூண்டாய், கடந்த சில ஆண்டுகளுக்கு முன் சிக்கியது. இதற்காக தற்போது ஹூண்டாய் நிறுவனத்திற்கு மிக கடுமையான அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இதன் பின்னணி குறித்த விரிவான தகவல்களை இனி பார்க்கலாம்.

தென் கொரியாவை சேர்ந்த ஹூண்டாய் (Hyundai) நிறுவனம் அமெரிக்கா உள்பட உலகின் ஏராளமான நாடுகளில் வாகன விற்பனையில் ஈடுபட்டு வருகிறது. இந்த சூழலில், 2012-2015ம் ஆண்டுகளுக்கு இடையே ஹூண்டாய் நிறுவனம் அமெரிக்காவில், சுமார் 2,300 கனரக கட்டுமான வாகனங்களை (Heavy Construction Vehicles) இறக்குமதி செய்தது.

டீசல் இன்ஜின்களுடன் அவை அமெரிக்காவிற்கு இறக்குமதி செய்யப்பட்டன. ஆனால் அமெரிக்க உமிழ்வு விதிமுறைகளுக்கு இணங்கும் வகையில் அவை இல்லை என புகார் எழுந்தது. இது தொடர்பாக அமெரிக்க சுற்றுச்சூழல் பாதுகாப்பு நிறுவனத்தில் கடந்த 2015ம் ஆண்டு புகார் சமர்ப்பிக்கப்பட்டது. இதன்பின் அந்த நிறுவனம் ஹூண்டாய் மீது அடுத்த கட்ட நடவடிக்கைகளை எடுத்தது.

இது தொடர்பான வழக்கு நடைபெற்று வந்த நிலையில், தற்போது ஹூண்டாய் நிறுவனத்திற்கு அதிரடியாக கடுமையான அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இதன்படி அசுத்தமான டீசல் இன்ஜின்களுடன் சட்ட விரோத வர்த்தகத்தில் ஈடுபட்டதற்காக ஹூண்டாய் நிறுவனத்திற்கு அமெரிக்கா 47 மில்லியன் டாலர்களை அபராதமாக விதித்துள்ளது.

அமெரிக்காவின் சுற்றுச்சூழல் விதிகளை மீறி, அசுத்தமான டீசல் இன்ஜின்களை சட்டவிரோதமாக இறக்குமதி மற்றும் விற்பனை செய்ததற்காக, ஹூண்டாய் நிறுவனம் 47 மில்லியன் அமெரிக்க டாலர்களை அபராதமாக செலுத்த வேண்டும் என அமெரிக்க அதிகாரிகள் நேற்று முன் தினம் (செப்டம்பர் 19) அதிரடியாக அறிவித்துள்ளனர்.

மக்களின் சுகாதாரத்திற்கு பாதிப்பை ஏற்படுத்துவதுடன், சட்டத்தின் தேவைகளை பூர்த்தி செய்ய தவறும் இதுபோன்ற நடவடிக்கைகளை நாங்கள் பொறுத்து கொள்ள மாட்டோம் எனவும் அமெரிக்க அதிகாரிகள் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.

அமெரிக்கா மட்டுமல்லா உலகின் பல்வேறு நாடுகளும் மாசு உமிழ்வு விதிமுறைகளை மிகவும் கடுமையாக்கி வருகின்றன. இதில், இந்தியாவும் ஒன்று. ஏனெனில் இந்தியாவின் பல்வேறு முன்னணி நகரங்கள் தற்போது காற்று மாசுபாடு பிரச்னையில் சிக்கி தவித்து கொண்டுள்ளன. தலைநகர் டெல்லியின் காற்று மாசுபாடு பிரச்னை அனைவரும் அறிந்த ஒன்றுதான்.

இந்தியாவின் காற்று மாசுபாடு பிரச்னைக்கு வாகனங்கள் வெளியிடும் புகை மிக முக்கியமான காரணமாக உள்ளது. எனவே பிஎஸ்-6 மாசு உமிழ்வு விதிமுறைகளை மத்திய அரசு அமலுக்கு கொண்டு வரவுள்ளது. மிக கடுமையான பிஎஸ்-6 மாசு உமிழ்வு விதிமுறைகள் வரும் 2020ம் ஆண்டு ஏப்ரல் 1ம் தேதி முதல் அமலுக்கு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
Note: Images used are for representational purpose only.