என்ன ஒரு புத்திசாலித்தனம்... புதிய காரை வாங்கிய உடனேயே விற்பனை செய்யும் உரிமையாளர்கள்! ஏன் தெரியுமா?

புதிய எம்ஜி ஹெக்டர் காரை வாங்கிய உடனேயே அதன் உரிமையாளர்கள் சிலர் விற்பனை செய்து வருகின்றனர். இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

என்ன ஒரு புத்திசாலித்தனம்... புதிய காரை வாங்கிய உடனேயே விற்பனை செய்யும் உரிமையாளர்கள்! ஏன் தெரியுமா?

இந்தியாவின் முதல் இன்டர்நெட் கார் என்ற பெருமையுடன், எம்ஜி ஹெக்டர் (MG Hector) கடந்த ஜூன் 27ம் தேதி விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. இது எஸ்யூவி ரக கார் ஆகும். இங்கிலாந்தை சேர்ந்த எம்ஜி நிறுவனம் இந்திய மார்க்கெட்டில் விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ள முதல் கார் இதுதான். இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் எம்ஜி ஹெக்டர் காருக்கு அமோக வரவேற்பு கிடைத்துள்ளது.

என்ன ஒரு புத்திசாலித்தனம்... புதிய காரை வாங்கிய உடனேயே விற்பனை செய்யும் உரிமையாளர்கள்! ஏன் தெரியுமா?

மிகவும் சவாலான விலை நிர்ணயம் மற்றும் பல்வேறு அதிநவீன வசதிகள் ஆகியவையே இதற்கு காரணம். எனவே எம்ஜி ஹெக்டர் காருக்கு முன்பதிவு குவிந்தது. உண்மையை சொல்வதென்றால், எம்ஜி நிறுவனமே எதிர்பார்க்காத அளவிற்கு ஹெக்டர் காருக்கு முன்பதிவுகள் குவிந்தன. இதனால் எம்ஜி நிறுவனம் மகிழ்ச்சியில் திக்குமுக்காடி போனது.

என்ன ஒரு புத்திசாலித்தனம்... புதிய காரை வாங்கிய உடனேயே விற்பனை செய்யும் உரிமையாளர்கள்! ஏன் தெரியுமா?

ஆனால் மறுபக்கம் எம்ஜி ஹெக்டர் காருக்கான காத்திருப்பு காலம் அதிகரித்து கொண்டே சென்றது. புக்கிங் வந்த அளவிற்கு எம்ஜி நிறுவனத்தால் ஹெக்டர் கார்களை உற்பத்தி செய்ய முடியவில்லை. எனவே ஹெக்டர் காருக்கான முன்பதிவை எம்ஜி நிறுவனம் தற்காலிகமாக நிறுத்தி விட்டது. ஆனால் டெலிவரி முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.

என்ன ஒரு புத்திசாலித்தனம்... புதிய காரை வாங்கிய உடனேயே விற்பனை செய்யும் உரிமையாளர்கள்! ஏன் தெரியுமா?

தற்போதைய நிலையில், ஏற்கனவே முன்பதிவு செய்துள்ள வாடிக்கையாளர்களுக்கு ஹெக்டர் கார்களை டெலிவரி செய்யும் பணிகளில் எம்ஜி நிறுவனம் முனைப்பு காட்டி வருகிறது. இருந்தபோதும் கூட எம்ஜி நிறுவனத்தால் அவ்வளவு வேகமாக கார்களை டெலிவரி செய்ய முடியவில்லை. எம்ஜி ஹெக்டர் காரின் காத்திருப்பு காலம் பல மாதங்கள் வரை நீண்டுள்ளது.

என்ன ஒரு புத்திசாலித்தனம்... புதிய காரை வாங்கிய உடனேயே விற்பனை செய்யும் உரிமையாளர்கள்! ஏன் தெரியுமா?

இந்த சூழலில் எம்ஜி ஹெக்டர் காருக்கு இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் கிடைத்துள்ள வரவேற்பை ஒரு சிலர் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி கொள்ள தொடங்கியுள்ளனர். எம்ஜி ஹெக்டர் காரை வாங்க வேண்டும் என நீங்கள் விரும்பினால், ஏற்கனவே முன்பதிவு செய்திருக்க வேண்டும். அப்படி முன்பதிவு செய்திருந்தாலும் கூட உங்களுக்கு கார் டெலிவரி கிடைக்க பல மாதங்கள் ஆகும்.

என்ன ஒரு புத்திசாலித்தனம்... புதிய காரை வாங்கிய உடனேயே விற்பனை செய்யும் உரிமையாளர்கள்! ஏன் தெரியுமா?

அதே சமயம் நீங்கள் புக்கிங் செய்யாதவர் என்றால், மீண்டும் முன்பதிவு தொடங்கப்படும் வரை காத்திருக்க வேண்டும். எம்ஜி ஹெக்டர் காருக்கான புக்கிங் தற்போது வரை ரீ-ஓபன் செய்யப்படவில்லை. அனேகமாக வரும் அக்டோபர் மாதத்தில்தான் எம்ஜி ஹெக்டர் காருக்கான புக்கிங் மீண்டும் தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

MOST READ: தொடர் மந்தநிலை: அதிரடி முடிவெடுத்த சுஸுகி... இதற்குதான் ஆசைபட்டீங்களா மோடி ஜி!

என்ன ஒரு புத்திசாலித்தனம்... புதிய காரை வாங்கிய உடனேயே விற்பனை செய்யும் உரிமையாளர்கள்! ஏன் தெரியுமா?

அவ்வாறு அக்டோபர் மாதத்தில் புக்கிங் செய்தாலும் கூட, உங்களுக்கு கார் டெலிவரி கிடைக்க மேலும் பல மாதங்கள் ஆகும். இருந்தபோதும் இந்த நீண்ட காத்திருப்பு காலத்தை பொருட்படுத்தாது எம்ஜி ஹெக்டர் காரை வாங்கியே தீருவது என்ற உறுதியுடன் ஏராளமான வாடிக்கையாளர்கள் ஆவலுடன் காத்து கொண்டுள்ளனர்.

MOST READ: 5 கிலோ மீட்டர் மட்டுமே மைலேஜ் கொடுத்த புதிய கார்... அதிர்ச்சியில் உரிமையாளர் என்ன செய்தார் தெரியுமா?

என்ன ஒரு புத்திசாலித்தனம்... புதிய காரை வாங்கிய உடனேயே விற்பனை செய்யும் உரிமையாளர்கள்! ஏன் தெரியுமா?

அவர்களை குறி வைத்து தற்போது ஒரு பிஸ்னஸ் களைகட்ட தொடங்கியுள்ளது. மேலே குறிப்பிட்டதை போல், ஏற்கனவே முன்பதிவு செய்துள்ள வாடிக்கையாளர்களுக்கு எம்ஜி நிறுவனம் தற்போது ஹெக்டர் கார்களை வேகமாக டெலிவரி செய்து வருகிறது. அவ்வாறு ஹெக்டர் காரை டெலிவரி பெற்ற சிலர், அதை உடனே செகண்ட் ஹேண்ட் மார்க்கெட்டில் விற்பனைக்கு கொண்டு வந்து விடுகின்றனர்.

MOST READ: மோடி அரசுக்கு எதிராக எடப்பாடியார்... அபராத விஷயத்தில் தமிழகம் அதிரடி முடிவு... என்னவென்று தெரியுமா?

என்ன ஒரு புத்திசாலித்தனம்... புதிய காரை வாங்கிய உடனேயே விற்பனை செய்யும் உரிமையாளர்கள்! ஏன் தெரியுமா?

ஆனால் தாங்கள் வாங்கியதை காட்டிலும் ஒரு சில லட்சங்கள் கூடுதல் விலை கேட்கின்றனர். இதன்படி கடந்த சில வாரங்களுக்கு முன்பு, கேரளாவை சேர்ந்த வாடிக்கையாளர் ஒருவர் புத்தம் புதிய எம்ஜி ஹெக்டர் காரை யூஸ்டு கார் மார்க்கெட்டிற்கு கொண்டு வந்தார். 20 லட்ச ரூபாய் ஆன் ரோடு விலை கொண்ட அந்த காருக்கு அவர் 23 லட்ச ரூபாய் விலை கோரினார். இதில், அவருக்கு ரூ.3 லட்சம் லாபம்.

என்ன ஒரு புத்திசாலித்தனம்... புதிய காரை வாங்கிய உடனேயே விற்பனை செய்யும் உரிமையாளர்கள்! ஏன் தெரியுமா?

இதே பாணியில் தற்போது மேலும் ஒரு எம்ஜி ஹெக்டர் கார் செகண்ட் ஹேண்ட் மார்க்கெட்டில் விற்பனைக்கு வந்துள்ளது. பஞ்சாப் மாநிலம் லூதியானாவை சேர்ந்த எம்ஜி ஹெக்டர் உரிமையாளர் ஒருவர், தனது புதிய காரை யூஸ்டு கார் மார்க்கெட்டிற்கு கொண்டு வந்துள்ளார். இது தொடர்பாக ட்ரூம் தளத்தில் விளம்பரம் செய்யப்பட்டுள்ளது.

என்ன ஒரு புத்திசாலித்தனம்... புதிய காரை வாங்கிய உடனேயே விற்பனை செய்யும் உரிமையாளர்கள்! ஏன் தெரியுமா?

தற்போது யூஸ்டு கார் மார்க்கெட்டில் விற்பனைக்கு வந்திருப்பது எம்ஜி ஹெக்டர் காரின் சூப்பர் வேரியண்ட் ஆகும். இதில், 2.0 லிட்டர் டீசல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது மேனுவல் வெர்ஷன் கார். லூதியானா நகரில் இந்த காரின் எக்ஸ் ஷோரூம் விலை 14.18 லட்ச ரூபாய். ஆன் ரோடு என எடுத்து கொண்டால், தோராயமாக 16.50 லட்ச ரூபாய் வரும்.

என்ன ஒரு புத்திசாலித்தனம்... புதிய காரை வாங்கிய உடனேயே விற்பனை செய்யும் உரிமையாளர்கள்! ஏன் தெரியுமா?

ஆனால் இதன் உரிமையாளர் 21 லட்ச ரூபாய் கேட்கிறார். அதாவது சுமார் 5 லட்ச ரூபாயை அவர் அதிகமாக கேட்கிறார். இது கிட்டத்தட்ட புதிய கார்தான். வெறும் 1,300 கிலோ மீட்டர்கள் மட்டுமே ஓடியுள்ளது. அரோரா சில்வர் நிறத்தை பெற்றுள்ள இந்த காரின் பாடியில், டெண்ட், ஸ்கிராட்ச் எதுவுமே இல்லை. காரை ஏன் விற்பனை செய்கிறேன்? என்பதற்கான காரணத்தை உரிமையாளர் குறிப்பிடவில்லை.

என்ன ஒரு புத்திசாலித்தனம்... புதிய காரை வாங்கிய உடனேயே விற்பனை செய்யும் உரிமையாளர்கள்! ஏன் தெரியுமா?

ஆனால் லாபம் ஈட்டும் நோக்கில்தான் அவர் காரை விற்பனை கொண்டு வந்திருப்பது போல் தெரிகிறது. அதே சமயம் தற்போதைய உரிமையாளர் ஏதாவது கூடுதல் ஆக்ஸஸரிகள் அல்லது வசதிகளை சேர்த்துள்ளாரா? என்பது தெளிவாக தெரியவில்லை. எம்ஜி ஹெக்டர் காரின் சூப்பர் வேரியண்ட்டில் ஏராளமான வசதிகள் இடம்பெற்றுள்ளன.

என்ன ஒரு புத்திசாலித்தனம்... புதிய காரை வாங்கிய உடனேயே விற்பனை செய்யும் உரிமையாளர்கள்! ஏன் தெரியுமா?

இதில், ட்யூயல்-ஃப்ரண்ட் ஏர்பேக்குகள், இஎஸ்பி மற்றும் டிராக்ஸன் கண்ட்ரோல் சிஸ்டம், ஹில் ஹோல்டு, இபிடி உடனான ஏபிஎஸ், 4 சக்கரங்களுக்கும் டிஸ்க் பிரேக், ரியர் பார்க்கிங் சென்சார்கள், ரியர் பார்க்கிங் கேமரா, ஃப்ரண்ட் பார்க்கிங் சென்சார்கள், எல்இடி டெயில் லேம்ப்ஸ் மற்றும் சில்வர் அலாய் வீல்கள் ஆகியவை குறிப்பிடத்தகுந்தவை.

என்ன ஒரு புத்திசாலித்தனம்... புதிய காரை வாங்கிய உடனேயே விற்பனை செய்யும் உரிமையாளர்கள்! ஏன் தெரியுமா?

அத்துடன் ஆண்ட்ராய்டு ஆட்டோ, ஆப்பிள் கார் பிளே வசதிகளுடன் கூடிய 10.4 இன்ச் இன்போடெயின்மெண்ட் சிஸ்டமும் இதில் இடம்பெற்றுள்ளது. நீங்கள் இந்த காரை வாங்குவதாக இருந்தால், உங்களுக்கு காத்திருப்பு காலம் கிடையாது. என்றாலும் இது செகண்ட் ஹேண்ட் கார்தான். எதிர்காலத்தில் காரின் மதிப்பை இது குறைத்து விடும்.

Most Read Articles

English summary
Used MG Hector SUV For Sale. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X