புதிய டர்போ எஞ்சினுடன் ஃபோக்ஸ்வேகன் வென்ட்டோ கார் சோதனை!

புதிய டர்போ எஞ்சினுடன் ஃபோக்ஸ்வேகன் வென்ட்டோ கார் சோதனை ஓட்டம் நடத்தப்பட்டு வருகிறது. அந்த எஞ்சின் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

புதிய டர்போ எஞ்சினுடன் ஃபோக்ஸ்வேகன் வென்ட்டோ கார் சோதனை!

அடுத்த ஆண்டு ஏப்ரல் 1 முதல் புதிய பிஎஸ்-6 மாசு உமிழ்வு விதிகள் அமலுக்கு வர இருக்கின்றன. இதற்கு தக்கவாறு எஞ்சின்களை மேம்படுத்துவதிலும் அல்லது புதிய எஞ்சின்களை பயன்படுத்துவது குறித்தும் கார் நிறுவனங்கள் தீவிரமான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளன.

புதிய டர்போ எஞ்சினுடன் ஃபோக்ஸ்வேகன் வென்ட்டோ கார் சோதனை!

அந்த வகையில், ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் புதிய 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சினை தனது கார்களில் பயன்படுத்துவதற்கு திட்டமிட்டுள்ளது. தற்போது ஃபோக்ஸ்வேகன் வென்ட்டோ, ஸ்கோடா ரேபிட் உள்ளிட்ட கார்களில் பயன்படுத்தப்படும் 1.6 லிட்டர் பெட்ரோல் எஞ்சினுக்கு மாற்றாக இந்த புதிய டர்போ எஞ்சின் பயன்படுத்தப்பட இருக்கிறது.

புதிய டர்போ எஞ்சினுடன் ஃபோக்ஸ்வேகன் வென்ட்டோ கார் சோதனை!

அதேபோன்று, ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்தின் பிற கார் மாடல்களான போலோ, வென்ட்டோ கார்களில் பயன்படுத்தப்படும் 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சினுக்கு மாற்றாகவும் இந்த புதிய டர்போ எஞ்சின் பயன்படுத்தப்பட இருக்கிறது.

புதிய டர்போ எஞ்சினுடன் ஃபோக்ஸ்வேகன் வென்ட்டோ கார் சோதனை!

இந்த நிலையில், பிஎஸ்-6 மாசு உமிழ்வு விதிகளுக்கு ஒப்பான, புதிய 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்ட ஃபோக்ஸ்வேகன் வென்ட்டோ கார் தற்போது தீவிரமான சாலை சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு இருக்கிறது.

புதிய டர்போ எஞ்சினுடன் ஃபோக்ஸ்வேகன் வென்ட்டோ கார் சோதனை!

இந்தியாவின் பல்வேறு சீதோஷ்ண நிலைகளில் இந்த புதிய எஞ்சின் செயல்பாடு எவ்வாறு உள்ளது? ஏதேனும், மாற்றங்களை செய்து மேம்படுத்த வேண்டி இருக்குமா உள்ளிட்டவை குறித்து சாலை சோதனைகள் மூலமாக ஆய்வுகள் செய்யப்பட்டு வருகின்றன.

புதிய டர்போ எஞ்சினுடன் ஃபோக்ஸ்வேகன் வென்ட்டோ கார் சோதனை!

இந்த சோதனை ஓட்டங்கள் விரைவில் நிறைவுபெற இருப்பதாகவும் தகவல்கள் கூறுகின்றன. இதைத்தொடர்ந்து, புதிய 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் உற்பத்தியும் துவங்கப்பட இருப்பதாக ஆட்டோகார் இந்தியா தளம் செய்தி வெளியிட்டு இருக்கிறது.

புதிய டர்போ எஞ்சினுடன் ஃபோக்ஸ்வேகன் வென்ட்டோ கார் சோதனை!

மூன்று சிலிண்டர்கள் கொண்ட இந்த புதிய 1.0 லிட்டர் டர்போ டிஎஸ்ஐ பெட்ரோல் எஞ்சின் இரண்டுவிதமான திறனில் வர இருக்கிறது. போலோ உள்ளிட்ட கார்களில் பயன்படுத்தப்படும் இந்த எஞ்சின் அதிகபட்சமாக 94 பிஎச்பி பவரையும், வென்ட்டோ உள்ளிட்ட கார்களில் இருக்கும் எஞ்சின் 115 பிஎச்பி பவரையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக இருக்கும்.

புதிய டர்போ எஞ்சினுடன் ஃபோக்ஸ்வேகன் வென்ட்டோ கார் சோதனை!

ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்தின் புதிய பிஎஸ்-6 எஞ்சின்கள் EA211 என்ற குறியீட்டு பெயரில் வர இருக்கின்றன. இந்த எஞ்சின்கள் வார்ப்பு அலுமினிய கட்டமைப்பில் உருவாக்கப்படும். சிலிண்டர் ஹெட்டுகள் கழிவுப் புகை வெளியேற்று அமைப்புடன் இருக்கும்.

புதிய டர்போ எஞ்சினுடன் ஃபோக்ஸ்வேகன் வென்ட்டோ கார் சோதனை!

அலுமினியத்தாலான கனெக்டிங் ராடுகள் மற்றும் சிலிண்டர் ஹெட்டுகளும் இடம்பெற இருக்கின்றன. இதனால், வடிவத்தில் சிறியதாக இருப்பதோடு, குறைவான உராய்வு கொண்டதாக இந்த எஞ்சின்கள் வர இருக்கின்றன. இதனால், வளிமண்டல காற்றழுத்தத்தில் இயங்கும் சாதாரண எஞ்சின்களை விட சிறந்த செயல்திறனை டர்போ சார்ஜர் உதவியுடன் வெளிக்கொணரும்.

புதிய டர்போ எஞ்சினுடன் ஃபோக்ஸ்வேகன் வென்ட்டோ கார் சோதனை!

அடுத்த ஆண்டு பிஎஸ்-6 மாசு உமிழ்வு விதிகள் அமலுக்கு வந்தாலும், இந்த புதிய 1.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் அடுத்த சில மாதங்களில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் வாயப்பு இருப்பதாக கருதப்படுகிறது. இது நிச்சயம் வாடிக்கையாளர்களை திருப்திபடுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Most Read Articles
English summary
Volkswagen has started road testing its upcoming BS-VI ready petrol engine in India. The new BS-VI ready engine will come in the form of a new 1.0-litre three-cylinder unit. The new engine will be introduced in the Volkswagen India product lineup, closer to the emission regulations April 2020 deadline.
Story first published: Thursday, April 4, 2019, 11:03 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X