ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்தின் டிரைவர்லெஸ் எலெக்ட்ரிக் கார்!

ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்தின் டிரைவர்லெஸ் எலெக்ட்ரிக் கார் கான்செப்ட் ஷாங்காய் மோட்டார் ஷோவில் பார்வைக்கு கொண்டு வரப்பட்டது. இதன் சிறப்பம்சங்களை இந்த செய்தியில் காணலாம்.

ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்தின் டிரைவர்லெஸ் எலெக்ட்ரிக் கார்!

ஃபோக்ஸ்வேகன் ஐடி.ரூம்ஸ் என்ற பெயரிலான இந்த கான்செப்ட் மாடல் 2021ம் ஆண்டு தயாரிப்பு நிலை மாடலாக அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இது ஃபுல்சைஸ் எனப்படும் முழு அளவிலான பிரம்மாண்ட எஸ்யூவி மாடலாக வர இருக்கிறது.

ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்தின் டிரைவர்லெஸ் எலெக்ட்ரிக் கார்!

இந்த கார் 5 மீட்டர் நீளம் கொண்டதாக வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. இதில், 7 பேர் பயணிக்கும் வகையில் மிகச் சிறப்பான இருக்கை வசதி அமைப்புடன் வர இருக்கிறது. மேலும், இருக்கை அமைப்பை தேவைக்கு ஏற்ப மாற்றிக் கொள்ளும் வசதியை அளிக்கும்.

ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்தின் டிரைவர்லெஸ் எலெக்ட்ரிக் கார்!

பேட்டரியில் இயங்கும் இந்த எஸ்யூவி மாடலில் திறன் வாய்ந்த மின் மோட்டார் பொருத்தப்பட்டு இருக்கும். அதாவது, 7 பேர் செல்வதற்கான இந்த முழு எஸ்யூவி மாடலை திக்கி திணறாமல் செல்வதற்கு உகந்ததாக இருக்கும்.

ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்தின் டிரைவர்லெஸ் எலெக்ட்ரிக் கார்!

அடுத்து, இந்த காரில் லெவல்-4 தானியங்கி டிரைவிங் தொழில்நுட்ப வசதி கொடுக்கப்பட இருக்கிறது. இதனால், நெடுஞ்சாலை மட்டுமின்றி, நகர்ப்புறத்தில் போக்குவரத்து நெரிசலில் ஓட்டுவதற்கும் மிகச் சிறப்பான தொழில்நுட்ப அம்சங்களை பெற்றிருக்கும்.

ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்தின் டிரைவர்லெஸ் எலெக்ட்ரிக் கார்!

சொகுசு இருக்கைகளை 25 டிகிரி கோணம் வரை திருப்பிக் கொள்ள இயலும் என்பதுடன், காரில் பயணிப்பது என்பது சொகுசு அறையில் இருப்பது போன்ற உணர்வை தரும் வகையில் இந்த காரின் உட்புறத்தை மாற்றி அமைக்க முடியும்.

ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்தின் டிரைவர்லெஸ் எலெக்ட்ரிக் கார்!

இது தானியங்கி கார் மாடலாக இருப்பதால், ஸ்டீயரிங் வீல் உள்ளிட்ட பல பாகங்கள் மின்னணு தொழில்நுட்ப அம்சங்களுடன் வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. இதுதவிர, தொடு உணர் பொத்தான் மூலமாக கட்டுப்படுத்தும் வசதியை பெற்றிருக்கும்.

ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்தின் டிரைவர்லெஸ் எலெக்ட்ரிக் கார்!

இந்த காரில் 82kWh திறன் வாய்ந்த பேட்டரி கொடுக்கப்பட இருக்கிறது. இந்த பேட்டரி 450 முதல் 475 கிமீ தூரம் வரை பயணிக்கும் திறனை வழங்கும். இந்த பேட்டரியை அரை மணிநேரத்தில் 80 சதவீதம் வரை பேட்டரியை சார்ஜ் ஏற்றி விட முடியும்.

ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்தின் டிரைவர்லெஸ் எலெக்ட்ரிக் கார்!

இந்த காரின் மின் மோட்டார் அதிகபட்சமாக 306 பிஎச்பி பவரை அளிக்கும் திறன் கொண்டதாக இருக்கும். இந்த கார் 0 -100 கிமீ வேகத்தை 6.6 வினாடிகளில் எட்டிவிடும். மணிக்கு 180 கிமீ வேகம் வரை செல்லும்.

ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்தின் டிரைவர்லெஸ் எலெக்ட்ரிக் கார்!

முதலில் சீனாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இதைத்தொடர்ந்து, பிற நாடுகளிலும் விற்பனைக்கு கொண்டு வரப்படும். எதிர்காலத்தில் இந்தியாவிலும் விற்பனைக்கு வருவதற்கான வாய்ப்புகள் உள்ளன.

Most Read Articles
English summary
Volkswagen’s ID.Roomz upcoming electric SUV to rival Tesla Model X.
Story first published: Saturday, April 20, 2019, 12:28 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X