புதிய தலைமுறை ஃபோக்ஸ்வேகன் போலோ கார் இந்திய வருகை விபரம்!

புதிய தலைமுறை ஃபோக்ஸ்வேகன் போலோ கார் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட இருப்பது உறுதியாகி இருக்கிறது. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

புதிய தலைமுறை ஃபோக்ஸ்வேகன் போலோ கார் இந்திய வருகை விபரம்!

இந்தியாவின் ஹேட்ச்பேக் கார் மார்க்கெட்டில் மிகச் சிறந்த ஹேட்ச்பேக் கார் மாடல்களில் ஒன்றாக ஃபோக்ஸ்வேகன் போலோ கார் விளங்குகிறது. இந்த காருக்கு தனி வாடிக்கையாளர் வட்டம் உள்ளது. மேலும், ஃபோக்ஸ்வேகன் இந்தியா நிறுவனத்தின் அதிகம் விற்பனையாகும் கார் மாடலாகவும் வலம் வருகிறது.

புதிய தலைமுறை ஃபோக்ஸ்வேகன் போலோ கார் இந்திய வருகை விபரம்!

இந்த சூழலில், ஃபோக்ஸ்வேகன் போலோ காரின் ஆறாவது தலைமுறை மாடலானது வெளிநாடுகளில் அறிமுகம் செய்யப்பட்டு இரண்டு ஆண்டுகள் ஆகிவிட்டது. இந்த மாடல் இந்தியாவில் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இதுவரை அறிமுகம் செய்யப்படவில்லை.

புதிய தலைமுறை ஃபோக்ஸ்வேகன் போலோ கார் இந்திய வருகை விபரம்!

இதற்கு முக்கிய காரணம், ஃபோக்ஸ்வேகனின் எம்க்யூபி பிளாட்ஃபார்மில் உருவாக்கப்பட்ட அந்த ஆறாவது தலைமுறை போலோ கார் மாடலானது 4 மீட்டருக்கும் கூடுதலான நீளத்தை பெற்றிருப்பதுதான். இந்தியாவில் 4 மீட்டர் நீளத்திற்குள் இருந்தால்தான் வரிச்சலுகை பெற இயலும். அப்படியே கொண்டு வந்து அறிமுகம் செய்தால், விலை அதிகமாக நிர்ணயிக்க வேண்டி இருக்கும்.

புதிய தலைமுறை ஃபோக்ஸ்வேகன் போலோ கார் இந்திய வருகை விபரம்!

இந்த காரணத்தாலே, புதிய தலைமுறை ஃபோக்ஸ்வேகன் போலோ கார் இந்தியாவில் இரண்டு ஆண்டுகளாக தவிர்க்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், இந்தியாவில் மிக தீவிரமான வர்த்தக திட்டங்களை ஃபோக்ஸ்வேகன் குழுமம் வகுத்துள்ளது.

புதிய தலைமுறை ஃபோக்ஸ்வேகன் போலோ கார் இந்திய வருகை விபரம்!

இந்த திட்டத்தை ஸ்கோடா ஆட்டோ நிறுவனம் இந்தியாவில் ஏற்று செயல்படுத்த உள்ளது. அதன்படி, எம்க்யூபி பிளாட்ஃபார்மின் அடிப்படையில் இந்தியாவிற்கென பிரத்யேகமான எம்க்யூபி ஏ0 என்ற புதிய பிளாட்ஃபார்மை ஸ்கோடா ஆட்டோ உருவாக்க இருக்கிறது.

புதிய தலைமுறை ஃபோக்ஸ்வேகன் போலோ கார் இந்திய வருகை விபரம்!

இந்த கட்டமைப்பு கொள்கையின் கீழ் ஃபோக்ஸ்வேகன் போலோ காரை உருவாக்கி இந்தியாவில் களமிறக்க திட்டமிட்டுள்ளனர். இதுகுறித்து கார்அண்ட்பைக் தளத்திடம் பேசியுள்ள ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்தின் இயக்குனர் ஸ்டீபன் நாப் கூறுகையில்," இந்தியாவில் புதிய போலோ காரை 4 மீட்டருக்கும் குறைவான நீளத்தில் உருவாக்கி களமிறக்க திட்டமிட்டுள்ளோம்," என்று தெரிவித்துள்ளார்.

புதிய தலைமுறை ஃபோக்ஸ்வேகன் போலோ கார் இந்திய வருகை விபரம்!

அடுத்த ஆண்டு பிப்ரவரியில் நடைபெற இருக்கும் 2020 ஆட்டோ எக்ஸ்போவில் புதிய தலைமுறை ஃபோக்ஸ்வேகன் போலோ கார் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த கார் மிகச் சிறப்பான டிசைன் அம்சங்கள் மற்றும் தொழில்நுட்ப அம்சங்களை பெற்றிருக்கும். பிஎஸ்-6 மாசு உமிழ்வு தரமுடைய எஞ்சின் தேர்வுகளுடன் அறிமுகம் செய்யப்படும்.

புதிய தலைமுறை ஃபோக்ஸ்வேகன் போலோ கார் இந்திய வருகை விபரம்!

வெளிநாடுகளில் விற்பனையில் இருக்கும் புதிய தலைமுறை ஃபோக்ஸ்வேகன் போலோ கார் 4,053 மிமீ நீளம் கொண்டது. இந்த காரின் வீல் பேஸ் கோல்ஃப் காரைவிட 53 மிமீ அதிகம். இதனால், உட்புறத்தில் மிகச் சிறப்பான இடவசதியை அளிக்கிறது. பூட் ரூம் கொள்திறனும் 351 லிட்டர்களாக மேம்படுத்தப்பட்டு இருக்கிறது.

புதிய தலைமுறை ஃபோக்ஸ்வேகன் போலோ கார் இந்திய வருகை விபரம்!

ஆனால், விலையை மனதில் வைத்து புதிய தலைமுறை போலோ காரில் மாறுதல்கள் செய்து இந்தியாவில் அறிமுகம் செய்ய ஃபோக்ஸ்வேகன் திட்டமிட்டுள்ளது. வழக்கம்போல் புதிய தலைமுறை ஃபோக்ஸ்வேகன் போலோ காரும் சிறப்பான வரவேற்பை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Source: NDTV Auto

Most Read Articles
English summary
German car maker, Volkswagen is planning to launch New- Gen Polo car in India by next year.
Story first published: Saturday, August 17, 2019, 16:44 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X