புதுப்பொலிவுடன் ஃபோக்ஸ்வேகன் போலோ, வென்ட்டோ கார்கள் அறிமுகம்!

புதுப்பொலிவுடன் புதிய ஃபோக்ஸ்வேகன் போலோ மற்றும் வென்ட்டோ கார்கள் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இந்த மாடல்களில் நிகழ்ந்துள்ள மாற்றங்கள், புதிய அம்சங்கள், விலை உள்ளிட்ட தகவல்களை இந்த செய்தியில் காணலாம்.

புதுப்பொலிவுடன் ஃபோக்ஸ்வேகன் போலோ, வென்ட்டோ கார்கள் அறிமுகம்!

ஃபோக்ஸ்வேகன் போலோ மற்றும் வென்ட்டோ கார்கள் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக விற்பனையில் உள்ளன. அவ்வப்போது இந்த கார்கள் புதுப்பொலிவுடன் அறிமுகம் செய்யப்பட்டு வருகிறதே ஒழிய, புதிய தலைமுறை மாடல்கள் இன்னமும் அறிமுகம் செய்யப்படவில்லை.

புதுப்பொலிவுடன் ஃபோக்ஸ்வேகன் போலோ, வென்ட்டோ கார்கள் அறிமுகம்!

இந்த நிலையில், மேலும், புதுப்பொலிவுடன் கூடிய மாடலாக மீண்டும் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளன போலோ, வென்ட்டோ கார்கள். புதிய முன்புற, பின்புற பம்பர் அமைப்புகள், எல்இடி டெயில் லைட்டுகள், பின்புறத்தில் புதிய கருப்பு வண்ண அலங்கார உதிரிபாகங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. அத்துடன், புதிய அலாய் வீல்கள் பொருத்தப்பட்டுள்ளன.

புதுப்பொலிவுடன் ஃபோக்ஸ்வேகன் போலோ, வென்ட்டோ கார்கள் அறிமுகம்!

உட்புறத்தில் புதிய அப்ஹோல்ட்ஸ்ட்ரியுடன் புதுப்பொலிவு பெற்றிருக்கின்றன இந்த புதிய போலோ மற்றும் வென்ட்டோ கார்கள். மேலும், தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் மேம்படுத்தப்பட்டுள்ளது. இந்த சிஸ்டம் ஆன்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் ப்ளே செயலிகளை சப்போர்ட் செய்யும். ஃபோக்ஸ்வேகன் கனெக்ட் என்ற புதிய தொடர்பு வசதியும் கொடுக்கப்பட்டு இருக்கிறது.

புதுப்பொலிவுடன் ஃபோக்ஸ்வேகன் போலோ, வென்ட்டோ கார்கள் அறிமுகம்!

இந்த கார்களில் புதிய ஜிடி லைன் வேரியண்ட்டும் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இந்த வேரியண்ட்டில் கூடுதலாக விசேஷ கருப்பு வண்ணப்பூச்சுடன் கூடிய மேற்கூரை அமைப்பு, கருப்பு வண்ண அலங்கார பாகங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. சன்செட் ரெட் என்ற புதிய சிவப்பு வண்ணமும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

புதுப்பொலிவுடன் ஃபோக்ஸ்வேகன் போலோ, வென்ட்டோ கார்கள் அறிமுகம்!

மேம்படுத்தப்பட்ட புதிய போலோ காரில் மூன்று விதமான எஞ்சின் ஆப்ஷன்கள் வழங்கப்படுகின்றன. ஜிடி டிஎஸ்ஐ பெட்ரோல் மாடலில் 1.2 லிட்டர் டர்போசார்ஜ்டு பெட்ரோல் எஞ்சின் உள்ளது. இந்த எஞ்சின் 104 பிஎஸ் பவரையும், 175 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். தவிரவும், 1.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் தேர்வுகளிலும் வந்துள்ளது. 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் தேர்வு அல்லது 7 ஸ்பீடு டிஎஸ்ஜி கியர்பாக்ஸ் தேர்வுகளில் கிடைக்கும்.

புதுப்பொலிவுடன் ஃபோக்ஸ்வேகன் போலோ, வென்ட்டோ கார்கள் அறிமுகம்!

ஃபோக்ஸ்வேகன் வென்ட்டோ காரில் 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின்(டிஎஸ்ஐ வேரியண்ட்டில் கிடைக்கும்), 1.6 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் (மேனுவல் கியர்பாக்ஸ் தேர்வில் மட்டும்) மற்றும் 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் தேர்வுகளில் கிடைக்கும். புதிய வென்ட்டோ கார் 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் அல்லது டிஎஸ்ஜி கியர்பாக்ஸ் தேர்வுகளில் கிடைக்கும்.

புதுப்பொலிவுடன் ஃபோக்ஸ்வேகன் போலோ, வென்ட்டோ கார்கள் அறிமுகம்!

தற்போது இரண்டு கார்களிலும் வழங்கப்படும் அனைத்து பெட்ரோல், டீசல் எஞ்சின்களுமே பிஎஸ்-4 மாசு உமிழ்வு தரத்திற்கு இணையானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விரைவில் பிஎஸ்-6 எஞ்சின்கள் அறிமுகம் செய்யப்படும் என்று தெரிகிறது.

புதுப்பொலிவுடன் ஃபோக்ஸ்வேகன் போலோ, வென்ட்டோ கார்கள் அறிமுகம்!

புதிய ஃபோக்ஸ்வேகன் போலோ கார் ரூ.5.82 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையிலும், புதிய வென்ட்டோ கார் ரூ.8.76 லட்சம் எக்ஸ்ஷோரூம் ஆரம்ப விலையிலும் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. டீசல் எஞ்சின் மாடல்களுக்கு 5 ஆண்டுகள் அல்லது ஒரு லட்சம் கிலோமீட்டருக்கான ஸ்டான்டர்டு வாரண்டி திட்டம் வழங்கப்படுகிறது. 1.5 கிலோமீட்டர் அல்லது 6 ஆண்டுகளுக்கான வாரண்டி திட்டம் கூடுதல் கட்டணத்துடன் தேர்வு செய்துகொள்ளலாம் என ஃபோக்ஸ்வேகன் தெரிவித்துள்ளது.

Most Read Articles
English summary
Volkswagen India has launched facelift version of the Polo and Vento cars in India.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X