ஹூண்டாய் க்ரெட்டாவுக்கு போட்டியாக வரும் புதிய ஃபோக்ஸ்வேகன் டி க்ராஸ்!

ஹூண்டாய் க்ரெட்டா எஸ்யூவிக்கு நேரடி போட்டியாக வர இருக்கும் புதிய ஃபோக்ஸ்வேகன் டி க்ராஸ் எஸ்யூவியின் அறிமுக விபரம் குறித்த தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. அதன் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

ஹூண்டாய் க்ரெட்டாவுக்கு போட்டியாக வரும் புதிய ஃபோக்ஸ்வேகன் டி க்ராஸ்!

இந்தியாவில் புரொஜெக்ட் 2.0 என்ற புதிய வர்த்தக திட்டத்தை ஃபோக்ஸ்வேகன் குழுமம் செயல்படுத்த இருக்கிறது. அதன்படி, ஃபோக்ஸ்வேகன் மற்றும் ஸ்கோடா ஆட்டோ ஆகிய நிறுவனங்களை ஒரே நிறுவனமாக மாற்றப்படுவதுடன், இரு பிராண்டுகளிலும் பல புதிய எஸ்யூவி மாடல்களை அறிமுகம் செய்யவும் திட்டமிட்டுள்ளது.

ஹூண்டாய் க்ரெட்டாவுக்கு போட்டியாக வரும் புதிய ஃபோக்ஸ்வேகன் டி க்ராஸ்!

அந்த வகையில், மிகவும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள எஸ்யூவி மாடல் ஃபோக்ஸ்வேகன் டி க்ராஸ். ஹூண்டாய் க்ரெட்டா உள்ளிட்ட எஸ்யூவி மாடல்களை குறிவைத்து களமிறக்கப்பட இருப்பதால், இந்த புதிய ஃபோக்ஸ்வேகன் எஸ்யூவி மீது அதிக எதிர்பார்ப்பு நிலவுகிறது.

ஹூண்டாய் க்ரெட்டாவுக்கு போட்டியாக வரும் புதிய ஃபோக்ஸ்வேகன் டி க்ராஸ்!

இந்த நிலையில், புதிய ஃபோக்ஸ்வேகன் டி க்ராஸ் எஸ்யூவியானது வரும் பிப்ரவரியில் நடைபெற இருக்கும் சர்வதேச ஆட்டோ எக்ஸ்போவின்போது இந்தியாவில் பொது பார்வைக்கு அறிமுகம் செய்யப்படும் என்று தெரிய வந்துள்ளது.

ஹூண்டாய் க்ரெட்டாவுக்கு போட்டியாக வரும் புதிய ஃபோக்ஸ்வேகன் டி க்ராஸ்!

ஃபோக்ஸ்வேகன் குழுமத்தின் எம்க்யூபி பிளாட்ஃபார்மில் அடிப்படையில் இந்தியாவுக்காக மாற்றங்களுடன் கடைபிடிக்கப்பட இருக்கும் புதிய எம்க்யூபி ஏ0 ஐஎன் என்ற பிரத்யேக பிளாட்ஃபார்மில் குறிப்பிடத்தக்க மாற்றங்களுடன் இந்த புதிய எஸ்யூவி உருவாக்கப்பட இருக்கிறது.

ஹூண்டாய் க்ரெட்டாவுக்கு போட்டியாக வரும் புதிய ஃபோக்ஸ்வேகன் டி க்ராஸ்!

அதாவது, இந்தியர்களின் விருப்பத்திற்கு ஏற்ப அதிக க்ரோம் ஆக்சஸெரீகள் மற்றும் இந்திய சாலை நிலைகளுக்கு தாக்குப்பிடிக்கும் வகையில் சஸ்பென்ஷனில் மாற்றங்களுடன் இந்த கார் வர இருக்கிறது.

ஹூண்டாய் க்ரெட்டாவுக்கு போட்டியாக வரும் புதிய ஃபோக்ஸ்வேகன் டி க்ராஸ்!

புதிய ஃபோக்ஸ்வேகன் டி க்ராஸ் எஸ்யூவியானது 2,651 மிமீ வீல்பேஸ் கொண்டதாக வர இருக்கிறது. அதாவது, ஐரோப்பிய மாடலைவிட 90 முதல் 100 மிமீ கூடுதல் நீளத்துடன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இதனால், உட்புறத்தில் சற்றே மேம்பட்ட இடவசதியை பெறும் வாய்ப்புள்ளது. இந்த கார் 205 மிமீ கிரவுண்ட் கிளியரன்ஸ் பெற்றுள்ளது.

ஹூண்டாய் க்ரெட்டாவுக்கு போட்டியாக வரும் புதிய ஃபோக்ஸ்வேகன் டி க்ராஸ்!

புதிய ஃபோக்ஸ்வகன் டி க்ராஸ் எஸ்யூவியில் 115 எச்பி பவரை வெளிப்படுத்தும் 1.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் 130 எச்பி பவரை வெளிப்படுத்தும் 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் தேர்வுகளில் கிடைக்கும். டீசல் எஞ்சின் தேர்வு இடம்பெறாது என்ற தெரிகிறது. ஆனால், சிஎன்ஜி எரிவாயு ஆப்ஷனில் எதிர்பார்க்கப்படுகிறது.

ஹூண்டாய் க்ரெட்டாவுக்கு போட்டியாக வரும் புதிய ஃபோக்ஸ்வேகன் டி க்ராஸ்!

ஃபோக்ஸ்வேகன் டி க்ராஸ் எஸ்யூவியை போன்றே, இதே எஸ்யூவி ஸ்கோடா ஆட்டோ பிராண்டில் கமிக் என்ற பெயரில் இந்தியாவில் ரீபேட்ஜ் செய்து அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இதுவும் ஆட்டோ எக்ஸ்போவின்போதே இந்தியாவில் பார்வைக்கு கொண்டு வரப்பட உள்ளது.

ஹூண்டாய் க்ரெட்டாவுக்கு போட்டியாக வரும் புதிய ஃபோக்ஸ்வேகன் டி க்ராஸ்!

ஃபோக்ஸ்வேகன் டி க்ராஸ் எஸ்யூவி 2021ம் ஆண்டு இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. புதிய ஃபோக்ஸ்வேகன் டி க்ராஸ் மற்றும் ஸ்கோடா கமிக் எஸ்யூவி மாடல்களானது கியா செல்டோஸ், ஹூண்டாய் க்ரெட்டா, டாடா ஹாரியர், எம்ஜி ஹெக்டர், ரெனோ கேப்ச்சர், நிஸான் கிக்ஸ் உள்ளிட்ட எஸ்யூவி மாடல்களுக்கு போட்டியாக இருக்கும்.

Most Read Articles
English summary
Volkswagen has confirmed that they will showcase the India-spec T-Cross at the 2020 Auto Expo in Greater Noida.
Story first published: Wednesday, September 11, 2019, 12:44 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X