ஒத்தி வைக்கப்பட்ட ஃபோக்ஸ்வேகன் டி-ராக் மாடலின் இந்திய அறிமுகம்... காரணம் என்ன?

முன்னணி கார் தயாரிப்பு நிறுவனமான ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் அதன் புதிய தயாரிப்பு மாடலான டி-ராக் காரை இந்த வருட இறுதியில் இந்தியாவில் அறிமுகப்படுத்தவுள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை ஏற்கன்வே நமது தளத்தில் பதிவிட்டிருந்தோம்.

ஒத்தி வைக்கப்பட்ட ஃபோக்ஸ்வேகன் டி-ராக் மாடலின் இந்திய அறிமுகம்... காரணம் என்ன?

இந்நிலையில் தற்போது, டி-ராக் மாடலை 2020 பிப்ரவரியில் நடைபெறவுள்ள டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகப்படுத்த ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் திட்டமிட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கான வேலைகளிலும் இந்நிறுவனம் தற்சமயம் முழு முனைப்புடன் இறங்கியுள்ளதாகவும் அந்த தகவலில் கூறப்பட்டுள்ளன.

ஒத்தி வைக்கப்பட்ட ஃபோக்ஸ்வேகன் டி-ராக் மாடலின் இந்திய அறிமுகம்... காரணம் என்ன?

இந்த மாடல், ஃபோக்ஸ்வேகனின் மற்ற இந்திய அறிமுகங்களான டிகுவான் (தற்போதைக்கு உள்ள நீண்ட வீல்பேஸ் வெர்சன்) மற்றும் டி-கிராஸ் மாடல்களின் இடையிலான ரகத்தில் நிலைநிறுத்தப்படும். மேலும் இந்த டி-ராக் மாடல் முழுவதும் வெளிநாட்டில் தயாரிக்கப்படுவதால் இந்தியாவில் இந்த கார் லிமிட்டேட் எண்ணிக்கையிலேயே விற்பனையாகவுள்ளது.

ஒத்தி வைக்கப்பட்ட ஃபோக்ஸ்வேகன் டி-ராக் மாடலின் இந்திய அறிமுகம்... காரணம் என்ன?

ஏனெனில், அரசாங்கத்தின் திட்டத்திற்கு ஏற்ப இந்தியாவுக்காக எந்த மாற்றங்களும் செய்யாமல் அப்படியே டி-ராக் காரை விற்பனை செய்ய ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் முயற்சிக்கிறது.

இதனால் வெறும் 5,000 யூனிட்கள் மட்டுமே டி-ராக் மாடல் இந்தியாவில் இறக்குமதியாகும் என தெரிகிறது. இருப்பினும் இந்தியாவில் உள்ள ஸ்கோடா, போர்ஷே, ஆடி உள்ளிட்ட கூட்டணி நிறுவனங்களின் உதவியை கண்டிப்பாக ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் நாடும்.

ஒத்தி வைக்கப்பட்ட ஃபோக்ஸ்வேகன் டி-ராக் மாடலின் இந்திய அறிமுகம்... காரணம் என்ன?

டி-ராக் மாடலில் ஒரே ஒரு 1.5 லிட்டர் டர்போசார்ஜ்டு டிஎஸ்ஐ பெட்ரோல் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த என்ஜினுடன் ஏழு வேக நிலைகளை வழங்கக்கூடிய டிஎஸ்ஜி க்ளட்ச் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது. முன்னதாக ஒரு வருடத்திற்கு முன்பு வெளிவந்த இந்த காரின் தகவல்களில் டி-ராக் காரில் 3 சிறிய சிலிண்டர் அமைப்புகளை கொண்ட 1.0 டிஎஸ்ஐ பெட்ரோல் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளதாக கூறப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

ஒத்தி வைக்கப்பட்ட ஃபோக்ஸ்வேகன் டி-ராக் மாடலின் இந்திய அறிமுகம்... காரணம் என்ன?

டி-ராக் மாடல் சரியான வடிவம் மற்றும் தோற்றத்தில் சிறந்த தொழிற்நுட்பங்களால் வடிவமைக்கப்பட்டுள்ளதால் டீலர்ஷிப்கள் மத்தியில் மிக பெரிய அளவில் கவனத்தை பெறும் என்பது உறுதி. இதனால் ஃபோக்ஸ்வேகனின் அடுத்தடுத்த தயாரிப்புகள் 2020ஆம் ஆண்டின் மத்தியில் இருந்து இந்தியாவில் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஒத்தி வைக்கப்பட்ட ஃபோக்ஸ்வேகன் டி-ராக் மாடலின் இந்திய அறிமுகம்... காரணம் என்ன?

டி-ராக்கின் நீளம், உயரம் போன்ற வடிவங்களின் அளவு மிக சிறியது. இதனால் இந்த கார் இந்திய சந்தையில் ஜீப் கேம்பஸ், எம்ஜி ஹெக்டர் மற்றும் டாடா ஹெரியர் கார்களுக்கு சரியான போட்டியினை கொடுக்கும். 18-19 லட்ச ரூபாய் என்ற டி-ராக் மாடலின் விலையும் இந்த காரின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைய போகிறது.

ஒத்தி வைக்கப்பட்ட ஃபோக்ஸ்வேகன் டி-ராக் மாடலின் இந்திய அறிமுகம்... காரணம் என்ன?

அடுத்த ஆண்டு இந்திய சந்தையில் அறிமுகமாகவுள்ள டி-ராக், பல பாதுகாப்பு அம்சங்களுடன் ப்ரீமியம் என்ற ஒற்றை வேரியண்ட்டில் மட்டுமே வெளியாகவுள்ளது. இந்த பாதுகாப்பு அம்சத்தில் உள்ள ரூஃப் இரு விதமான வேரியண்ட்களில் லிமிட்டேட் நிற தேர்வுகளில் விற்பனைக்கு கிடைக்கும்.

ஒத்தி வைக்கப்பட்ட ஃபோக்ஸ்வேகன் டி-ராக் மாடலின் இந்திய அறிமுகம்... காரணம் என்ன?

டி-ராக் தோற்றத்திலும் செயல்பாடுகளிலும் அப்படியே டி-கிராஸ் எஸ்யூவியை பின்பற்றவுள்ளது. இந்த டி-கிராஸ் எஸ்யூவி, தயாரித்துள்ள வரை மட்டும் ஆட்டோ எக்ஸ்போவில் இதே அளவில் உள்ள ஸ்கோடா நிறுவன கார்களுடன் கண்காட்சிக்கு வைக்கப்பட்டு 2020 ஜூனில் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட இருக்கிறது. இந்தியாவிற்காக இந்த டி-கிராஸ் மாடல் 1.0 டிஎஸ்ஐ என்ஜினுடன் வெளியாகவுள்ளது.

ஒத்தி வைக்கப்பட்ட ஃபோக்ஸ்வேகன் டி-ராக் மாடலின் இந்திய அறிமுகம்... காரணம் என்ன?

இந்த இரு கார்களில் முதலில் அறிமுகமாகும் டி-ராக் மாடல் மூலமாக டி-கிராஸ் காரையும் எளிதாக பிரபலப்படுத்தலாம் என ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. ஏனெனில் டி-கிராஸ் எஸ்யூவி மீது சில மோசமான விமர்சனங்கள் எழுந்துள்ளன. இதனாலேயே டி-கிராஸ் எஸ்யூவி லாபம் தரும் வகையில் குறைவான யூனிட் எண்ணிக்கையில் விற்பனையாகவுள்ளது. இந்தியா 2.0 என்ற பெயரில் ஸ்கோடா நிறுவனத்துடன் ஃபோக்ஸ்வேகன் கூட்டணி அமைத்தத்தற்கு காரணமும் இதுதான்.

source: NDTV Auto

Most Read Articles
English summary
Volkswagen T-Roc SUV India-Launch Details Revealed: Will Rival The Kia Seltos
Story first published: Friday, October 25, 2019, 17:04 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X