க்ராஷ் டெஸ்டில் புதிய சாதனைப் படைத்த ஃபோக்ஸ்வேகன் டி கிராஸ் கார்!

ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்தின் டி கிராஸ் மாடல் காரை என்சிஏபி அமைப்பு கிராஸ் டெஸ்ட் செய்து பார்த்தது. இதில், டி கிராஸ் கார் சிறப்பான பாதுகாப்பு தர மதிப்பீட்டை பெற்றுள்ளது. இதுகுறித்த தகவலை இந்த பதிவில் காணலாம்.

க்ராஷ் டெஸ்டில் புதிய சாதனைப் படைத்த ஃபோக்ஸ்வேகன் டி கிராஸ் கார்!

ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்தின் டி கிராஸ் மாடல் காரை லத்தின் நாட்டின் என்சிஏபி அமைப்பு கிராஸ் டெஸ்ட் செய்து பார்த்தது. இதில், டி கிராஸ் கார் சிறப்பான பாதுகாப்பு தர மதிப்பீட்டை பெற்றிருக்கிறது. அதன்படி, இந்த கார் க்ராஷ் டெஸ்டில் ஐந்துக்கு 5 நட்சத்திர ரேட்டிங்கைப் பெற்றுள்ளது. பெரியவர்கள் மற்றும் சிறியவர்கள் என இரண்டு பிரிவிலும் சிறப்பான ரேட்டிங்கைப் பெற்று இந்த கார் அசத்தியுள்ளது.

க்ராஷ் டெஸ்டில் புதிய சாதனைப் படைத்த ஃபோக்ஸ்வேகன் டி கிராஸ் கார்!

ஒரு கார் சர்வதேச சந்தையில் விற்பனைக்குச் செல்வதற்கு முன்னதாக இந்த பரிசோதனைக்கு உட்படுத்துவது சிறப்பான ஒன்றாகும். அந்த வகையில், இந்த கார் சிறப்பான ரேட்டிங்கைப் பெற்று சந்தையில் முதன்மை இடத்தைப் பிடித்துள்ளது.

க்ராஷ் டெஸ்டில் புதிய சாதனைப் படைத்த ஃபோக்ஸ்வேகன் டி கிராஸ் கார்!

ஃபோக்ஸ்வேகன் டி கிராஸ் காரின் முன்பக்கத்தைச் சோதனை செய்யும் விதமாக, 64 கிமீ வேகத்தில் ஓட்டி வந்து மோதப்பட்டது. அதில், காரின் என்ஜின் முழுமையாக நொருங்கியது. ஆனால், காருக்குள் அமர்ந்திருந்த பயணிகளின் பாதுகாப்பு உறுதிசெய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து, பக்கவாட்டு பகுதியில், 50 கிமீ வேகத்தில் வெறொரு வாகனம் வைத்து கிராஷ் டெஸ்ட் செய்யப்பட்டது. அதில், பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும்விதமாக ஏர் பேக்குகள் செயல்பட்டன.

க்ராஷ் டெஸ்டில் புதிய சாதனைப் படைத்த ஃபோக்ஸ்வேகன் டி கிராஸ் கார்!

இந்த கிராஷ் டெஸ்டில், ஃபோக்ஸ்வேகன் டி கிராஸ் கார், பெரியவர்களுக்கான பாதுகாப்பில் 16க்கு 14.62 புள்ளிகளையும், குழந்தைகளின் பாதுகாப்பில் பதினாறுக்கு 16 புள்ளிகளையும் பெற்று அசத்தி உள்ளது. ஒட்டுமொத்தமாக 24-க்கு 21.77 புள்ளிகளைப் பெற்று ஐந்து நட்சத்திர பாதுகாப்பு காராக டி கிராஸ் கார் மாறியுள்ளது.

க்ராஷ் டெஸ்டில் புதிய சாதனைப் படைத்த ஃபோக்ஸ்வேகன் டி கிராஸ் கார்!

என்சிஏபி அமைப்பின் கிராஷ் டெஸ்டின்மூலம், ஃபோக்ஸ்வேகனின் டி கிராஸ் காருடைய உடற்கூடு தரம் வாய்ந்தது என நிரூபணமாகியுள்ளது. மேலும், காரில் பயணிப்பவர்களின் தலை, கழுத்து மற்றும் மார்பு பகுதி ஆகியவை பாதுகாக்கப்படும் என்பதும் உறுதியாகி உள்ளது.

ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்தின் எம்க்யூபி பிளாட்ஃபார்மில் உருவாக்கப்பட்ட இந்த டி க்ராஸ் எஸ்யூவியானது ஆறு ஏர்பேக்குகளைக் கொண்டுள்ளது. ஆனால், இது இன்னும் சந்தையில் அறிமுகமாகவில்லை என்பது ஏமாற்றமான விஷயம்.

க்ராஷ் டெஸ்டில் புதிய சாதனைப் படைத்த ஃபோக்ஸ்வேகன் டி கிராஸ் கார்!

இந்த எஸ்யூவியில் புத்தம் புதிய 1.0 லிட்டர் டர்போசார்ஜ்டு பெட்ரோல் எஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது அதிகபட்சமாக 115பிஎஸ் பவரையும், 200என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். ஃபோக்ஸ்வேகன் போலோ, வென்ட்டோ கார்களில் பயன்படுத்தப்படும் 1.5 லிட்டர் டீசல் எஞ்ஜின்தான் இந்த எஸ்யூவியிலும் பொருத்தப்பட்டுள்ளது. இந்த எஞ்ஜின் பிஎஸ்-6 மாசு உமிழ்வு விதிகளுக்கு ஏற்ப மாற்றங்கள் செய்யப்பட்டள்ளது. மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும் டியூவல் க்ளட்ச் கியர்பாக்ஸ் ஆப்ஷன்களிலும் இந்த கார் எதிர்பார்க்கப்படுகிறது.

க்ராஷ் டெஸ்டில் புதிய சாதனைப் படைத்த ஃபோக்ஸ்வேகன் டி கிராஸ் கார்!

மேலும், இது இந்திய விதிமுறைகளுக்கு ஏற்ப மாற்றியமைக்கப்பட்டு 2020ம் ஆண்டிற்குள் இந்திய கார் சந்தையில் விற்பனைக்கு வரலாம் என எதிர்பார்க்ப்படுகிறது. அவ்வாறு, இது இந்திய சந்தைக்குள் நுழையுமானால், ஹூண்டாய் க்ரெட்டாவுக்கு நேர் போட்டியாக இருக்கும்.

Most Read Articles
English summary
Volkswagen T-Cross Scores 5-Stars In NCAP. Read In Tamil
Story first published: Friday, March 29, 2019, 18:24 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X