அக்டோபரில் அறிமுகமாகும் வால்வோ நிறுவனத்தின் எக்ஸ்சி40 எலெக்ட்ரிக் கார்!

வால்வோ சொகுசு கார் நிறுவனத்தின் முதல் முழுமையான எலெக்ட்ரிக் கார் மாடலாக எக்ஸ்சி40 எஸ்யூவி அடுத்த மாதம் உலகளாவிய அளவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.

அக்டோபரில் அறிமுகமாகும் வால்வோ நிறுவனத்தின் எக்ஸ்சி40 எலெக்ட்ரிக் கார்!

சொகுசு கார் தயாரிப்பில் உலக பிரபலமான வால்வோ நிறுவனம் எலெக்ட்ரிக் கார் தயாரிப்புக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகிறது. அந்த வகையில், உலக அளவில் அதிக வரவேற்பை பெற்றிருக்கும் தனது எக்ஸ்சி40 காம்பேக்ட் சொகுசு எஸ்யூவி காரின் எலெக்ட்ரிக் மாடலை அறிமுகப்படுத்த இருக்கிறது. இதுதான் வால்வோ நிறுவனத்தின் முழுமையான முதல் எலெக்ட்ரிக் கார் மாடல்.

அக்டோபரில் அறிமுகமாகும் வால்வோ நிறுவனத்தின் எக்ஸ்சி40 எலெக்ட்ரிக் கார்!

மேலும், இதுவரை தயாரிக்கப்பட்ட எலெக்ட்ரிக் கார்களில் மிக மிக பாதுகாப்பான கார் மாடலாக எக்ஸ்சி40 கார் இருக்கும் என்று வால்வோ தெரிவிக்கிறது. அதாவது, வழக்கம்போல் இந்த காரும் தனது பாதுகாப்பு பொறியியல் திறனை பரைசாற்றும் விதத்தில் இருக்கும் என்று வால்வோ அடித்து கூறுகிறது.

அக்டோபரில் அறிமுகமாகும் வால்வோ நிறுவனத்தின் எக்ஸ்சி40 எலெக்ட்ரிக் கார்!

விபத்தின்போது பேட்டரி மற்றும் மின் மோட்டார்கள் பாதிக்கப்படாதவகையில், முன்புற கட்டமைப்பில் பல்வேறு மாற்றங்களை செய்துள்ளதாக வால்வோ நிறுவனம் தெரிவித்துள்ளது. மின் மோட்டாரும் உறுதியான கட்டமைப்பு அறைக்குள் பொருத்தப்பட்டு இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.

அக்டோபரில் அறிமுகமாகும் வால்வோ நிறுவனத்தின் எக்ஸ்சி40 எலெக்ட்ரிக் கார்!

விபத்தின்போது மோதல் தாக்கத்தை வெகுவாக உள்வாங்கி காருக்கன பாதிப்பை குறைக்கும் விதத்தில், இந்த கார் கட்டமைப்பு செய்யப்பட்டு இருப்பதாகவும் வால்வோ தெரிவிக்கிறது. பேட்டரியும் அதிக பாதுகாப்பு அம்சங்களுடன் பொருத்தப்பட்டு இருப்பதாகவும், காரின் மைய ஈர்ப்பு விசை மிகச் சிறப்பாக இருக்க இந்த பேட்டரி அமைப்பும் உதவும் என்று வால்வோ தெரிவித்துள்ளது.

அக்டோபரில் அறிமுகமாகும் வால்வோ நிறுவனத்தின் எக்ஸ்சி40 எலெக்ட்ரிக் கார்!

வால்வோ நிறுவனத்தின் நவீன டிரைவர் அசிஸ்ட் சிஸ்டத்துடன் இந்த கார் வர இருக்கிறது. இதன்மூலமாக, காரின் இயக்கம், பாதுகாப்பு விஷயங்கள் இதுவரை இல்லாத அளவு உறுதி செய்யப்படும் என்று தெரிவிக்கப்படுகிறது. எதிர்காலத்தில் ஓட்டுனர் உதவி இல்லாமல் இயக்குவதற்கான வாய்ப்பை வழங்கும் விதத்தில், இந்த கட்டுப்பாட்டு சாஃப்ட்வேர் உருவாக்கப்பட்டு இருக்கிறது.

அக்டோபரில் அறிமுகமாகும் வால்வோ நிறுவனத்தின் எக்ஸ்சி40 எலெக்ட்ரிக் கார்!

வால்வோ எக்ஸ்சி40 காரின் இரண்டு ஆக்சில்களிலும் தலா ஒரு மின் மோட்டார் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. இதன்மூலமாக, மிகச் சிறந்த செயல்திறனை இந்த கார் வழங்கும் என்றும் கூடுதல் தொழில்நுட்ப விபரங்கள் அடுத்த மாதம் 16ந் தேதி வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Most Read Articles
மேலும்... #வால்வோ #volvo
English summary
Swedish luxury car maker, Volvo is preparing to unveil of its first electric car model, XC40 by next month.
Story first published: Thursday, September 26, 2019, 11:01 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X