400 கிமீ ரேஞ்ச்... வருகிறது வால்வோ எக்ஸ்சி40 எலெக்ட்ரிக் கார்!

வால்வோ நிறுவனத்தின் முதல் எலெக்ட்ரிக் கார் மாடல் வெளியிடப்பட்டுள்ளது. சிறப்பம்சங்கள் வாடிக்கையாளர்களை சுண்டி இழுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விரிவானத் தகவல்களை இந்த செய்தியில் காணலாம்.

400 கிமீ ரேஞ்ச்... வருகிறது வால்வோ எக்ஸ்சி40 எலெக்ட்ரிக் கார்!

வால்வோ நிறுவனத்தின் எக்ஸ்சி40 எஸ்யூவி விற்பனையில் சக்கை போடு போட்டு வருகிறது. இந்தியாவிலும் இந்த புதிய எஸ்யூவி மாடலுக்கு பெரும் வரவேற்பு கிடைத்தது அறிந்ததே. இந்த நிலையில், இதன் அடிப்படையில் உருவாக்கப்பட்டு இருக்கும் மின்சார மாடல் விரைவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. வால்வோ எக்ஸ்சி40 ரீசார்ஜ் என்ற பெயரில் இந்த மாடல் வருகிறது.

400 கிமீ ரேஞ்ச்... வருகிறது வால்வோ எக்ஸ்சி40 எலெக்ட்ரிக் கார்!

இந்த நிலையில், இந்த காரின் முக்கிய சிறப்பம்சங்கள் குறித்த சிலத் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. அதில், புதிய வால்வோ எக்ஸ்சி40 எலெக்ட்ரிக் காரின் ரேஞ்ச் வியக்க வைப்பதாகவும், அதேசமயத்தில் செயல்திறனில் சமரசமில்லாமலும் இருக்கும் என்ற தகவல் எல்லோரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

400 கிமீ ரேஞ்ச்... வருகிறது வால்வோ எக்ஸ்சி40 எலெக்ட்ரிக் கார்!

வால்வோ எக்ஸ்சி40 எலெக்ட்ரிக் எஸ்யூவியில் 78kWh திறன் வாய்ந்த லித்தியம் அயான் பேட்டரி பயன்படுத்தப்பட இருக்கிறது. இதில், அதிகபட்சமாக 75kWh திறன் வரை பயன்படுத்திக் கொள்ள முடியுமாம்.

400 கிமீ ரேஞ்ச்... வருகிறது வால்வோ எக்ஸ்சி40 எலெக்ட்ரிக் கார்!

இந்த காரில் வழங்கப்பட இருக்கும் இரண்டு எலெக்ட்ரிக் மோட்டார்கள் இணைந்து அதிகபட்சமாக 402 எச்பி பவரையும், 660 என்எம் டார்க் திறனையும் வாரி வழங்கும். பெட்ரோல், டீசல் எஞ்சின் மாடல்களுக்கே டஃப் கொடுக்கும் வகையிலான இதன் பேட்டரியும், மின் மோட்டாரும் இருப்பதால், ரேஞ்ச் குறைவாக இருக்கும் என்று எண்ண வேண்டாம்.

400 கிமீ ரேஞ்ச்... வருகிறது வால்வோ எக்ஸ்சி40 எலெக்ட்ரிக் கார்!

இந்த காரின் லித்தியம் அயான் பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்தால் 402 கிமீ தூரம் வரை பயணிக்கும் வாய்ப்பை வழங்குமாம். மேலும், இதற்கு வழங்கப்படும் 150kW ஃபாஸ்ட் சார்ஜர் மூலமாக வெறும் 40 நிமிடங்களில் 80 சதவீதம் அளவுக்கு பேட்டரியை சார்ஜ் செய்துவிட முடியும்.

400 கிமீ ரேஞ்ச்... வருகிறது வால்வோ எக்ஸ்சி40 எலெக்ட்ரிக் கார்!

இந்த காரில் வழங்கப்பட இருக்கும் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் நேரடி இணைய வசதியை பெற்றிருக்கும். இதன்மூலமாக, இதிலுள்ள அப்ளிகேஷன்களை நேரடியாக நிறுவனம் அப்டேட் செய்ய முடியும். அத்துடன், பல்வேறு தரவுகளையும் பெறுவதற்கான வாய்ப்பை இந்த கார் வழங்கும்.

400 கிமீ ரேஞ்ச்... வருகிறது வால்வோ எக்ஸ்சி40 எலெக்ட்ரிக் கார்!

அடுத்த ஆண்டு இந்த கார் ஜெர்மனி உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளிலும், தொடர்ந்து அமெரிக்காவிலும் விற்பனைக்கு கொண்டு செல்லப்பட இருக்கிறது. இதையடுத்து, பிற நாடுகளிலும் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இந்த கார் இந்திய மதிப்பில் ரூ.47 லட்சம் மதிப்பில் அமெரிக்காவில் விற்பனைக்கு கொண்டு வரப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Most Read Articles
மேலும்... #வால்வோ #volvo
English summary
Volvo has revealed its first fully electrified model dubbed the XC40 Recharge.
Story first published: Thursday, October 17, 2019, 14:53 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X