வால்வோ எக்ஸ்சி40 காரின் பெட்ரோல் மாடல் விற்பனைக்கு அறிமுகம்

வால்வோ எக்ஸ்சி40 சொகுசு எஸ்யூவி காரின் பெட்ரோல் மாடல் இன்று இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. அதன் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

வால்வோ எக்ஸ்சி40 காரின் பெட்ரோல் மாடல் அறிமுகம்

வால்வோ நிறுவனத்தின் விலை குறைவான காம்பேக்ட் ரக எஸ்யூவி கார் எக்ஸ்சி40 சொகுசு கார். கடந்த ஆண்டு ஜூலையில் இந்த கார் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. அறிமுகம் செய்யப்பட்ட உடனே பெரும் வரவேற்பை பெற்றது. முன்பதிவுகளும் குவிந்ததால், வால்வோ உற்சாகமடைந்தது.

வால்வோ எக்ஸ்சி40 காரின் பெட்ரோல் மாடல் அறிமுகம்

அருமையான டிசைனிலும், பாதுகாப்பு அம்சங்களிலும் குறைவில்லாத இந்த காருக்கு இந்தியாவில் நல்ல வரவேற்பை பெற்றதால், வால்வோ நிறுவனத்தின் கார் வர்த்தகப் பிரிவுக்கும் வலுவான அடித்தளத்தை கொடுத்தது. இதுவரை வால்வோ எக்ஸ்சி40 கார் டீசல் மாடலில் மட்டுமே கிடைத்து வந்தது.

வால்வோ எக்ஸ்சி40 காரின் பெட்ரோல் மாடல் அறிமுகம்

இந்த நிலையில், இன்று பெட்ரோல் மாடலும் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. வால்வோ எக்ஸ்சி40 ஆர்-டிசைன் டி4 என்ற வேரியண்ட்டில் இந்த புதிய பெட்ரோல் எஞ்சின் தேர்வு வழங்கப்படுகிறது. இதில், கொடுக்கப்படும் 2.0 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் 187 பிஎச்பி பவரையும், 300 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். இந்த எஞ்சினுடன் 8 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது.

வால்வோ எக்ஸ்சி40 காரின் பெட்ரோல் மாடல் அறிமுகம்

டீசல் மாடலில் ஆல் வீல் டிரைவ் சிஸ்டம் கொடுக்கப்பட்டு இருக்கும் நிலையில், இந்த பெட்ரோல் மாடலில் ஃப்ரண்ட் வீல் டிரைவ் சிஸ்டத்தில் மட்டுமே கிடைக்கும். அதேநேரத்தில், இந்த புதிய பெட்ரோல் எஞ்சின் பிஎஸ்-6 மாசு உமிழ்வு தரத்திற்கு நிகரானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வால்வோ எக்ஸ்சி40 காரின் பெட்ரோல் மாடல் அறிமுகம்

புதிய வால்வோ எக்ஸ்சி40 பெட்ரோல் மாடலில் கூடுதலாக ரேடார் அடிப்படையில் செயல்படும் பல்வேறு பாதுகாப்பு அம்ங்கள் உள்ளன. 50 கிமீ வேகத்திற்கு மேல் செல்லும்போது பிற வாகனங்கள், பாதசாரிகள் மற்றும் விலங்குகள் மீது மோதுவதை தவிர்க்கும் ஸ்டீயரிங் அசிஸ்ட் வசதி உள்ளது.

வால்வோ எக்ஸ்சி40 காரின் பெட்ரோல் மாடல் அறிமுகம்

அதேபோன்று, முன்னால், பின்னால், அருகில் வரும் வாகனங்களுடன் போதுமான இடைவெளி விட்டு காரின் வேகத்தை தானியங்கி முறையில் மாற்றிக் கொள்ளும் அடாப்டிவ் க்ரூஸ் கன்ட்ரோல் சிஸ்டமும் உள்ளது. சாலை விட்டு கார் விலகிச் செல்வதை தவிர்க்கும் தொழில்நுட்பம், கார் கவிழ்வதை தவிர்க்கும் வசதிகளும் உள்ளன.

MOST READ:சொன்னா நம்ப மாட்டீங்க படத்துல இருக்க காரைவிட நம்பர் பிளேட் விலை அதிகம்... எவ்வளவு தெரியுமா..?

வால்வோ எக்ஸ்சி40 காரின் பெட்ரோல் மாடல் அறிமுகம்

இந்த காரில் அதிகபட்சமாக 7 ஏர்பேக்குகள் கொடுக்கப்பட்டுள்ளன. மேலும், பனோரமிக் சன்ரூஃப் அமைப்பு, வயர்லெஸ் சார்ஜர், டியூவல் ஸோன் க்ளைமேட் கன்ட்ரோல் ஏசி சிஸ்டம் உள்ளன.

MOST READ:2019ல் கூகுளில் அதிகம் பேர் தேடிய மோட்டார்சைக்கிள்கள் இவை தான்...

வால்வோ எக்ஸ்சி40 காரின் பெட்ரோல் மாடல் அறிமுகம்

இந்த காரில் 9 அங்குல தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் உள்ளது. ஆன்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் ப்ளே செயலிகளை சப்போர்ட் செய்யும். மேலும், 12.3 அங்குல திரையுடன் கூடிய இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் உள்ளது.

MOST READ: ச்சோ ஸ்வீட்... காருடன் சண்டை போட்ட சுட்டி பையன்... ஏன் தெரியுமா? மனதை நெகிழ வைக்கும் வீடியோ

வால்வோ எக்ஸ்சி40 காரின் பெட்ரோல் மாடல் அறிமுகம்

புதிய வால்வோ எக்ஸ்சி40 காரின் பெட்ரோல் மாடலுக்கு ரூ.39.9 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலை நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது. டீசல் மாடலின் ஸ்டான்டர்டு வேரியண்ட்டிற்கு ரூ.39.9 லட்சம் விலையிலும், மொமன்டம் என்ற உயர் வகை வேரியண்ட்டிற்கு ரூ.43.9 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையிலும் கிடைக்கிறது.

Most Read Articles

மேலும்... #வால்வோ
English summary
Volvo has launched the XC40 T4 R-Design petrol variant with BS-6 compliant engine in India.
Story first published: Friday, December 13, 2019, 18:03 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X