பவர்ஃபுல் வால்வோ எக்ஸ்சி60, வி60 போல்ஸ்டார் கார்கள் அறிமுகம்!

வால்வோ நிறுவனத்தின் போல்ஸ்டார் பிராண்டில் எக்ஸ்சி60 மற்றும் வி60 ஆகிய இரு கார்களின் செயல்திறன் மிக்க மாடல்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இந்த கார்களின் சிறப்பம்சங்களை தொடர்ந்து காணலாம்.

பவர்ஃபுல் வால்வோ எக்ஸ்சி60, வி60 போல்ஸ்டார் கார்கள் அறிமுகம்!

உலகின் மிக பாதுகாப்பான கார்களை தயாரிக்கும் நிறுவனமாக போற்றப்படும் வால்வோ தனது சொகுசு கார்களின் அடிப்படையிலான பெர்ஃபார்மென்ஸ் கார்களை போல்ஸ்டார் பிராண்டில் உருவாக்கி வருகிறது. இந்த நிலையில், வால்வோ எக்ஸ்சி60 மற்றும் வி60 கார்களின் T8 வேரியண்ட்டின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட போல்ஸ்டார் வெர்ஷன்களை அறிமுகம் செய்துள்ளது.

பவர்ஃபுல் வால்வோ எக்ஸ்சி60, வி60 போல்ஸ்டார் கார்கள் அறிமுகம்!

இந்த கார்கள் பெட்ரோல் எஞ்சின் மற்றும் மின் மோட்டார் இணைந்து செயல்படும் ஹைப்ரிட் மாடலாக உருவாக்கப்பட்டுள்ளன. இந்த காரில் இருக்கும் 2.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் அதிகபட்சமாக 415 பிஎச்பி பவரையும், 669 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். சாதாரண வால்வோ எக்ஸ்சி60 மற்றும் வி60 கார் எஞ்சினைவிட இந்த மாடல் 15 பிஎச்பி கூடுதல் பவரையும், 33 என்எம் கூடுதல் டார்க் திறனையும் வெளிப்படுத்தும்.

பவர்ஃபுல் வால்வோ எக்ஸ்சி60, வி60 போல்ஸ்டார் கார்கள் அறிமுகம்!

இந்த பெட்ரோல் எஞ்சினுடன் மின் மோட்டாரும் இணைந்து செயலாற்றும். இதனால், இந்த கார் 0 - 100 கிமீ வேகத்தை வெறும் 5 வினாடிகளுக்குள் எட்டிவிடும் திறன் படைத்தாக இருக்கும். குறிப்பாக, சாதாரண மாடலைவிட இந்த போல்ஸ்டார் மாடல்கள் விரைவானதாக இருக்கும்.

பவர்ஃபுல் வால்வோ எக்ஸ்சி60, வி60 போல்ஸ்டார் கார்கள் அறிமுகம்!

இந்த மாடல்களின் செயல்திறன் அதிகரிக்கப்பட்டுள்ளதால் சஸ்பென்ஷன் அமைப்பிலும் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இதனால், இந்த மாடல்கள் சிறப்பான கையாளுமையை வழங்கும்.

பவர்ஃபுல் வால்வோ எக்ஸ்சி60, வி60 போல்ஸ்டார் கார்கள் அறிமுகம்!

மெர்சிடிஸ் ஏஎம்ஜி மற்றும் பிஎம்டபிள்யூ எம் வரிசையில் விற்பனை செய்யப்படும் பெர்ஃபார்மென்ஸ் மாடல்களில் ஏராளமான ஆக்சஸெரீகள் கொடுக்கப்பட்டு காரின் தோற்றம் படுமிரட்டலாக இருக்கும். ஆனால், வால்வோ நிறுவனத்தின் போல்ஸ்டார் மாடல்களில் பெரிய அளவில் வித்தியாசங்கள் தெரியவில்லை.

பவர்ஃபுல் வால்வோ எக்ஸ்சி60, வி60 போல்ஸ்டார் கார்கள் அறிமுகம்!

பெரிய அளவிலான மாற்றங்களாக 10 ஸ்போக் அலாய் வீல்கள், கருப்பு வண்ண ரேடியேட்டர் க்ரில் அமைப்பு, வலிமையான வீல் ஆர்ச்சுகள் மற்றும் போல்ஸ்டார் பேட்ஜ் ஆகியவை வெளிப்புறத்தில் முக்கிய அம்சங்களாக கூற முடியும்.

பவர்ஃபுல் வால்வோ எக்ஸ்சி60, வி60 போல்ஸ்டார் கார்கள் அறிமுகம்!

வால்வோ எஸ்60 போல்ஸ்டார் மாடலில் வெறும் 20 யூனிட்டுகள் விற்பனை செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால், வால்வோ எக்ஸ்சி60 மற்றும் வி60 போல்ஸ்டார் மாடல்கள் அதிக எண்ணிக்கையில் விற்பனை செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, இந்தியாவிற்கும் ஒரு சில யூனிட்டுகளை ஒதுக்கீடு செய்யுமா என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது.

பவர்ஃபுல் வால்வோ எக்ஸ்சி60, வி60 போல்ஸ்டார் கார்கள் அறிமுகம்!

வால்வோ எக்ஸ்சி60 எஸ்யூவி மாடல் இந்தியாவில் ஏற்கனவே விற்பனையில் உள்ளது. இந்தநிலையில், மெர்சிடிஸ் ஏஎம்ஜி, பிஎம்டபிள்யூ எம் மாடல்களுக்கு போட்டியாக தனது போல்ஸ்டார் மாடல்களை களமிறக்கும் வாய்ப்பு இருக்கிறது. ஆனால், இந்த மாடல்களை இந்தியாவில் அறிமுகம் செய்வது குறித்த தகவல்கள் இல்லை.

Most Read Articles
மேலும்... #வால்வோ
English summary
Swedish luxury car maker, Volvo has unveiled the more powerful Polestar version of the XC60 and V60.
Story first published: Friday, April 5, 2019, 11:15 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X