இந்திய தயாரிப்பை கண்டு மெய்சிலிர்த்த ஆப்பிரிக்க பெண்... -வீடியோ!

மஹிந்திரா நிறுவனம் அதன் புகழ்வாய்ந்த மாடல்களான எக்ஸ்யூவி500 மற்றும் கேயூவி100 மாடல்களை விற்பனைக்காக தெற்கு ஆப்பிரிக்காவில் அறிமுகம் செய்துள்ளது.

இந்திய தயாரிப்பை கண்டு மெய்சிலிர்த்த ஆப்பிரிக்க பெண்... -வீடியோ!

இந்தியாவை மையமாகக் கொண்டு இயங்கும் மஹிந்திரா அண்ட் மஹிந்திரா குழுமம் அனைத்து ரக வாகனங்களின் தயாரிப்பிலும் ஈடுபட்டு வருகிறது. அவ்வாறு, இந்த நிறுவனம் தயாரிக்கும் அனைத்து வாகனங்களையும் உள்நாடு மட்டுமின்றி சில வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்து வருகிறது.

இந்திய தயாரிப்பை கண்டு மெய்சிலிர்த்த ஆப்பிரிக்க பெண்... -வீடியோ!

அந்த வகையில், மஹிந்திரா நிறுவனம் புகழ்வாய்ந்த கேயூவி100 மைக்ரோ ரக எஸ்யூவி மாடலையும், எக்ஸ்யூவி500 லக்சூரி எஸ்யூவி மாடலையும் அண்மையில் தெற்கு ஆப்பிரிக்காவில் விற்பனைக்கு அறிமுகம் செய்தது. இந்த இரண்டு மாடல்களையும் அந்நாட்டைச் சேர்ந்த பெண் பத்திரிக்கையாளர் ஜூலியட் மெக்குயிர் (Juliet Mcguire), என்பவர் ஓட்டிப் பார்த்துள்ளார்.

இந்திய தயாரிப்பை கண்டு மெய்சிலிர்த்த ஆப்பிரிக்க பெண்... -வீடியோ!

அவ்வாறு, அந்த இரண்டு மாடல்களையும் ஓட்டிப்பார்த்ததை அடுத்து, இந்திய தயாரிப்பில் இவ்வளவு நவீன வசதிகளா என கேட்டு வியந்துள்ளார். இதுகுறித்த வீடியோவினை அவர், அவரது யுடியூப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இந்தியாவில் இந்த எக்ஸ்யூவி500 மாடல் கார் இரண்டு விதமான எஞ்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கின்றன. அதில் ஒன்று, 2.2 லிட்டர் டர்போ சார்ஜட் பெட்ரோல் எஞ்ஜினும், மற்றுமொன்று 2.2 டர்போ சார்ஜட் டீசல் எஞ்ஜின் ஆகும். இந்த இரண்டு எஞ்ஜின்களும் நான்கு சிலிண்டர் கொண்டவையாக இருக்கின்றன. இதில், பெட்ரோல் வேரியண்ட் 140 பிஎச்பி பவரையும் 320 என்எம் டார்க்கையும் வழங்கும் திறன் கொண்டதாக இருக்கிறது. அதே சமயம், டீசல் வேரியண்ட் 155 பிஎச்பி பவரையும், 360 என்எம் டார்க்கையும் வழங்குகிறது.

இந்திய தயாரிப்பை கண்டு மெய்சிலிர்த்த ஆப்பிரிக்க பெண்... -வீடியோ!

மேலும், டீசல் எஞ்ஜினில் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் ஸ்டாண்டர்டாக இணைக்கப்பட்டுள்ளது. இத்துடன், முன் பக்க சக்கரம் இயங்கும் தன்மை மற்றும் அனைத்து சக்கரங்களும் இயங்கும் தன்மை என இரண்டு ஆப்ஷன்களில் இந்த கார் விற்பனைக்குக் கிடைக்கிறது. கூடுதலாக டீசல் எஞ்ஜினில் 6 ஸ்பீடு டார்க் கன்வெர்டர் ஆட்மேடிக் கியர்பாக்ஸ் ஆப்ஷனாக வழங்கப்படுகிறது. பெட்ரோல் எஞ்ஜினில், 6 ஸ்பீடு ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது.

இந்திய தயாரிப்பை கண்டு மெய்சிலிர்த்த ஆப்பிரிக்க பெண்... -வீடியோ!

மோனோகோக்யூ பிளாட்பாரத்தில் தயாராகி இருக்கும் இந்த மஹிந்திரா எக்ஸ்யூவி 500 கார், 7 சீட்டர் மாடலாக கிடைக்கிறது. இது, இந்தியாவில் ரூ. 12.88 லட்சம் என்ற டெல்லி எக்ஸ்-ஷோரூமில் விற்பனைச் செய்யப்பட்டு வருகிறது.

இந்திய தயாரிப்பை கண்டு மெய்சிலிர்த்த ஆப்பிரிக்க பெண்... -வீடியோ!

கேயூவி100, இது இந்தியாவின் முதல் மைக்ரோ மாடல் எஸ்யூவி மாடலாகும். இதனைத்தான் மஹிந்திரா நிறுவனம் தற்போது தெற்கு ஆப்பிரிக்காவில் அறிமுகம் செய்துள்ளது. இந்த கார் இரண்டு விதமான எஞ்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கின்றது. அந்த வகையில், இரண்டு எஞ்ஜின்களிலும் டர்போசார்ஜட், 3 சிலிண்டர்கள் கொண்ட 1.2 லிட்டர் எஞ்ஜின்கள் பொருத்தப்பட்டுள்ளன.

இந்த கேயூவி100 காரின் முன் இருக்கையானது, மூன்று பேர் அமர்ந்து செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும், மடக்கும் தன்மைக் கொண்ட இருக்கை, ஹார்ம் ரெஸ்ட் உள்ளிட்ட பல்வேறு முக்கிய வசதிகள் இந்த காரில் இடம் பெற்றுள்ளன. இந்த பட்ஜெட் ரக கார், மாருதியின் ஸ்விஃப்ட் மற்றும் ஹூண்டாய் நிறுவனத்தின் கிராண்ட் ஐ10 ஆகிய கார்களுக்கு போட்டியாக உருவாக்கப்பட்டுள்ளது.

Most Read Articles
மேலும்... #மஹிந்திரா #mahindra
English summary
What South Africans Have To Say About The Mahindra XUV500 & KUV100. Read In Tamil.
Story first published: Friday, April 19, 2019, 16:00 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X