ஆர்எஃப்ஐடி டேக் இல்லாமல் இனி இந்த பகுதிக்குள் நுழையவே முடியாது... அதிரடி அறிவிப்பு!

வணிக ரீதியாக இயங்கும் வாகனங்கள் இனி ஆர்எஃப்ஐடி டேக் இல்லாமல் குறிப்பிட்ட பகுதிக்குள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த தகவலை இந்த பதிவில் காணலாம்.

ஆர்எஃப்ஐடி டேக் இல்லாமல் இனி இந்த பகுதிக்குள் நுழையவே முடியாது... அதிரடி அறிவிப்பு!

இந்தியாவின் தற்போதைய வாகன சந்தை மிகப்பெரிய வீழ்ச்சியைச் சந்தித்தாலும், கடந்த 2018ம் ஆண்டின் இறுதிக்கு முன்னர் வரை நல்ல அமோகமான வரவேற்பைச் சந்தித்து வந்தது.

இதனால், இந்திய சாலையில் உள்ள வாகனங்களின் எண்ணிக்கை மக்கள் தொகைக்கு டஃப் கொடுக்கும் அளவிற்கு உயர்ந்துள்ளது.

ஆர்எஃப்ஐடி டேக் இல்லாமல் இனி இந்த பகுதிக்குள் நுழையவே முடியாது... அதிரடி அறிவிப்பு!

இதனை, நாட்டில் உள்ள முக்கிய நகரங்களின் சாலைகளில் ஒரு நாள் பயணித்தாலே நம்மால் உணர்ந்துவிட முடியும். நாட்டில் எந்த அளவிற்கு வாகனங்களின் அடர்த்தி உள்ளது என்பது.

அதிலும், மிக முக்கியமாக நாட்டின் தலைநகரமாக உள்ள டெல்லி அதிக வாகனங்களின் பயன்பாட்டால் மிகப்பெரிய பின்விளைவு மற்றும் சிக்கல்களைச் சந்தித்து வருகின்றது.

ஆர்எஃப்ஐடி டேக் இல்லாமல் இனி இந்த பகுதிக்குள் நுழையவே முடியாது... அதிரடி அறிவிப்பு!

இந்தியாவில் உள்ள மற்ற முக்கிய நகரங்களைக் காட்டிலும் தலைநகர் டெல்லி மிக மோசமான நிலையில் வாகன புகையின் மாசுபாட்டால் சிக்கலைச் சந்தித்து வருகின்றது.

சில நேரங்களில் வாகனங்களில் இருந்து வெளிவரும் புகை, மூடு பனி போன்று நகரத்தைச் சூடியதைப் போன்று காட்சியளிக்கும்.

ஆர்எஃப்ஐடி டேக் இல்லாமல் இனி இந்த பகுதிக்குள் நுழையவே முடியாது... அதிரடி அறிவிப்பு!

இதன்காரணமாக, நகரத்தில் உள்ள பழைய மற்றும் வாகன அடர்த்தியைக் குறைக்கும் விதமான முயற்சியில் டெல்லி அரசு செயல்பட்டு வருகின்றது.

அந்தவகையில், ஓர் புதிய அறிவிப்பை நேற்று (ஆக்ஸ்ட் 23) நள்ளிரவு முதல் டெல்லி அரசு அமலுக்குக் கொண்டு வந்துள்ளது. ஆகையால், இன்று முதல் ஆர்எஃப்ஐடி டேக் இல்லாத வணிக ரீதியாக இயங்கும் வாகனங்கள் டெல்லியில் நுழைய தடுக்கப்பட்டுள்ளது.

ஆர்எஃப்ஐடி டேக் இல்லாமல் இனி இந்த பகுதிக்குள் நுழையவே முடியாது... அதிரடி அறிவிப்பு!

மீறி நகரத்தில் நுழையும் வாகனங்களுக்கு கடுமையான அபராதங்கள் விதிக்கப்பட உள்ளது.

வணிக வாகனங்களுக்கான கட்டாய ஆர்எஃப்ஐடி டேக், டெல்லியில் அதிசயத்தை மேற்கொள்ளும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், இது மாசு கட்டுப்பாட்டு, ஊழல் போன்றவற்றை தடுக்க உதவும். இத்துடன், இது டெல்லி மக்களுக்கு தடையற்ற சாலை பயன்பாட்டை வழங்க உதவும்.

ஆர்எஃப்ஐடி டேக் இல்லாமல் இனி இந்த பகுதிக்குள் நுழையவே முடியாது... அதிரடி அறிவிப்பு!

டெல்லி அரசின் இந்த புதிய உத்தரவால், அம்மாநிலத்தில் இயங்கும் அனைத்து வணிக ரீதியான வாகனங்களும் ஆர்எஃப்ஐடியில் பதிவு செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மேலும், இதில் பதிவு செய்யாத வாகனங்களிடம் இருந்து, இரு மடங்கு சுற்றுப்புறச் சூழலுக்கான அபராதம் வசூலிக்கப்பட உள்ளது. இந்த புதிய திட்டம் இன்றிலிருந்து நடைமுறைக்கு வந்துள்ளது.

ஆர்எஃப்ஐடி டேக் இல்லாமல் இனி இந்த பகுதிக்குள் நுழையவே முடியாது... அதிரடி அறிவிப்பு!

அதேசமயம், இந்த அபராதத் தொகையை அடுத்தடுத்து வரும் வாரங்களில் இரட்டிப்பாக்க அரசு திட்டமிட்டுள்ளது. ஆகையால், ஆர்எஃப்ஐடி டேக்கைப் பெறாத வாகனங்கள் உடனடியாக பதிவு செய்துவிடுமாறு அரசு அறிவுறுத்தியுள்ளது.

ஆர்எஃப்ஐடி டேக் இல்லாமல் இனி இந்த பகுதிக்குள் நுழையவே முடியாது... அதிரடி அறிவிப்பு!

அதேசமயம், தற்போது வரை அம்மாநிலத்தில் இயங்கிவரும் 1.7 லட்சம் அளவிலான வணிக வாகனங்கள் ஆர்எஃப்-ஐடியில் முன் பதிவு செய்துள்ளன.

ஆகையால், இந்த வாகனங்கள் இனி டோல்கேட்டில் நின்று கட்டணம் செலுத்த வேண்டிய அவசியம் இல்லை. மேலும், இந்த கார்களில் இருக்கும் ஆர்எஃப்ஐடி டேக் தானாகவே, சுங்க கட்டணத்தைச் செலுத்திவிடும்.

ஆர்எஃப்ஐடி டேக் இல்லாமல் இனி இந்த பகுதிக்குள் நுழையவே முடியாது... அதிரடி அறிவிப்பு!

இதற்கு, அந்த குறிப்பிட்ட டேக்கின் கணக்கில் செல்போனுக்கு ரீசார்ஜ் செய்வதுபோல், பணத்தை செலுத்திவிட வேண்டும். இது ஒவ்வொரு முறையும் சுங்கச்சாவடியை கடக்கும்போது தானாக பணத்தைச் செலுத்த உதவும்.

ஆர்எஃப்ஐடி டேக் இல்லாமல் இனி இந்த பகுதிக்குள் நுழையவே முடியாது... அதிரடி அறிவிப்பு!

முக்கியமாக, அதிக வாகனங்களின் போக்குவரத்தின் காரணமாக ஏற்படும் நெரிசலைக் குறைக்கும் விதமாக இந்த நடவடிக்கையில் டெல்லி அரசு இறங்கியுள்ளது. நாள் ஒன்றிற்கு டெல்லி நகரத்தின் சாலையை 50 லட்சத்திற்கும் மேற்பட்ட வணிக வாகனங்கள் கடக்கின்றன. இதனால், தினம்தோறும் டெல்லி சாலை நெரிசலில் சிக்கி தவிக்கின்றது.

ஆர்எஃப்ஐடி டேக் இல்லாமல் இனி இந்த பகுதிக்குள் நுழையவே முடியாது... அதிரடி அறிவிப்பு!

ஆகையால், டெல்லி அரசு இதனை கட்டுபடுத்தும் வகையில் ஆர்எஃப்ஐடி திட்டத்தை அறிமுகம் செய்தது. இதனை கடந்த ஜூலை மாதம் 15ம் தேதி அம்மாநிலத்தின் லெப்டினன்ட் கவர்னர் அனில் பய்ஜல் தொடங்கி வைத்தார்.

ஆர்எஃப்ஐடி டேக் இல்லாமல் இனி இந்த பகுதிக்குள் நுழையவே முடியாது... அதிரடி அறிவிப்பு!

மேலும், இந்த வாகனங்களை கண்கானிக்கும் வகையில், மாநிலத்தின் சுற்று வட்டாரப் பகுதி முழுவதுமாக 300 கேமிராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. மேலும், 13க்கும் மேற்பட்ட எல்லைப் பகுதியில் செக் போஸ்ட் அமைக்கப்பட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

ஆர்எஃப்ஐடி டேக் இல்லாமல் இனி இந்த பகுதிக்குள் நுழையவே முடியாது... அதிரடி அறிவிப்பு!

டெல்லி அரசின் இந்த துரித நடவடிக்கையால், மாநிலத்தில் தற்போது நிலவி வரும் போக்குவரத்து நெரிசல் மற்றும் மாசு உள்ளிட்ட பிரச்னைகளுக்கு கணிசமாக தீர்வு எட்டப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Without RFID Tags Trucks Cabs Not Allowed In Delhi. Read In Tamil.
Story first published: Saturday, August 24, 2019, 20:41 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X