உலகின் விலையுயர்ந்த கார் இது தான்..? எதற்கு இவ்வளவு விலையென இந்த அழகிய பெண் கூறுவதைக் கேளுங்கள்...!

உலகிலேயே அதிக விலைக்கொண்ட எஸ்யூவி மாடலாக இருக்கும் ரோல்ஸ் ராய்ஸின் குல்லினன் காரை, மேலும் அதன் மதிப்பைக் கூட்டும் வகையில், ஒரு சில கஸ்டமைசேஷனைச் செய்துள்ளார். இதனால், அந்த காரின் மேலும் பல கோடியைத் தொட்டுள்ளது. அவ்வாறு, அவர் என்னதான் செய்தார் என்பதை இந்த பதிவில் காணலாம்.

உலகின் விலையுயர்ந்த கார் இது தான்..? எதற்கு இவ்வளவு விலையென இந்த அழகிய பெண் கூறுவதைக் கேளுங்கள்...!

உலகிலேயே அதிக விலைக்கொண்ட எஸ்யூவி மாடல் காராக ரோல்ஸ் ராய்ஸின் குல்லினன் மாடல் சொகுசு கார் இருந்து வருகிறது. இந்த கார் லாம்போர்கினி உருஸ் மற்றும் பென்ட்லீ நிறுவனத்தின் பென்டேகா ஆகிய சொகுசு கார்களைக் காட்டிலும் மிகவும் விலை அதிகமானதாகும். இந்த காரின் விலைக்கேற்ப இதில் மதிப்புக்கூட்டப்பட்ட பல்வேறு சொகுசு வசதிகள் இடம்பெற்றுள்ளன.

உலகின் விலையுயர்ந்த கார் இது தான்..? எதற்கு இவ்வளவு விலையென இந்த அழகிய பெண் கூறுவதைக் கேளுங்கள்...!

இந்தியாவில் இந்த கார் ரூ. 6.95 கோடி என்ற எக்ஸ்-ஷோரூம் விலையில் விற்பனைக்குக் கிடைக்கிறது. இது இந்தியாவில் விற்பனையாகும் சொகுசு கார்களிலேயே அதிக விலையைக் கொண்டதாக இருக்கிறது. இந்த காரினை இந்தியாவில் அம்பானி உட்பட சிலர் மட்டுமே பயன்படுத்தி வருகின்றனர்.

அப்படி என்னதான் இருக்கு இந்த காரில்...? ஏன் இவ்வளவு விலை எனத் தானே கேட்கிறீர்கள். இதுகுறித்து விளக்கத்தான் இந்த பதிவு... ரோல்ஸ் ராய்ஸின் இந்த விலையுயர்ந்த கார் குறித்த தகவலை விளக்கும் வகையில் சூப்பர் பிளாண்டை எனப்படும் யுடியூப் தளம் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், குல்லினன் காரின் அனைத்து சிறப்பம்சங்களைப் பற்றியும் ஓர் அழகிய பெண்மணி, அவரின் இனிய குரல்களால் விளக்குகிறார்.

உலகின் விலையுயர்ந்த கார் இது தான்..? எதற்கு இவ்வளவு விலையென இந்த அழகிய பெண் கூறுவதைக் கேளுங்கள்...!

ஏற்கனவே அதிக விலையைக் கொண்டிருக்கும் இந்த குல்லினன் காரில், அதன் உரிமையாளர் மேலும் சில கஸ்டமைசேஷனைச் செய்துள்ளார். இதனால், அந்த காரின் மதிப்பு பன்மடங்கு உயர்ந்துள்ளது. அவ்வாறு, அவர் காருக்கு டக்ஸன் சன்-சேட் பெயிண்ட்டின் மூலம் வர்ணம் தீட்டியுள்ளார். இது காரின் லக்சூரி லுக்கை மேலும் ஒரு படி மேலே தூக்கிக் காட்டும் வகையில் உள்ளது.

READ MORE: புரட்சியை ஏற்படுத்த போதும் கேடிஎம்-இன் புதிய மாடல் பைக் இதுதான்...?

உலகின் விலையுயர்ந்த கார் இது தான்..? எதற்கு இவ்வளவு விலையென இந்த அழகிய பெண் கூறுவதைக் கேளுங்கள்...!

இதைத்தொடர்ந்து, அந்த காரின் இன்ட்ரீயரிலும் சில மாற்றங்களைச் செய்துள்ளார். அவ்வாறு, அவரின் உள்பகுதியில் ஸ்பெஷல் பிக்னிக் சீட்டுகளைப் பொருத்தியுள்ளார். மேலும், அதில் சிறிய ரக ப்ரீஸர் பாக்ஸ் இணைத்துள்ளார்

உலகின் விலையுயர்ந்த கார் இது தான்..? எதற்கு இவ்வளவு விலையென இந்த அழகிய பெண் கூறுவதைக் கேளுங்கள்...!

தண்ணீர் மற்றும் குளிர்பானம் உட்பட சிலவற்றை வைத்துக்கொள்ளும் வகையில் அது ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதேபோன்று, இந்த சிறிய ரக ப்ரீஸர் பாக்ஸின் தன்மையை, காரின் டெம்ப்ரேட்சர் நிலை எந்தவொரு மாற்றத்தையும் செய்யாத வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

உலகின் விலையுயர்ந்த கார் இது தான்..? எதற்கு இவ்வளவு விலையென இந்த அழகிய பெண் கூறுவதைக் கேளுங்கள்...!

இதையடுத்து காரில் பன்மடங்கு டிரைவிங் மோட்கள், பறவையின் கண் அமைப்புக் கொண்ட 360 டிகிரி கேமிரா, பின் இருக்கையில் மசாஜ் வசதி, ஸ்டார்ட்லிட் ரூஃப்லைன் மற்றும் செல்ஃப் லெவல்லிங்க சஸ்பென்ஷன் உள்ளிட்டவைப் பொருத்தப்பட்டுள்ளன. மேலும், இந்த அதிநவீன சொகுசு காருக்காக பிரத்யேக டயர்கள் இணைக்கப்பட்டுள்ளன.

உலகின் விலையுயர்ந்த கார் இது தான்..? எதற்கு இவ்வளவு விலையென இந்த அழகிய பெண் கூறுவதைக் கேளுங்கள்...!

மேலும், இந்த காரின் பின்பக்கம் அமர்ந்துக்கொண்டு இயற்கையை ரசிக்கும் வகையில் இரண்ட இருக்கைகள் பொருத்தப்பட்டுள்ளன. அதற்கிடையே குளிர்பானங்களைத் தாங்கும் வகையில் கூலிங் பேட் பொருத்தப்பட்டுள்ளது. இது பானங்களைக் குளிர்ச்சியாக வைக்க உதவும். அவை பூட்லிட்டின் டோரில் பொருத்தப்பட்டுள்ளது. இந்த எடைமிகுந்த டோரானது ஒரே ஒரு பட்டனை அழுத்துவதன்மூலம் தானாக மூடுதல் மற்றும் திறத்தலை வழங்கும்.

உலகின் விலையுயர்ந்த கார் இது தான்..? எதற்கு இவ்வளவு விலையென இந்த அழகிய பெண் கூறுவதைக் கேளுங்கள்...!

இதேபோன்று, காரின் கதவுகளை மூடிக்கொண்டால், வெளியே குண்டே வெடித்தாலும் உள்ளே சத்தம் கேட்காத வகையில் கதவுகள் உருவாக்கப்பட்டுள்ளன. இது, நீண்ட தூர பயணத்தின்போது, பயணிகள் நிம்மதியான ஒரு குட்டிஉரக்கத்தைப் போட உதவும்.

READ MORE: ராயல் என்ஃபீல்டு 650 மோட்டார்சைக்கிள்கள் வெயிட்டிங் பீரியட் குறைகிறது!

உலகின் விலையுயர்ந்த கார் இது தான்..? எதற்கு இவ்வளவு விலையென இந்த அழகிய பெண் கூறுவதைக் கேளுங்கள்...!

ரோல்ஸ் ராய்ஸின் இந்த குல்லினன் எஸ்யூவி மாடலில் 6.75 லிட்டர் வி12 பெட்ரோல் எஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது அதிகபட்சமாக 563 பிஎச்பி பவரையும், 850 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும். இந்த எஞ்ஜினில், 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது.

Most Read Articles

English summary
World’s Most Expensive Rolls Royce Cullinan.Read In Tamil.
Story first published: Monday, April 15, 2019, 13:19 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X