சென்னை-கோவை வெறும் 1.15 மணி நேரம்... உலகின் அதிவேக காரை அறிமுகம் செய்த இந்திய நிறுவனம்...

சென்னையில் இருந்து கோவைக்கு வெறும் 1.15 மணி நேரத்தில் செல்லும் வகையில், உலகின் அதிவேக காரை இந்திய நிறுவனம் ஒன்று அறிமுகம் செய்துள்ளது. இதனால் ஒட்டுமொத்த உலகமே பிரம்மித்து போயுள்ளது.

சென்னை-கோவை வெறும் 1.15 மணி நேரம்... உலகின் அதிவேக காரை அறிமுகம் செய்த இந்திய நிறுவனம்...

ஹை-பெர்ஃபார்மென்ஸ் (High-Performance) கார்கள் என்றால், சட்டென நம் அனைவரின் நினைவிற்கும் வருவது இத்தாலிதான். ஏனெனில் அதிக செயல்திறன் வாய்ந்த ஸ்போர்ட்ஸ், சூப்பர் கார்களை தயாரித்து வரும் ஃபெராரி மற்றும் லம்போர்கினி ஆகிய நிறுவனங்கள் இத்தாலியை சேர்ந்தவை.

சென்னை-கோவை வெறும் 1.15 மணி நேரம்... உலகின் அதிவேக காரை அறிமுகம் செய்த இந்திய நிறுவனம்...

இவை தவிர பிரான்ஸின் புகாட்டி, ஜெர்மனியின் போர்ஷே ஆகிய நிறுவனங்களும், ஹை-பெர்ஃபார்மென்ஸ் கார்களை உற்பத்தி செய்து வருகின்றன. ஆக்ஸலரேட்டரை மிதித்த உடன் அலுங்காமல், குலுங்காமல், மின்னல் வேகத்தில் பறந்து செல்லும் இந்த கார்களை ரசிக்காதவர்கள் எவரும் இருக்கவே முடியாது.

சென்னை-கோவை வெறும் 1.15 மணி நேரம்... உலகின் அதிவேக காரை அறிமுகம் செய்த இந்திய நிறுவனம்...

எனவே மேற்கண்ட நிறுவனங்களின் கார்களுக்கு, இந்தியாவிலும் ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர். இவர்கள் வேகத்தின் மீது தீராக்காதல் கொண்டவர்கள். ஆனால் மாருதி சுஸுகி ஆதிக்கம் செலுத்தும் இந்தியாவில், ஹை-பெர்ஃபார்மென்ஸ் கார்களை பார்ப்பது அரிதிலும் அரிது.

சென்னை-கோவை வெறும் 1.15 மணி நேரம்... உலகின் அதிவேக காரை அறிமுகம் செய்த இந்திய நிறுவனம்...

தற்போதைக்கு சென்னை, பெங்களூர், மும்பை உள்ளிட்ட பெரு நகரங்களில், மருந்துக்கு உலாவி வரும் ஓரிரு ஹை-பெர்ஃபார்மென்ஸ் கார்கள் மட்டும் நம்மை பரவசப்படுத்தி வருகின்றன. இங்கு இத்தகைய கார்களை கண்டு விட்டால், நம் அனைவரின் கவனமும் அதன் மீதே குவியும்.

சென்னை-கோவை வெறும் 1.15 மணி நேரம்... உலகின் அதிவேக காரை அறிமுகம் செய்த இந்திய நிறுவனம்...

ஃபெராரி, லம்போர்கினி போன்று ஒரு இந்திய நிறுவனமாவது தலையெடுத்து விடாதா? என ஏங்குபவர்கள் லட்சோப லட்சம் பேர். இப்படிப்பட்ட சூழலில், உலகின் மிக விரைவான சாலை கார் (World's Quickest Road Car) ஒன்றை, இந்திய குழுமம் உருவாக்கியிருக்கிறது என்றால் உங்களால் நம்ப முடிகிறதா?

சென்னை-கோவை வெறும் 1.15 மணி நேரம்... உலகின் அதிவேக காரை அறிமுகம் செய்த இந்திய நிறுவனம்...

உண்மைதான். இந்தியாவை சேர்ந்த ஆட்டோமொபைல் ஜாம்பவானான மஹிந்திரா குழுமம்தான் அது. ஃபெராரி, லம்போர்கினி நிறுவனங்கள் இயங்கி வரும் அதே இத்தாலியை சேர்ந்த ஆட்டோமொபைலி பினின்ஃபரீனா என்ற நிறுவனத்தை, கடந்த 2015ம் ஆண்டு, மஹிந்திரா குழுமம் கையகப்படுத்தியது.

சென்னை-கோவை வெறும் 1.15 மணி நேரம்... உலகின் அதிவேக காரை அறிமுகம் செய்த இந்திய நிறுவனம்...

இந்தியாவின் மஹிந்திரா நிறுவனத்தின் கீழ்தான், ஆட்டோமொபைலி பினின்ஃபரீனா செயல்பட்டு வருகிறது. இந்த சூழலில், தற்போது நடைபெற்று வரும் ஜெனிவா மோட்டார் ஷோவில், இவ்விரு நிறுவனங்களின் கூட்டணியில் உருவான ''பேட்டிஸ்டா'' என்ற கார் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

சென்னை-கோவை வெறும் 1.15 மணி நேரம்... உலகின் அதிவேக காரை அறிமுகம் செய்த இந்திய நிறுவனம்...

இது எலெக்ட்ரிக் ஹைப்பர் கார் என்பதும் பலரது புருவங்களை உயர்த்தியுள்ளது. இந்த வகையில் பார்த்தால், உலகில் உருவாக்கப்பட்ட அதிவிரைவான எலெக்ட்ரிக் கார் என்ற பெருமையையும் பேட்டிஸ்டா சேர்த்தே பெறுகிறது.

சென்னை-கோவை வெறும் 1.15 மணி நேரம்... உலகின் அதிவேக காரை அறிமுகம் செய்த இந்திய நிறுவனம்...

எலெக்ட்ரிக் கார்களின் செயல்திறன்கள் மீது சந்தேகம் கொள்பவர்களுக்கு பேட்டிஸ்டா பதில் சொல்கிறது. அவர்களின் வாயை அடைக்க பேட்டிஸ்டா உருவாக்கும் 1,900 பிஎச்பி பவர் போதுமானது!!! இது புகாட்டி சிரோன் காரை விட சக்தி வாய்ந்தது.

சென்னை-கோவை வெறும் 1.15 மணி நேரம்... உலகின் அதிவேக காரை அறிமுகம் செய்த இந்திய நிறுவனம்...

புகாட்டி சிரோன் 1,500க்கும் குறைவான பிஎச்பி பவரை மட்டுமே (1,479 பிஎச்பி) உருவாக்கும். பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 100 கிலோ மீட்டர்கள் என்ற வேகத்தை, பேட்டிஸ்டா கார் வெறும் 2 வினாடிகளுக்கு உள்ளாகவே எட்டிவிடும்!!!

சென்னை-கோவை வெறும் 1.15 மணி நேரம்... உலகின் அதிவேக காரை அறிமுகம் செய்த இந்திய நிறுவனம்...

பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 300 கிலோ மீட்டர்கள் என்ற வேகத்தை எட்ட பேட்டிஸ்டா காருக்கு வெறும் 12 வினாடிகள் போதுமானது. இதன் டாப் ஸ்பீடு மணிக்கு 400 கிலோ மீட்டர்களுக்கும் மேல். இந்த வேகத்தில் சென்றால், சென்னையில் இருந்து பெங்களூரை 1 மணி நேரத்திற்கு உள்ளாகவே அடைந்து விட முடியும்.

சென்னை-கோவை வெறும் 1.15 மணி நேரம்... உலகின் அதிவேக காரை அறிமுகம் செய்த இந்திய நிறுவனம்...

தமிழக தலைநகர் சென்னை மற்றும் கர்நாடக தலைநகர் பெங்களூர் இடையேயான தொலைவு சுமார் 350 கிலோ மீட்டர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இதுவே சென்னை-கோவை என்றால் சுமார் 1.15 மணி நேரம்தான். சென்னை-கோவை இடையேயான தொலைவு சுமார் 510 கிலோ மீட்டர்கள்.

சென்னை-கோவை வெறும் 1.15 மணி நேரம்... உலகின் அதிவேக காரை அறிமுகம் செய்த இந்திய நிறுவனம்...

வேகம் மட்டுமல்லாது ரேஞ்ச் விஷயத்திலும், பேட்டிஸ்டா எலெக்ட்ரிக் ஹைப்பர் கார் அனைவரையும் ஆச்சரியத்தில் மூழ்கடிக்கிறது. ஒரு முறை சார்ஜ் செய்தால் எவ்வளவு தூரம் பயணிக்க முடியும் என்பதே ''ரேஞ்ச்'' என குறிப்பிடப்படுகிறது.

சென்னை-கோவை வெறும் 1.15 மணி நேரம்... உலகின் அதிவேக காரை அறிமுகம் செய்த இந்திய நிறுவனம்...

இந்த வகையில், பேட்டிஸ்டா எலெக்ட்ரிக் ஹைப்பர் காரின் ரேஞ்ச் 450 கிலோ மீட்டர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆம், இதனை ஒரு முறை சார்ஜ் செய்தால் 450 கிலோ மீட்டர்கள் வரை தாராளமாக பயணம் செய்ய முடியும்.

சென்னை-கோவை வெறும் 1.15 மணி நேரம்... உலகின் அதிவேக காரை அறிமுகம் செய்த இந்திய நிறுவனம்...

எலெக்ட்ரிக் வாகன மார்க்கெட்டில் அமெரிக்காவின் டெஸ்லா நிறுவனம்தான் தற்போது ஆதிக்கம் செலுத்தி வருகிறது. பெர்ஃபார்மென்ஸ், ரேஞ்ச், பாதுகாப்பு என மூன்று அம்சங்களிலும் டெஸ்லாவின் எலெக்ட்ரிக் கார்கள் அசத்துகின்றன.

சென்னை-கோவை வெறும் 1.15 மணி நேரம்... உலகின் அதிவேக காரை அறிமுகம் செய்த இந்திய நிறுவனம்...

ஆனால் டெஸ்லா மற்றும் இதர எலெக்ட்ரிக் சூப்பர் கார்களுக்கு சவால் விடும் வகையில் பேட்டிஸ்டா உருவாக்கப்பட்டுள்ளது. இத்தாலியின் ஆட்டோமொபைலி பினின்ஃபரீனா தவிர தென் கொரியாவின் சாங்யாங் நிறுவனமும் இந்தியாவின் மஹிந்திரா நிறுவனத்தின் கீழ்தான் செயல்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Most Read Articles
English summary
World’s Quickest Road Car Battista Unveiled By Automobili Pininfarina In Geneva Motor Show. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X